எதிர்நீச்சல்: கதிர் என்று நினைத்து சக்தியிடம் உண்மைகளை கொட்டிய வளவன்.. தெருவில் நிற்கும் குணசேகரன்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் குணசேகரன் சொல்லி தான் ஜீவாநந்தத்தின் மனைவியை கொன்றோம் என்பதை பற்றி வளவன் சக்தியிடம் உளறி விடுகிறார்.

மொத்த குடும்பத்திற்கும் உண்மை தெரிந்துவிட்டது. இந்த நிலையில் இனி என்ன நடக்க போகிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசோடில் அப்பாவை குணசேகரன் ஒரு பக்கம் தேடிக்கொண்டிருக்க ஜனனி ஒரு பக்கம் தேடிக் கொண்டிருக்கும் நிலையில் அப்பத்தா நீதிபதியின் வீட்டில் இருந்து ஜனனிக்கு மெசேஜ் செய்து அவரை அங்கு வர வைக்க தன்னை பற்றி முழு விபரத்தையும் நீதிபதியிடம் கூறியிருக்கிறார்.
அத்தோடு தான் ஏற்கனவே ஜீவானந்தத்திற்கு தன்னுடைய சொத்துக்களை எழுதி கொடுத்து விட்டேன் என்பதை பற்றியும் அப்பத்தான் நீதிபதியிடம் கூறி இருந்தார். இந்த நிலையில் அப்பத்தா, ஜீவானந்தம், ஜனனி மூவரையும் ஒன்றாக பார்த்த குணசேகரன் கடும் கோபத்தில் சண்டை போட அப்போது அப்பத்தா இந்த கேசை ரீ இன்வெஸ்டிகேஷன் செய்வதற்காக ஜட்ஜ் சொல்லிவிட்டார்கள். அதனால் நீ ஏதாவது செய்து மாட்டிக்கொள்ளாதே என்று மிரட்டி இருக்கிறார்.
அதோடு ஜீவானந்தம் காரில் ஜனனியும் அப்பத்தாவும் போவதை பார்த்து குணசேகரன் காரை எடுத்துட்டு போய் அந்த அப்பத்தா கிழவியை இப்பவே நசுக்கி கொன்னு விடலாமானு இருக்கு என்று கோபத்தை கொட்ட, ஞானம் குணசேகரனை சமாதானம் செய்து கூட்டி வருகிறார். இப்படியாக இருக்கும் நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் காரில் போய்க்கொண்டிருக்கும் போது ஞானம் "இப்ப என்ன சார் பண்றது" என்று கேட்க, அதற்கு வழக்கறிஞர் "அவங்க ரெண்டு பேரையும் அவ்வளவு லேசுல இப்போ எதுவும் பண்ண முடியாது" என்று சொல்ல, அதற்கு குணசேகரன் ஞானம் அந்த வண்டியை கொஞ்சம் ஓரமா நிப்பாட்டு என்று தெருவில் நிற்கிறார் அதே நேரத்தில் கதிருக்கு போன் வருகிறது.
சக்தி கதிர் உடைய போனை எடுத்து ஹலோ என்று பேச, எதிர் பக்கத்தில் வளவன் "டேய் கதிரு ஜீவானந்தம் பயலை உங்க பேச்சைக் கேட்டு நானும் சுட்டேனா இல்லையா? பிளான் மிஸ் ஆகி அவன் பொண்டாட்டி செத்துப் போயிட்டா.." என்று சொல்ல, ரேணுகா, நந்தினி, ஈஸ்வரி, ஜனனி என எல்லோரும் இதை கேட்டு அதிர்ச்சி அடைகின்றனர். இந்த நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பு இந்த பிரமோவால் அதிகரித்து இருக்கிறது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications