Eeramana Rojave Serial: சொல்லாமத்தானே இந்த மனசு தவிக்குது!
சென்னை: விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் மலருக்கு வெற்றி மேல் காதல் இருந்தாலும், அதை அவனிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறாள். இதே மாதிரி வெற்றியும் மலர் மீது காதல் இருந்தாலும் அதை அவளிடம் சொல்லாமல் தவிக்கிறான்.
மலர் வெற்றி ரெண்டு பேரும் கணவன் மனைவிதான் என்றாலும், இவர்களுக்குள் கடந்த ஒரு வருடமாகவே இடைவெளிதான் இருந்து வருகிறது. வெற்றியின் அண்ணன் மாறனை காதலித்தவள்தான் மலர்.
மாறன் திருமணத்துக்கு முதல் நாள் இரவு பைக்கில் போகும் போது, லாரியில் இடித்து இறந்து விட, பெரியவர்கள், உடனடியாக மலரை, மாறனின் தம்பி வெற்றிக்கு கல்யாணம் செய்து வச்சுடறாங்க.

மாற்று கல்யாணம்
மாறனுடன் நடக்க இருந்த கல்யாணம், அவன் இறந்த பிறகு மாற்று கல்யாணமாகி, அவனது தம்பி வெற்றியுடன் நடந்து விடுகிறது. இருவருக்குள்ளும் மனதில் ஏகப்பட்ட காயம். இதற்கு நடுவில் மலரை கல்யாணம் பேசியதால்தான் தனது மகன் மாறன் இறந்துட்டான்னு மாமியார், நாத்தனார் அவ்வப்போது கடிந்து கடிந்து பேசி மலரின் மனதை நோகடிக்கறாங்க. இதில் மலர் நொந்து போய் இருக்கும் போதுதான், வெற்றி அவளுக்கு ஆதரவாக பேசி, அவளின் மனசில் இடம் பிடிக்கிறான்.

மலர் வெற்றி
வெற்றியின் மனதிலும் மலரின் மீது காதல் துளிர் விடுகிறது.இருவருமே இப்படி ஒருவருக்கு ஒருவர் தங்கள் காதலை சொல்லிக் கொள்ளாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஒரே வீட்டில் ஓர் படுக்கை அறையில் படுத்தும் இப்படி விலகி இருப்பது இருவருக்குள்ளும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் வாயைத் திறந்து சொல்லிக் கொண்டால்தானே...

வருட நினைவு நாள்
மாறன் இறந்து ஒரு வருடம் ஆகின நிலையில், வீட்டில் எல்லாரும் படு அப்செட்டில் இருக்கிறார்கள். அம்மாவை சமாதானப் படுத்த முடியவில்லை. ஒரு வழியாக சமாதானப் படுத்தி, சாப்பிட வச்சுட்டு மலரையும் சாப்பிட அழைக்கிறான். மலர் மாறனின் சமாதியின் என்னை வெற்றியுடன் வாழ வை மாறான்னு கண்ணீர் விட்டு கதறி அழுகிறாள் அதை வெற்றி காதில் வாங்கினானா என்பது கூட தெரியவில்லை.

மலரிடம் பெரியவர்கள்
வெற்றியின் அப்பா, சித்தப்பா, தாத்தா எல்லாரும் வந்து மலரிடம் பேசணும்னு சொல்றாங்க. உள்ளே வாங்கன்னு சொல்ல, அப்போது மலர் மட்டும் தனியாக ரூமில் இருக்கிறாள். வந்தவர்கள் இதுவரைக்கும் ஒண்ணும் பேசக்கூடாதுன்னு இருந்தோம். ஆனால், இனிமேல் அப்படி விடக் கூடாதுன்னுதான் வந்து பேசறோம்மா. எந்த வாழ்க்கை உனக்கு வாய்ச்சு இருக்குதோ அதை ஏத்துக்கிட்டு வாழக்கையை துவங்கி சந்தோஷமா வாழுங்க.இதை வெற்றிகிட்ட சொல்ல முடியாது. உன்கிட்டத்தான் சொல்லணும்னு வந்தோம்னு போறாங்க.
நான் எப்பவோ வெற்றி கூட வாழ தயாரா இருக்கேன்.வெற்றி மனசு மட்டும் மாறணும்னு நினைக்கும் மலர் இதையும் மனசுக்குள்தான் சொல்லிக்கறா. வாயுள்ளப் பிள்ளைதான் பிழைக்கும், அழற பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும்!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications