Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜீவானந்தம் வீட்டிற்குள் துப்பாக்கி சூடு நடத்திய வளவன்.. இறந்தது யார் தெரியுமா..? கதறி அழுத ஜனனி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கான ஸ்பெஷல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் ஜீவானந்தத்தை கொலை செய்ய வேண்டும் என்று போயிருந்த கதிர் மற்றும் வளவன் குரூப் ஜீவானந்தம் வீட்டிற்குள் துப்பாக்கி சூடு நடத்துகின்றனர்.

அந்த நேரத்தில் அங்கு வந்த ஜனனி இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுகிறார். இந்த நிலையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பற்றி பார்க்கலாம்.

 Ethirneechal Serial 2023 August 19th special promo full update

எதிர்நீச்சல் சீரியலில் இத்தனை நாட்களாக ஜீவானந்தம் நல்லவரா? கெட்டவரா? என்று யூகிக்க முடியாத வகையில் கதை நகர்ந்து கொண்டிருந்தது. ஆரம்பத்தில் ஜீவானந்தம் ரவுடி போல காட்டி பிறகு அவருக்கும் ஒரு மனைவி, மகள் இருப்பதாகவும் அவர்களின் மீது ஜீவானந்தம் வைத்திருக்கும் பாசத்தையும் கடந்த சில நாட்களாக காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

அதே நேரத்தில் பேட்டி ஒன்றில் ஜீவானந்தமாக நடிக்கும் இந்த சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் ஜீவானந்தம் கேரக்டர் அதிக நாட்கள் இருக்காது என்று கூறியிருந்தார். அதுபோலத்தான் தற்போது இந்த சீரியலின் கதையும் பயணித்துக் கொண்டிருக்கிறது. அதாவது ஜீவானந்தம் பட்டமாளில் சொத்துக்களை தன்னுடைய பெயருக்கு மாற்றிய பிறகு குணசேகரனை கம்பெனியில் இருந்து தூக்கி வெளியே போட்டு துப்பாக்கியை வைத்து மிரட்டி இருந்தார்.

 Ethirneechal Serial 2023 August 19th special promo full update

அது மட்டுமல்லாமல் ஜனனி ஜீவானந்தத்திடம் பேச முயற்சி செய்யும்போது அதற்கு ஜீவானந்தம் சரியாக ரெஸ்பான்ஸ் பண்ணாமல் இருந்த நிலையில் ஜனனியும் சக மருமகள்களும் ஜீவானந்தமும் குணசேகரன் போன்ற ஆண் பெருமை பேசும் நபர் என்று நினைத்திருந்தனர். அதே நேரத்தில் ஈஸ்வரியின் முன்னாள் காதலன் தான் ஜீவானந்தம் என்ற ரகசியமும் வெளிவந்துவிட்டது.

அதே நேரத்தில் ஜீவானந்தத்தை சந்தித்து அவரைப் பற்றி ரகசியங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஜனனி ஜீவானந்தத்தின் சொந்த ஊருக்கு கிளம்பி சென்றிருக்கும் நிலையில் வளவன் மற்றும் கதிரை வைத்து குணசேகரன் ஜீவானந்தத்தை போட்டுதள்ள முடிவு செய்து இருக்கிறார். இந்த நிலையில் கோமாவில் இருந்த அப்பத்தாவும் கண் முழித்து ஜீவானந்தம் செய்தது எல்லாமே எனக்காகத்தான் என்று கூறி இருக்கிறார்.

 Ethirneechal Serial 2023 August 19th special promo full update

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டுக்கான ப்ரோமோ வெளியாகி இருந்ததை தொடர்ந்து இப்போது ஸ்பெஷல் ப்ரோமோவும் வெளியாகி இருக்கிறது. அதில் ஜீவானந்தத்தின் மகள் வெண்பா ஜீவானந்தத்திடம் "அப்பா எனக்கு ஒரு ஆசை" என்று சொல்ல, என்னப்பா நீ சொல்லு என்று ஜீவானந்தம் கேட்க, "இந்த காடுகளை தாண்டி மீதம் உள்ள ஒரு அழகான உலகத்தை ரசிக்கணும், அனுபவிக்கணும். தனியா இல்லப்பா, அம்மாவுடனும் உங்களுடனும் சேர்ந்து தான். இது நடக்குமா? அப்பா" என்று கேள்வி கேட்க, நிச்சயமா நடக்கும் என்று ஜீவானந்தம் சொல்கிறார்.

அதைத் தொடர்ந்து ஜீவானந்தம் வீட்டிற்குள் வளவனின் ஆட்களோடு உள்ளே வந்த கதிர் யோ துப்பாக்கியை வைத்து சுடுயா என்று கத்துகிறார். அந்த நேரத்தில் வீட்டிற்குள் வந்த ஜனனியும் அங்கு இருப்பவர்களை காப்பாற்றுவதற்காக போராடிக் கொண்டிருக்கிறார். ஜீவானந்தன் கையில் கிடைத்த கம்பியை வைத்து மற்றவர்களை அடித்துக் கொண்டிருக்கும் போது துப்பாக்கி சத்தம் கேட்டு அனைவரும் அதிர்ச்சியாகி இருக்க ஜனனி கதறி அழுகிறார். இப்படியாக பிரமோ முடிவு அடைந்து இருக்கிறது. இந்த நிலையில் வளவன் சுட்டது ஜீவானந்தத்தையா? அல்லது ஜீவானந்தத்தின் மகளையா என்ற எதிர்பார்ப்பும் குழப்பமும் இருக்கிறது. இன்றைய எபிசோடில் இதற்கான விளக்கம் தெரியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+