எதிர்நீச்சல்: திருச்செந்தூரில் குணசேகரன்.. பத்து நாள் டைம்.. அப்பத்தாவின் திடீர் மாற்றம்..!
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் வீட்டை விட்டு கடிதம் எழுதி வைத்துவிட்டு கோபத்தில் கிளம்பி இருப்பது போன்று காட்சிகள் அமைத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இதுவரைக்கும் குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து காலமானதால் அவருடைய கேரக்டரும் இறந்து போனது போன்று காட்சிகள் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

நேற்றைய எபிசோடில் ஜோதிடர் விசாலாட்சி இடம் குணசேகரன் இங்கிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தெய்வீக இடத்தில் மன குழப்பத்தோடு இருக்கிறார் என்று கூறுகிறார்.
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து திடீரென மாரடைப்பு காரணமாக மரணமடைந்த பிறகு அவருடைய கேரக்டரில் வேறு யாரும் நடித்தால் சீரியல் நன்றாக இருக்காது. காரணம் ஆரம்பத்தில் இருந்து குணசேகரனாக மாரிமுத்துவை பார்த்து வந்த ரசிகர்கள் வேறு யாரையும் எங்களால் அந்த மாதிரி பார்க்க முடியாது என்று கருத்து தெரிவித்தனர்.
அதன் அடிப்படையிலேயே சீரியலில் சில மாற்றங்களும் நடந்தது. ஒரு சில நாட்களாக மாரிமுத்து ஏற்கனவே நடித்து வைத்த காட்சிகள் வைத்து சீரியலில் கதைகளை நகர்த்திக் கொண்டு வந்தனர். அதைத் தொடர்ந்து ஈஸ்வரி மற்றும் தர்ஷன், தர்ஷினி குணசேகரனை பற்றி பேசியதால் குணசேகரன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு கிளம்பி போனது போன்று கதையை நகர்த்திக் கொண்டு போயிருக்கின்றனர். அதே நேரத்தில் இத்தனை நாட்களும் தனக்கு சொத்து முக்கியம் என்று சொல்லிக் கொண்டிருந்த குணசேகரன் தன்னுடைய சொத்துக்களை தன்னுடைய தம்பிகள் பெயருக்கு மாற்றி எழுதி வைத்துவிட்டு போயிருக்கிறார் என்பது போன்று கதை நகர்ந்து வருகிறது.
அதே நேரத்தில் நேற்றைய எபிசோடில் ஜோதிடர், குணசேகரன் மன குழப்பத்தில் வீட்டை விட்டு கிளம்பிய நிலையில் இங்கிருந்து 150 முதல் 160 கிலோமீட்டருக்குள் தான் மறைந்து வாழ்ந்து வருகிறார். அதுவும் ஒரு புண்ணிய ஸ்தலத்தில் இருக்கிறார். திருச்செந்தூர் போன்ற பகுதியில் குணசேகரன் இருக்கலாம் என்று கூறினார். அதோடு அவருக்கு ஒரு ஆபத்தும் காத்திருக்கிறது.
அது குணசேகரன் உயிருக்கு பிரச்சனையாக கூட அமையலாம் என்று கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து வீட்டில் நேற்று எபிசோடில் அப்பத்தா குணசேகரன் எழுதி வைத்த கடிதத்தை படித்துவிட்டு இதற்கு முன்பு குணசேகரன் வீட்டை விட்டு போனது போன்று இந்த முறை போகவில்லை. வீட்டை விட்டு போன குணசேகரன் இனி வரும் போது பயங்கரமானவனாக வருவான். முன்பு இருந்ததை விடவும் பல மடங்கு வில்லத்தனத்தோடு வருவான் என்று பெரிய அளவில் பில்டப் கொடுத்து இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் ஜனனியை சீக்கிரமாக கம்பெனியை தொடங்க சொல்லியும் அப்பத்தா கூறுகிறார். அப்படி என்றால் ஜனனி கம்பெனி தொடங்கும் நேரத்தில் புது குணசேகரனோ? அல்லது குணசேகரனின் அண்ணன்? வந்து பிரச்சனை செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் எபிசோடில் ஜான்சி ராணி வீட்டுப் பெண்களை மிரட்டி கொண்டு இருந்தார். ஆனால் அப்போதும் அப்பத்தா எதுவுமே சொல்லவில்லை.
இதற்கு முன்பு குணசேகரனிடம் கூட இது என்னுடைய வீடு இந்த வீட்டில் அதிகமான ஷேர் எனக்கு இருக்கிறது என்று பிரச்சனை செய்த அப்பத்தா நேற்று ஜான்சி ராணி வீட்டு பெண்களை இனி நான் மிரட்டுவேன் என்பது போன்று திமிராக பேசிக் கொண்டிருந்தார். ஆனால் அப்போதும் அப்பத்தா எதுவுமே பேசாமல் இருக்கிறார். இந்த நிலையில் இனி என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications