குணசேகரனை வெளியே துரத்தும் ஜனனி.. எதிர்த்து பேசும் ஈஸ்வரி.. எதிர்பார்க்காத பரபரப்பான தருணம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஏப்ரல் 29ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
இதில் மருத்துவமனையில் இருக்கும் அப்பத்தாவை பார்ப்பதற்காக வந்த குணசேகரனை ஜனனி வெளியே துரத்துகிறார்.
ஜனனிக்கு ஆதரவாக ஈஸ்வரி குணசேகரனை கேள்வி கேட்கிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் செய்தியலில் இத்தனை நாட்களாக அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார்கள். கதை வேறு விதமாக போய்க்கொண்டிருக்கிறது என்று ரசிகர்கள் பீல் பண்ணி கருத்து வெளியிட்டு வந்திருந்தனர். காரணம் ஆதிரையின் காதலும் அதற்கு பிறகு வந்த பிரச்சனைகளும் பலருக்கும் வேதனையாக மாறிவிட்டது.
ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த தருணம் தற்போது மீண்டும் நடந்து வருகிறது. எதிர்நீச்சல் சீரியலில் பெண்கள் அடிமைத்தனத்துக்கு எதிராக பேச வேண்டும் என்றும், தங்களுடைய முடிவுகளாலும் தைரியத்தாலும் பல பெண்களுக்கு மோட்டிவேஷன் கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தது இப்போது நடக்க தொடங்கி இருக்கிறது.
ஆதிரையின் திருமணத்தை வைத்து குணசேகரன் அப்பதாவிடம் இருந்து 40 பிரசண்டேஜ் ஷேரை ஏமாற்றி வாங்கி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது அப்பத்தா கோமா நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார். இந்த நிலையில் இனி சொத்து உங்களுக்கு 40 பிரசண்டேஜ் கிடைக்காது என்று ஜனனி நேற்று எபிசோட்டில் சொன்னதை கேட்டு குணசேகரன் உளறி, ஜனனி சொன்னதை நினைத்து புலம்பியதையும் பார்த்த ரசிகர்கள் வாய்விட்டு சிரித்ததாக கூறி இருக்கிறார்கள்.
பொதுவாக வில்லன்கள் செய்யும் செயல்களை பார்த்து ரசிகர்கள் திட்டதான் செய்வார்கள். ஆனால் குணசேகரன் செய்யும் செயலை பார்த்து தான் பலரும் சிரித்துக் கொண்டும் இருக்கின்றனர். என்னதான் இவரை திட்டினாலும் இவரை ரசிக்கும் ரசிகர்கள் அதிகரித்திருக்கின்றனர்.

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஜனனி கேட்ட கேள்விகளால் பயந்து போன குணசேகரன் இன்று அப்பத்தாவை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்து இருக்கிறார். மருத்துவமனைக்கு வந்த குணசேகரனை ஜனனி உள்ளே போகக்கூடாது என்று தடுத்து நிறுத்துகிறார். அதற்கு போக கூடாதுன்னு சொல்றதுக்கு நீ யாருமா என்று கேள்வி கேட்ட குணசேகரன், சக்தி என்னடா இது கூட்டிட்டு போ அந்த பக்கம் என்று கூறுகிறார்.
அப்போது ஈஸ்வரி இனிமே உங்களுக்கு எதிராக யாரும் வர முடியாது அப்படின்னு ஒரு நம்பிக்கையோடு வாழ ஆரம்பிச்சிட்டீங்க இல்ல என்று குணசேகரனை பார்த்து கேள்வி கேட்க தற்போது இந்த பிரமோ பரபரப்பாக வைரலாகி வருகிறது. இதை ரசிகர்கள் அதிகமானோர் பாராட்டி வருகின்றனர். ஈஸ்வரி இனி இதே போல கேள்வி கேட்க வேண்டும் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. தற்போது இன்றைய ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் எபிசோடுகான ஆர்வம் அதிகரித்து இருக்கிறது என்று கூறி வருகிறார்கள்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications