Eeramana Rojave Serial: மாமியாரா மருமகளா? யாரை நான் குத்தம் சொல்ல?
சென்னை: விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் கிராமத்து மக்களின் யதார்த்தமான வாழ்க்கையை காண்பிப்பதாக இருந்தாலும் முக்கியமாக மாமியார் கொடுமை, வரதட்சணை கொடுமை என்று கதை நகர்கிறது.
நாளைக்கு கல்யாணம், இன்னிக்கு மாப்பிள்ளை விபத்தில் பலி என்றால், பிள்ளையை பறிகொடுத்த மாமியாருக்கு வழக்கமாக மருமகள் ராசி இல்லாதவள் என்பது போல தோன்றும்.
நிலைமை இப்படி இருக்கையில், அதே வீட்டின் அதே தாயின் இன்னொரு பிள்ளைக்கு அதே பெண்ணை எடுப்பது என்பது பெரும்பாலான தாய்மார்களுக்கு உறுத்தலாகத்தானே இருக்கும்.

முற்றிலும் கோணல்
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல, முதல் பிள்ளையை கல்யாணத்துக்கு முதல் நாள் இரவு விபத்தில் பலி கொடுத்துவிட்டு, அதே பெண்ணை அதே நாளில் மருமகளாக்கிக் கொண்டால் பார்க்க பார்க்க ஆத்திரம் வருகிறது மாமியாருக்கு. பிள்ளையைப் பறிகொடுத்த தாய்க்கு மன நிலை மாற சிறிது காலம் ஆகும்தான்.அதனால்,தனது இரண்டாவது மகனுக்கு பொண்டாட்டியாக வந்த மலரை மாமியாருக்கு பிடிக்கலை.

வருஷம் ஒன்று
மலருக்கும், வெற்றிக்கும் கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகியும், மாமியார் மன நிலை மாறவில்லை. இதற்கிடையில், இவங்க மூன்றாவது மகன் புகழுக்கும், பிடிக்காத மருமகளின் தங்கை அகிலாவே பொண்டாட்டியாக வர தாயின் கோபம் உச்சத்துக்கு போகிறது.இப்போது சீர் செனத்தி விஷயத்தை கையில் எடுத்துக்கறாங்க. அதோடு, கடனாக வேறு சம்பந்திக்கு தனது வீட்டு ஆண்கள் தனக்கு தெரியாமல் கொடுத்து இருப்பது தெரிய வருகிறது.

ஏமாற்றியது சரியா?
சம்பந்தி வீட்டுக்கு வீட்டிலிருக்கும் மனைவிக்கு தெரியாமல் இருபது லட்சம் ரூபாய் பணம் கொடுத்தது என்று செய்வதும் தவறுதானே..அந்த பெண்ணின் கோணத்தில் பார்த்தால் இதுவும் தவறான விஷயமாக தெரிகிறது. இப்படி எல்லா விதத்திலும் அந்த பெண்ணுக்கு சாதகமாக விஷயம் இருப்பதால், மாமியார் கெட்டவர் என்று சித்தரித்தாலும் அவர் பக்கம் உள்ள நியாயமும் புரிகிறது.

மகன்கள் மருமகள்கள்
இந்த விஷயங்களால், மாமியார் மருமகள்களை வாழா வெட்டியாக வீட்டுக்கு அனுப்பி வச்சுடறாங்க. பணம், நகையோடு வந்தால் வீட்டில் வாழலாம் என்றும் சொல்லி விட, பெற்ற பிள்ளை சும்மா இருக்காமல் மாமனார் வீட்டுக்கே போயி, அவங்களோடு பேசிவிட்டு வந்தது அம்மாவுக்கு தெரிந்துவிடுகிறது. அப்புறம் என்ன, மருமகள் மலருக்கு போன் செய்து கன்னாபின்னாவென்று திட்டுகிறார்கள்.
உன் குத்தமா என் குத்தமா என்று இதில் யாரை குத்தம் சொல்ல?
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications