தர்ஷினியை கண்டுபிடித்த போலீஸ்.. ஆனால் குணசேகரனுக்கு கிடைத்த அதிர்ச்சி.. நந்தினி சொன்னது நடந்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் மார்ச் 13ஆம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் காட்டுக்குள் ஜீவானந்தத்தோடு இருந்த தர்ஷினியை போலீஸ் கண்டுபிடித்து மருத்துவமனையில் சேர்த்து இருக்கின்றனர். அதே நேரத்தில் தர்ஷினியை பார்ப்பதற்காக குணசேகரன் ஹாஸ்பிடலுக்கு ஓடி வந்திருக்கிறார்.

இந்த நிலையில் காட்டுக்குள் ஆபத்தான நிலையில் ஜீவானந்தம் தவித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் வீட்டிற்குள் நந்தினி சொன்ன வார்த்தை இப்போது பழித்திருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்

Ethirneechal Serial 13th march 2024 promo and episode full update

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் பல வாரங்களாகவே தர்ஷினி காணாமல் போன காட்சிகள் தான் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. தர்ஷினியை யாரு காப்பாற்றுவார்கள் என்று ஆரம்பத்தில் எதிர்பார்த்து இருந்த நிலையில் இப்போது தர்ஷினியை அடியாள்களிடமிருந்து ஜீவானந்தம் காப்பாற்றி இருந்தார். ஆனாலும் ஜீவானந்தம் போலீசிலிருந்து தப்பித்து வந்திருப்பதால் அவரை சுட்டு பிடிக்க வேண்டும் என்று போலீஸ் சூட்டிங் ஆர்டர் வாங்கி இருக்கின்றனர்.

அதே நேரத்தில் அடியாள்களும் ஜீவானந்தத்தை சுட்டு கொன்று விட வேண்டும் என்று சுற்றிக் கொண்டிருந்த நிலையில் நேற்றைய எபிசோடில் ஜீவானந்தத்தை துப்பாக்கியால் ரவுடி சுட்டு இருக்கிறார். இப்படியான நிலையில் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஜீவானந்தத்தை தேடி காட்டுக்குள் போன கொற்றவை ஐபிஎஸ் அணியினர் தர்ஷினியை கண்டுபிடித்து அவரை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வந்திருக்கின்றனர்.

ஆனால் ஜீவானந்தம் தப்பித்து போய்விட்டார் என்று சொல்லி இருக்கின்றனர். ஜீவானந்தம் அந்த ஆற்றங்கரையில் ஒரு பாறையில் தான் விழுந்து கிடக்கிறார். அதே நேரத்தில் தர்ஷினி கண்டுபிடிக்கப்பட்ட விஷயம் குணசேகரனுக்கு தெரிய வந்ததும் மொத்த குடும்பத்திற்கும் தெரிகிற மாதிரி என்னுடைய பொண்ணு கண்டுபிடிச்சாச்சா? என்னது அவ ஹாஸ்பிடலில் இருக்கிறாளா? என்று அதிர்ச்சியான மாதிரி நடித்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு ஓடி வருகிறார்.

அங்கு வந்து என் பொண்ணு எங்க? அந்த ஜீவானந்தத்தை எங்க என்று கேட்க அதற்கு கொற்றவை ஐபிஎஸ் அவர் காணாமல் போய்விட்டார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே நேற்றைய எபிசோடில் சண்டை போட்டு பிரிந்து இருந்த நந்தினி மற்றும் ரேணுகா மீண்டும் சேர்ந்து இருக்கின்றனர். அதே நேரத்தில் நந்தினி எனக்கு மனதிற்குள் ஒன்று தோன்றினால் அது கண்டிப்பாக நடக்கும் அந்த வகையில் இன்று சாயங்காலத்திற்குள் தர்ஷினி வீட்டுக்கு வந்து விடுவா...

Ethirneechal Serial 13th march 2024 promo and episode full update

அதுபோல ஈஸ்வரி அக்காவும் வீட்டுக்கு வந்து விடுவாங்க என்று சொல்லி இருந்தார். இப்போது நந்தினி சொன்னது போல தர்ஷினி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் அடுத்ததாக ஈஸ்வரியும் ஜாமினில் இருந்து வெளியே வந்து வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஜீவானந்தம் நிலைமை என்ன என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அதே நேரத்தில் காட்டுக்குள் குரங்கு குருவிகள் கத்தினால் கூட அலறி ஆர்ப்பாட்டம் செய்த தர்ஷினி இன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில் எந்த மாதிரி ரியாக்ட் செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

ஏற்கனவே ஜீவானந்தம் தர்ஷினிக்கு கொடுத்த தைரியத்தின் காரணமாக மீண்டும் பழைய தர்ஷினியாக மாற போகிறாரா? அல்லது பயத்தால் தன்னை கடத்தியது குணசேகரன் தான் என்பதை சொல்லாமல் மறைத்து வைக்கப் போகிறாரா என்று கேள்விகளும் வருகிறது. அதுபோல தன்னை கடத்தி சித்திரவதை செய்ய சொன்னது தன்னுடைய அப்பா குணசேகரன் தான் ஆனால் அவரிடம் இருந்து காப்பாற்றியது தான் ஜீவானந்தம் என்ற உண்மையை தர்ஷினி சொல்லப் போகிறாரா? அல்லது இந்த முறையும் குணசேகரன் தான் ஜெயிக்கப் போகிறாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+