குணசேகரன் பற்றிய உண்மைகளை போட்டுக் கொடுத்த கரிகாலன்.. முடிவை மாற்றிய கதிர்.. பரபரப்பான கதைக்களம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவி ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஏப்ரல் 4ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

கரிகாலன் தங்களிடம் குணசேகரன் சொன்ன ரகசியங்களை குடும்பத்து முன்னிலையில் போட்டு கொடுக்கிறார்.

மொத்த குடும்பத்தின் முன்னிலையில் அடுத்த பொய் சொல்லி குணசேகரன் தப்பிக்கிறார்.

வெளிவரும் ரகசியங்கள்

வெளிவரும் ரகசியங்கள்

சன் டிவி ஒளிபரப்பு ஆகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் தற்போது அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பல திருப்பங்களும், ரகசியங்களும் வெளிவர தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே ஒரு பக்கம் குணசேகரன் பிளான் போட்டுக் கொண்டிருக்க, அவருக்கு எதிராக எஸ்கேஆர் தம்பிகள் ரவுண்டு கட்டி புதுசா பிளான் போடுகின்றனர். அது போதாது என்று வீட்டிற்குள்ளே இருக்கும் அப்பத்தா தன்னுடைய ஷேர் விஷயத்தில் சில கமுக்கமான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்.

மரியாதை குறைகிறது

மரியாதை குறைகிறது

இந்த நிலையில் இனி என்ன நடக்கப் போகிறது என்று ரசிகர்கள் கணிக்க முடியாமல் தான் இருந்து வருகின்றனர். ஆதிரையின் திருமணத்தை மையமாகக் கொண்டு ஒரு சில மாதங்களாகவே வீட்டில் அடுத்தடுத்த பல பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. பல ரகசியங்கள் எப்போது வெளிவரும் என்று தெரியாமல் இருந்து வருகின்றது. இந்த நிலையில் நேற்று எபிசோட்டில் பெண்கள் குணசேகரனை எதிர்த்து பேசுகின்றனர். இதனால் கோபம் அடைந்து குணசேகரன் எனக்கு மரியாதை குறைஞ்சுகிட்டு வருது என கொந்தளிக்கிறார்.

வீட்டிற்கு வந்த சாருலதா

வீட்டிற்கு வந்த சாருலதா

இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்காண பிரமோ வெளியாகி இருக்கிறது. அதில் இதற்கான பதில் இன்னமும் கொஞ்ச நேரத்தில் தெரிந்துவிடும் என்று ஜனனி கூறுகிறார். அதனை அடுத்து குணசேகரன் வீட்டில் எஸ்கேஆர் மனைவி சாருலதா வந்து நிற்கிறார். அப்போது குணசேகரன் நீங்க அன்னைக்கு வீட்டுக்கு வந்த போது நான் ஒரு மாதிரி பேசிட்டேன் அது மனசுக்கு உறுத்தலாக இருந்தது என்று பேசுகிறார்.

உண்மையை உடைத்த கரிகாலன்

உண்மையை உடைத்த கரிகாலன்

இதைத்தொடர்ந்து கரிகாலன் வேகத்தோடு வீட்டிற்கு வருகிறார். வந்த வேகத்தில் குணசேகரனை பிடித்து இவங்கள நடு வீட்டில் வைத்து பேசிட்டு இருக்கீங்க, அப்போ தோட்டத்துல வச்சுக்கிட்டு எங்களுக்கு சொன்னது என்ன? என்று கோபமாக பேசி உண்மையை உடைக்கிறார். இத்துடன் இன்றைய பிரமோ நிறைவடைகிறது. இதனால் குணசேகரன் அடுத்து என்ன முடிவு எடுக்கப் போகிறார். ஆதிரையின் கல்யாணம் என்ன மாதிரி இனி எப்படி நடக்கப்போகிறது என்று இன்றைய எபிசோட்டில் தெரிய வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+