எதிர்நீச்சல்: ஜீவானந்தம் மனைவியை கொலை செய்ததை ஒத்துக்கொள்ளும் கதிர்? மாட்டப் போகும் குணசேகரன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பிப்ரவரி 15ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கோர்ட்டில் வைத்து குணசேகரனிடம் கதிர் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் எதிர்நீச்சல் பெண்களுக்கு ஆதரவாக சாருலதா வழக்கறிஞராக ஆஜராகி இருக்கிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளத்தில் சில புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அதில் குணசேகரனுக்கு எதிராக தன்னுடைய அண்ணனுக்காக ஜீவானந்தத்தின் மனைவியை கொலை செய்தது நான் தான் என்று கதிர் உண்மையை கோர்ட்டில் சொல்லி ஜெயிலுக்கு போகப் போகிறார் என்று கூறப்படுகிறது‌. அது பற்றியும் விரிவாக பார்க்கலாம்.

Ethirneechal Serial 15th february 2024 promo full update

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் கதையில் பெரிய அளவில் திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இது ஒரு பக்கம் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தாலும் மறுபக்கம் அதிருப்தியை தான் ஏற்படுத்தி இருக்கிறது என்று சொல்ல வேண்டும். காரணம் காணாமல் போன தர்ஷினியை தேடுவதை விட்டுவிட்டு எதிர்நீச்சல் பெண்களை ஜெயிலுக்குள் போட்டு பாடாய்படுத்தி எடுத்து வருவதை பார்க்க முடிகிறது.

ஆரம்பத்திலிருந்து இந்த சீரியலில் குணசேகரன் தான் ஒவ்வொரு இடத்திலும் ஜெயித்து வருகிறார். அது போலவே இந்த நேரத்திலும் நடந்து வருவது ரசிகர்களை உச்சகட்ட கோபத்திற்கு ஆழ்த்தி இருக்கிறது. காரணம் இந்த முறையாவது குணசேகரனை எதிர்நீச்சல் பெண்கள் ஜெயித்து விடுவார்கள் என்று ரசிகர்கள் நம்பி இருந்தனர். ஆனால் ரசிகர்களின் நம்பிக்கை வழக்கம்போல இந்த முறையும் ஏமாற்றப்பட்டு இருக்கிறது.

எதிர்நீச்சல் பெண்கள் இத்தனை நாட்களாக புடவையில் இருந்து வந்தனர் ஆனால் இப்போது சுடிதாரில் மாறி இருக்கும் நிலையில் தர்ஷினியை காப்பாற்றும் போது அங்கு சண்டை ஏற்படும் அதற்காகத்தான் இந்த பெண்கள் சுடிதாருக்கு மாறி இருக்கிறார்கள் என்று ரசிகர்கள் நினைத்திருந்தனர் ஆனால் இவர்கள் சுடிதார் போட்டிருப்பது போலீஸ் ஸ்டேஷனில் அடி வாங்குவதற்கு என்று இப்போது தெரிகிறது.

Ethirneechal Serial 15th february 2024 promo full update

ஆனால் இந்த சீரியலில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் கதிர் மற்றும் ஞானம் இருவரும் தங்களுடைய மனைவிமார்களை புரிந்து அண்ணனை எதிர்க்க தொடங்கி இருக்கின்றனர். ஆனால் அதையே பல நாட்களாக இழுத்துக் கொண்டு இருப்பது மற்ற சீரியல்களைப் போலவே இந்த சீரியலும் மாறிக்கொண்டிருக்கிறது என்பதை காட்டுகிறது.

இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் குணசேகரன் ஊர்க்காரர்கள் சிலரோடு கோர்ட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது சக்தி அந்த நபர்களிடம் அண்ணன் தம்பிக்குள் இருக்கும் பிரச்சனைய பெருசாக்க வரீங்களா? என்று கேட்க அதற்கு குணசேகரன் யார் அண்ணன் தம்பி என்று கேட்கிறார். அதை தொடர்ந்து எதிர்நீச்சல் பெண்கள் எல்லோரும் கோர்ட்டுக்கு வேனில் கூட்டிட்டு வரப்படுகிறார்கள்.

அதை பார்த்த தர்ஷன் ஓடிப் போய் அம்மாவை கட்டி பிடிக்கிறார். அதோடு கதிர் இப்போ உனக்கு சந்தோசமா பாரு அவங்களால நடக்க கூட முடியாம பண்ணிட்டாங்க என்று குணசேகரனிடம் கோபப்படுகிறார் அதை தொடர்ந்து கோர்ட்டுக்குள் சாரு பாலா வக்கீல் ஆக வருகிறார். இப்படியாக ப்ரோமோ வெளியாகி இருக்கும் வெளியில் அந்த ப்ரோமோவில் ஜனனி மற்றும் ஈஸ்வரி இருவரும் கோர்ட்டுக்குள் திருதிருவென முழித்துக் கொண்டிருக்கின்றனர்.

Ethirneechal Serial 15th february 2024 promo full update

இதனால் இவர்களுக்கு மீண்டும் ஜாமின் தள்ளி போய் விட்டதா என்ற சந்தேகம் வருகிறது. அதே நேரத்தில் இப்போது இணையத்தில் ஒரு புகைப்படம் வெளியாகியிருக்கிறது. அதில் கதிர் நீதிமன்ற கூண்டுக்குள் கையெடுத்து கும்பிட்டபடி நிற்பது போன்றும் சாருபாலா அவருக்காக வாதாடுவது போன்றும் இருக்கிறது. அதில் தன்னுடைய மனைவி மற்றும் எதிர்நீச்சல் பெண்களை ஜெயிலில் இருந்து காப்பாற்றுவதற்காக கதிர் தான் தன்னுடைய அண்ணனுக்காக ஜீவானந்தம் மனைவியை கொலை செய்ததை ஒத்துக் கொண்டு ஜெயிலுக்கு போகப் போகிறார் என்று கூறப்படுகிறது.

ஆனால் இப்படி நடப்பதற்கு வாய்ப்பே கிடையாது. எப்படியும் இப்போது போராடி சாருலதா தான் வெளியே கொண்டு வரப் போகிறார். அதற்குப் பிறகு குடும்பத்தோடு சேர்ந்து தர்ஷினியை தேடுவார்கள் அப்போது குணசேகரன் பற்றிய ரகசியங்கள் உடைபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+