உங்களுக்குதான் வாய்ப்பு! ஆனா நீங்க அட்ஜஸ்ட்மென்ட்னு இழுத்த நபர்! நய்ய புடைத்த ஈரமான ரோஜாவே மாமியார்
சென்னை: ஈரமான ரோஜாவே சீரியலில் நடிக்கும் மீனா வெமுரியிடம் அட்ஜெஸ்ட்மென்ட் பேசினால் என்ன நடக்கும் தெரியுமா.
ஈரமான ரோஜாவே சீரியல் பார்க்கிறீர்களா, அப்படின்னா அதில் மாமியார் பார்வதியாக நடித்து வரும் மீனா வெமுரியை உங்களுக்கு நன்றாகத் தெரியும். இவருக்கு நடுத்தர வயதுதான் ஆனாலும் இவருக்கு மூத்த கதாபாத்திரங்கள் கிடைக்கின்றன.

இவர் ஆந்திராவை சேர்ந்தவர் என்கிறார்கள். ஆனால் இவர் தமிழை சரளமாக பேசுகிறார். இவர் 1985 இல் பிறந்தவர். அதாவது 37 வயதாகிறது. இவர் அக்கவுன்டன்சி படித்தவர். இவர் ஒரு கப்பல் கம்பெனியில் பணியாற்றியவர்.
அப்போதுதான் இவருக்கு படவாய்ப்புகள் வந்தன. இவருக்கு டுமான்டி காலனி படம் வாய்ப்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து ரஜினி முருகன் படத்திலும் நடித்திருந்தார். ஹீரோயினாக வாய்ப்புகள் வந்த போதிலும் இவர் வேண்டாம் என மறுத்துவிட்டார். சின்னத்திரையில் நந்தினி சீரியல் மூலம் வந்தார்.
இவர் மீசை முறுக்கு படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது அங்கு குஷ்பு தயாரிப்பு யூனிட் இருந்ததாம். அந்த நேரத்திலேயே நாங்கள் நந்தினி சீரியல் எடுக்க போகிறோம். அதில் இந்த கேரக்டரில் நீங்கள்தான் செய்ய வேண்டும் என குஷ்பு சொல்லிவிட்டாராம். அதன் மூலம்தான் இவருக்கு சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்ததாம். இவர் இரட்டௌ ரோஜை சீரியலிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் மீனா வெமுரி ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: சீரியலில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. என்னை நிறைய பேர் திட்டுறாங்க . இதற்கு காரணம் என்னுடைய கேரக்டர். இந்த மாதிரி ஒரு மாமியார் கிடைத்தால் நன்றாக இருக்குமே என நினைக்கும் போது இப்படி மாறிட்டீங்களே என பலரும் கேட்கிறார்கள்.
நான் என்ன செய்றது, எல்லாமே டைரக்டர் முடிவு செய்வதுதானே என அவர்களிடம் நான் கூறுவேன். நிஜத்தில் எனது மாமியார் குழந்தை மாதிரி. ஈரமான ரோஜாவே செட்டில் ஜாலியாக இருக்கும். எல்லாரும் என்னை வைத்து ஓட்டுவார்கள். நானும் எல்லாத்தையும் ஜாலியாகவே எடுத்துக்குவேன். சில நேரங்களில் ஷூட்டிங் தேதியை திடீரென ரத்து செய்துவிட்டு வேறு தேதியில் வைப்பார்கள்.
அந்த தேதியில் நாம் வேறு திட்டம் வைத்திருக்கும் போது அது பாதிக்கப்படுவதால் கோபம் வருமே தவிர மற்ற நேரங்களில் எனக்கு கோபமே வராது. துறை ரீதியாக நான் கஷ்டப்படவே இல்லை. மீடியாவுக்குள் வந்த பிறகுதான் எப்போ இயல்பா இருக்க வேண்டும். எப்போது பதில் தர வேண்டும் என்பதெல்லாம் புரிந்தது.
என் உடல் மொழியை வைத்தே மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள், இதனால் நான் மற்ற நடிகைகளுக்கு இருக்கும் சிரமங்களை எதிர்கொள்வதற்கு முன்பே நான் ஃபுல்ஸ்டாப் வைத்துவிடுவேன். அதனால் எனக்கு பிரச்சினை ஏதும் இல்லை. என்னை யாருமே அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி கேட்டதில்லை. ஆனால் தொலைபேசியில் சில அழைப்புகள் வரும்.
மேடம் அந்த படத்தில் உங்களுக்குத்தான் வாய்ப்பு... ஆனால்... என இழுப்பார்கள். அப்போது நான் சொல்லிவிடுவேன், அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு என்னை கூப்பிடாதீங்கன்னு! இல்லை மேடம் நான் அதை சொல்லலையே என சமாளிப்பார்கள். அவர்கள் சொல்லும் தொனி அட்ஜஸ்ட்மென்ட்டையே குறிக்கும். ஆனாலும் இல்லை என பூசி மெழுகுவார்கள். அதன் பின்னர் அந்த நபர் எனக்கு போனே செய்ய மாட்டார்.

ஒரு நாள் வீட்டிலிருந்து காரை எடுத்துக் கொண்டு வெளியே வந்த போது என்னை ஒருவர் பாலோ செய்தார். பின்னர் என் கார் அருகே வந்து நான் வெளியே வர முடியாத அளவுக்கு காரை நிறுத்தினார். நான் கத்தி கூச்சல் போட்டதும் தெருவில் சென்றவர்கள் வந்து சொல்லி அவனை அங்கிருந்து அனுப்பிவிட்டனர். வண்டியை நகர்த்தியதும் இறங்கி அவனை அடித்தேன்.
காலையில் 7 மணிக்கு ஷூட்டிங்னு சொல்வாங்க. ஒரு நாள் முழுக்க ஷூட் இல்லாமல் உட்கார வச்சுடுவாங்க. அதிகபட்சம் ஒரு மணி நேரம் தூங்கலாம். அதற்கு மேல் உட்கார்ந்திருக்கத்தான் முடியும். இரவு 8 மணிக்கு கூப்பிட்டு ஒரு ஷாட் எடுப்பாங்க, அந்த ஷூட் முடிந்தாலும் அனுப்ப மாட்டார்கள். நான் உடனே உங்களுக்கு மனசாட்சியே இல்லையா என உதவி இயக்குநர்களிடம் கேட்பேன். இவ்வாறு மீனா வெமுரி பேட்டியில் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications