எதிர்நீச்சல்: ஜீவானந்தம் மனைவியை பற்றி பேசியதும் கதறி அழுத ஈஸ்வரி.. சந்தேகப்படும் குணசேகரன்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் வீட்டுக்கு வந்த ஜனனி சொன்னதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

ஜீவானந்தத்திற்கு கல்யாணம் முடிந்து மனைவி இப்போது இறந்து போய்விட்டார் என்பதை தெரிந்த ஈஸ்வரி கதறி அழுகிறார். இந்த நிலையில் இனி என்ன நடக்கப் போகிறது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று யூகிக்க முடியாத வகையில் இருக்கிறது. அதே நேரத்தில் விறுவிறுப்பின் உச்சத்தில் இருக்கும் போது எபிசோடு முடிவடைந்து விடுகிறது.
இது பலருக்கும் வருத்தத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
நேற்றைய எபிசோடில் கூட குணசேகரனை பற்றி நந்தினி கதிர் வந்ததும் அனைத்து உண்மைகளையும் சொல்ல கதிர் கோபம் ஆகிறார். தன்னை அடிக்க வந்தது, கதிர் பிணமாகத்தான் வருவான் என்று சொன்னது, கதிரை வேட்டை நாய் என்று சொன்னது எல்லாவற்றையும் நந்தினி சொன்னதும் கதிர் கோபத்தில் என்ன பத்தி என்ன அண்ணா சொன்னீங்க? என்று குணசேகரிடம் கேள்வி கேட்கிறார்.
ஆனால் அந்த நேரத்தில் சரியாக எபிசோடு முடிந்து விட்டது என்பது பலருக்கும் வருத்தத்தை கொடுத்து இருக்கிறது. ஒருவேளை கதிர் நந்தினி பேச்சைக் கேட்டு திருந்தி விட்டாரா? அல்லது நீங்க என்னை வேட்டை நாய் என்று சொன்னீங்களா? நான் உங்களுக்காக உயிரையும் கொடுப்பேன் அண்ணே என்று செண்டிமெண்டாக பேசப் போகிறாரா? என்று ஆர்வத்தோடு ரசிகர்கள் இன்றைய ப்ரோமோவில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் நந்தினி, ரேணுகா, ஈஸ்வரி, சக்தி நான்கு பேரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது நந்தினி சோகமாக புல் தரையில் அமர்ந்திருக்கிறார். மேலும் மூன்று பேரும் நின்று கொண்டு பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் ஜனனி வீட்டிற்குள் வருகிறார். வந்ததும் ஜீவானந்தத்தை பற்றி எல்லா விஷயங்களை சொன்னதும் நந்தினி இவ்வளவு நல்லது பண்றவரு ஏன் சொத்துக்களை அவர் பெயரில் மாற்றி எழுதியிருக்கிறார்? என்று கேள்வி கேட்கிறார்.
அதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கு அக்கா என்று ஜனனி சொல்ல, அனைவரும் அதிர்ச்சியோடு யோசிக்கின்றனர். அதைத் தொடர்ந்து ஜீவானந்தத்திற்க்கு இப்படி ஒரு பக்கம் இருக்கும்னு எனக்கு தெரியவே இல்லை அக்கா என்று சொல்லி அழுது கொண்டே பேசுகிறார். அதோடு அவரை சுட வந்தவங்க அவருடைய மனைவியை சுட்டுட்டாங்க என்று சொல்ல, ஈஸ்வரி கண்கலங்கி அழுகிறார். இப்படியாக பிரமோ முடிவடைந்து இருக்கிறது.
அதே நேரத்தில் அப்பத்தா ஜீவானந்தத்திற்கு எதிராக கொடுத்து இருக்கும் கம்ப்ளைன்ட் விசாரிக்கும் போது கட்சி மாறி ஜீவானந்தம் நல்லவர் என்று சொல்லி விடுவாரோ என்று குணசேகரன் சந்தேகப்படுகிறார். இப்படியாக இருக்கும் நிலையில் இன்றைய எபிசோட்டுக்கான ஆர்வம் அதிகரித்து இருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications