பெண்கள் பற்றி கருத்து கூறிய எதிர்நீச்சல் குணசேகரன்..கலாய்க்கும் நெட்டிசன்கள்..பிரச்சனை தொடங்கிடுச்சி

திருமணத்தின் போது பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என நடிகர் மாரிமுத்து பேசிய வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து அவரை கலாய்த்து வருகிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தொடர்ந்து சமூக வலைதளத்தில் பல பேட்டிகளை நடிகர் மாரிமுத்து கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் ஒரு வீடியோவில் பெண்கள் திருமணத்தின் போது தலையை குனிந்து தான் தாலியை வாங்க வேண்டும். திருமணத்தன்று பெண்கள் டான்ஸ் ஆட கூடாது என்று பல்வேறு கருத்துக்களை கூறியிருக்கிறார். தற்போது அதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

எதிர்நீச்சல் குணசேகரன்

எதிர்நீச்சல் குணசேகரன்

திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் மாரிமுத்து முதல்முறையாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகம் ஆகி இருக்கிறார். இந்த சீரியலில் இவர்தான் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். வில்லனாக இருந்தாலும் அதிகமாக பேசப்படும் கேரக்டராக குணசேகரன் இருந்து வருகிறார். குணசேகரனை திட்டி தீர்க்காத ரசிகர்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அவருக்கு எதிராக அதிகமான ரசிகர்கள் உருவாகி வரும் நிலையில், அவருடைய கேரக்டரும் சரியாகத்தானே இருக்கிறது. இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவரை இன்னொரு பக்கம் பலரும் ரசிக்கவும் செய்கிறார்கள்.

முற்போக்கு சிந்தனை

முற்போக்கு சிந்தனை

எதிர்நீச்சல் சீரியலில் நடிகர் மாரிமுத்து குணசேகரன் கேரக்டரில் பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பெண்களை சமையல் கட்டுக்குள் அடக்கி வைக்கும் ஒரு நபராக நடித்து வருகிறார். ஆனால் நிஜ வாழ்க்கையில் நான் அப்படியெல்லாம் இல்லை. நான் மிகவும் முற்போக்கானவர் என்று அடிக்கடி கூறிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய மகன் மற்றும் மகளுக்கு சாதி மறுப்பு திருமணம் தான் செய்யப் போகிறேன் என்றும் நான் எந்த கடவுளையும் கும்பிட மாட்டேன் என்றும் பல முறை நடிகர் மாரிமுத்து கூறிக் கொண்டிருக்கிறார்.

அடுத்த பிரச்சனை

அடுத்த பிரச்சனை

இந்த நிலையில் சமீபகாலமாகவே அவரை பற்றி பல பிரச்சனைகள் சுற்றிக் கொண்டிருக்கிறது. எதற்கும் கறாராக வெளிப்படையாக பேசி விடும் மாரிமுத்துவின் ட்விட்டர் பதிவு சில வாரங்களாக பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் தற்போது அவருடைய பேட்டியும் சமூக வலைத்தளத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வீடியோவில் பெண்கள் திருமணத்தின் போது தலையை குனிந்து தாலியை வாங்கினால் தான் அது அழகு. இப்ப இருக்கிற கலாச்சாரத்தின் படி பெண்கள் திருமணது அன்று ஆட்டம் போடக்கூடாது. அதற்கு முந்தின நாள் ஆட்டம் போடுங்க, இல்லன்னா அதுக்கு அடுத்த நாள் போடுங்க. அது என்ன திருமணத்தின் அன்று டான்ஸ் ஆடுவது? என்று தெரியவில்லை என்று கூறி இருக்கிறார்இருக்கிறார்.

வலம் வரும் ட்ரோல்ஸ் வீடியோ

வலம் வரும் ட்ரோல்ஸ் வீடியோ

அதுமட்டுமல்லாமல் ஆண் முன்னாடி நடந்து போகும்போது அவருடைய மனைவி ஒரு அடி பின்னாடி நடந்து சென்றால் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். அதுதான் பாரம்பரியம் என்று கூறி இருக்கிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளத்தில் கலாய்த்து வருகிறார்கள். நான் முற்போக்குவாதி என்று பேசிக் கொண்டிருக்கும் மாரிமுத்து இன்னும் பிற்போக்காக தான் இருந்து வருகிறார். அவருடைய
மனதில் இருப்பது தான் கருத்தாக வெளியே வருகிறது. இந்த மாதிரி பிற்போக்காக இருந்து கொண்டு நான் முற்போக்குவாதி என்று மார்தட்டிக் கொள்வதால் எந்த பயனும் இல்லை என்று பலர் ட்ரோல் செய்து கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+