நடுரோட்டில் குணசேகரனை அவமானப்படுத்திய ஜான்சி ராணி.. கொந்தளித்த ஜனனி.. எதிராக மாறும் குடும்பத்தினர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் தனக்கு துரோகம் செய்வதாக ஜான்சி ராணி நடுத்தெருவில் காரை மறித்து தகராறு செய்கிறார்.

ஜனனி தனக்கு இருக்கும் சந்தேகங்கள் காரணமாக குணசேகரனிடம் அடுத்தடுத்த கேள்விகளை கேட்கிறார்.

என்னுடைய மரியாதை வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதாக குணசேகரன் கோபப்படுகிறார்.

 நடக்கும் சதி வேலைகள்

நடக்கும் சதி வேலைகள்

எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்பாராத பல திருப்பங்கள் அடுத்தடுத்து நிகழ்த்து கொண்டிருக்கிறது. அதுவும் இன்றைக்கான எபிசோட்டில் பல உண்மைகள் வெளிவர இருக்கிறது. ஏற்கனவே ஆதிரையின் கல்யாணத்தை முன்னிறுத்தி ஃபேக்டரி அப்பத்தாவின் 40% ஷேர் என்று எஸ்கேஆர் ஃபேமிலி பிசினஸ் மைண்டில் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். இந்த பிரச்சனைகளிலும் சக்தி ஜனனிக்கு தன்னுடைய திருமண நாளில் மோதிரம் கொடுத்து சர்ப்ரைஸ் கொடுக்கிறார்.

ஜனனியின் முடிவு

ஜனனியின் முடிவு

சக்தியின் மனமாற்றத்தை புரிந்து கொள்ளும் ஜனனி சக்தியோடு மீண்டும் தன்னுடைய வாழ்க்கையை தொடங்குவாரா? இல்லையா? என்று பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் நேரத்தில் சக்தி கொடுத்த மோதிரத்தை கீழே வைத்துவிட்டு ஏற்கனவே சக்தி மீது எனக்கு ஒரு மதிப்பு இருக்கிறது. ஆனால் இந்த நேரத்தில் என்ன முடிவெடுக்க என்று தெரியவில்லை என்று குழப்பமாக கூறியிருக்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடு காண மற்றொரு ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.

 பிரச்சனை செய்யும் ஜான்சி ராணி

பிரச்சனை செய்யும் ஜான்சி ராணி

அதில் ஜனனி குணசேகரன் காரில் வந்து கொண்டிருக்கும்போது ஜான்சி ராணி கரிகாலனோடு வந்து காரை நிறுத்த அதற்கு கோபமாகும் குணசேகரன் நடுரோட்டில் நின்னு காரை மறப்பீங்களா என்று கேட்க, நடுரோட்டு என்பதால் தான் பேசாம இருக்கோம் என்று கெத்தாக குணசேகரன் முன்பு இடுப்பில் கைவைத்தபடி நின்று முறைத்துக் கொண்டிருக்கிறார்.

ஜனனி கேட்கும் கேள்வி

ஜனனி கேட்கும் கேள்வி

பிறகு வீட்டிற்கு வந்த குணசேகரன் தனியாக அருகில் உட்கார்ந்து இருக்கும்போது ஜனனி வந்து எக்ஸ்க்யூஸ் மீ என்று வீட்டு கதவைத் தட்டி குணசேகரனை கூப்பிட, கதவை திறக்கும் குணசேகரன் ஆதரை கல்யாணம் நடக்க போகுதுன்னு நான் பாத்துக்கிட்டு இருக்கேன் என்று கோபமாக பேச, அதற்கு ஜனனி யாரோடு நடக்கணும்னு பாக்குறீங்க என்று கேட்கிறார். அதற்கு குணசேகரன் நந்தினியிடம் உன் புருஷனை போய் கூட்டிட்டு வாம்மா என்று சொல்லுகிறார். அதற்கு நந்தினி முடியாது என்று சொல்ல, நாளுக்கு நாள் எல்லாம் குறைஞ்சுகிட்டே போகுது என்று கோபமாக பேச, சுற்றி இருக்கும் அனைத்து பெண்களும் முழித்துக் கொண்டு இருக்கிறனர். இந்த நிலையில் இன்று குணசேகரன் செய்யும் தில்லாலங்கடி வேலைகள் எல்லாம் ஜனனிக்கு தெரிந்து விட்டதா? என்று பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+