விஜய் டிவியில் அடுத்தடுத்து முடிவுக்கு வரும் இரண்டு சீரியல்கள்.. அதுவும் அந்த டாப் சீரியலும் தான்
சென்னை: விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருக்கும் இரண்டு சீரியல்கள் தற்போது அடுத்தடுத்து முடிவுக்கு வர இருக்கிறது.
அந்த வகையில் இரண்டு சீரியல்களின் கடைசி நாள் சூட்டிங் முடிவடைந்து இருப்பதாக சில புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அது பற்றி எந்தெந்த சீரியல்கள் என்பதை பார்க்கலாம்.

ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வர இருக்கும் நிலையில் இப்போது அதைத் தொடர்ந்து தென்றல் வந்து என்னை தொடும் சீரியலும் முடிவுக்கு வர இருக்கிறது.
அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டதிலிருந்து அடுத்தடுத்து சில சீரியல்கள் முடிவுக்கு வருகிறது. அதே நேரத்தில் ஒரு சில சீரியல்கள் அதிரடியாக நேர மாற்றமும் செய்யப்பட்டிருந்தது. இந்த வகையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் டிவியில் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது இதில் எதிர்பாக்காத வகையில் தற்போது இந்த வாரத்திற்கு அண்ணன் பிரமோவும் வெளியாகி இருக்கிறது.
தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் கடந்த வாரம் ராதா மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அதை பார்த்த வெற்றி, ராதாவை கொலை செய்தது பரமு தான் என்று நினைத்துக் கொண்டிருக்க, அதே நேரத்தில் பரமு, ராதாவை கொலை செய்த விட்டான் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் கடைசியில் ராதாவை கொலை செய்தது கண்மணி தான் என்பது இன்றைய ப்ரமோவில் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் இந்த சீரியலில் பரமுவாக நடிக்கும் நடிகர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை தானே துப்பாக்கியால் சுடுவது போன்று போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். கூடவே அதற்கு கீழே தென்றல் வந்து என்னை தொடும் முடிவடைந்தது சென்னையில் என்பது போன்று குறிப்புகளும் வெளியிட்டிருக்கிறார். இதனால் இவர் நடித்து வரும் காட்சிகள் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை கூறியிருக்கிறார்.
அதே நேரத்தில் இந்த சீரியல் ஆரம்பிப்பதற்கு முன்பே தாலி சென்டிமென்டால் பெரும் சர்ச்சையோடு தொடங்கப்பட்ட தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் இப்போது முடிவுக்கு வருவது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே வெற்றிக்கு தன்னுடைய குழந்தையை பற்றி தெரிய வந்துவிட்டது. ஆனால் வெற்றிக்கு உண்மை தெரியும் என்பது மட்டும்தான் அபிக்கு தெரியவில்லை. இந்த நிலையில் இனி கடைசியில் அதையும் தெரிய வைத்ததும் வெற்றி வாழ்க்கையில் நடந்த பல பிரச்சனைகளுக்கு காரணம் கண்மணி தான் என்பதும் தெரிய வந்ததும் சீரியல் முடிவுக்கு வந்துவிடும்.
ஆனாலும் இன்னும் ஒரு சில எபிசோடுகளுக்கான சூட்டிங் இருக்கிறது என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த சீரியல் இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவுக்கு வர இருக்கிறது. ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர் சீரியல் இந்த வாரத்தோடு முடிவுக்கு வர இருக்கும் நிலையில் இப்போது தென்றல் வந்து என்னை தொடும் சீரியலும் அதைத் தொடர்ந்து முடிவுக்கு வர இருக்கிறது.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications