எதிர்நீச்சல்: ஜீவானந்தத்தை காதலித்ததை பற்றி சொன்ன ஈஸ்வரி.. கடும் கோபத்தில் குணசேகரன்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தத்தை காலேஜ் படிக்கும் போது தான் காதலித்த விஷயத்தை பற்றி ஈஸ்வரி அனைவரிடமும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் கதி,ர் ஜீவானந்தம் மனைவியை கொலை செய்ததை வைத்து நந்தினி பிரச்சனை செய்கிறார்.

இந்த நிலையில் நேற்று எபிசோடில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் எதிர்பாராத பல திருப்பங்கள் வந்து கொண்டு இருக்கிறது. அந்த வரிசையில் எபிசோட்டில் ஆரம்பத்தில் ஜனனி சக்தியிடம் ஜீவானந்தம் மனைவியை குணசேகரனும் கதிரும் சேர்ந்து கொலை செய்தது குறித்து சொல்லி இதை போலீசில் சொல்லலாம் என்று என்று சொல்லிக் கொண்டிருக்க அதற்கு சக்தி இப்போதைக்கு வேண்டாம் என்று கூறுகிறார்.
அப்பத்தா ஜீவானந்தத்துடன் போயிருக்கிறார். ஏற்கனவே ஜீவானந்தம் மனைவிக்கு நடந்தது நம்ம வீட்டில் யாருக்கும் நடந்து விடக்கூடாது என்று இந்த பிரச்சனை இப்போதைக்கு இருக்கட்டும் குணசேகரன் என்ன செய்து வச்சிருக்கான் என்று நான் ரகசியமாக கண்டுபிடித்து அதற்குப் பிறகு அவருக்கு தண்டனை வாங்கி கொடுக்கலாம் என்று ஆறுதல் சொல்ல, ஜனனியும் சரி என்று சொல்கிறார்.

அதைத்தொடர்ந்து வீட்டில் மருமகள்கள் எல்லோரும் சோகமாக அமர்ந்திருக்க அந்த நேரத்தில் குணசேகரன் வீட்டிற்கு வந்து, அந்த அப்பத்தா கிழவி என்ன பண்ண காத்திருக்கா சொல்லுங்க? என்று பிரச்சனை பண்ண அதற்கு ரேணுகா குணசேகரனிடம் எதிர் பேச்சு பேசுகிறார். அப்போது வார்த்தை முற்ற நீங்க ஜீவானந்தம் மனைவியை கொலை செய்தவங்க தானே என்று திடீர் என்று சொல்ல வர அந்த நேரத்தில் ஜனனி ரேணுகாவை நிறுத்தி விடுகிறார்.
அதற்கு ஞானம் நீ இப்போ என்ன சொல்ல வந்த, அந்த அப்பத்தா ஜீவனந்தத்துடன் சேர்ந்து என்ன செய்யப் போகிறாள் சொல்லு? என்று மிரட்டி சண்டை போட, ஒரு கட்டத்தில் ரேணுகா கோபத்தில் அப்பத்தா என்ன செய்யப் போறாங்களா? எங்களுக்கு தெரியாது என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார். பிறகு குணசேகரன் இவர்களுக்கு நாம வேற மாதிரி பதிலடி கொடுக்கணும் பா என்று பேசிக் கொண்டிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, ஜனனி எல்லோரும் இரவு வீட்டு வாசலில் இருந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஜீவானந்தத்தை நாம நேரில் பார்க்க வேண்டும் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்க, ஜனனி நேத்திக்கு அப்பத்தாவை மட்டும் தான் கூட்டிட்டு போனாரு. என்கிட்ட எதுவுமே பேசல. நாம போய் பார்த்தாலும் பேசுவார் என்று தெரியவில்லை என்று சொல்ல, அதற்கு ரேணுகா கண்டிப்பா பேசுவாரு என்று சொல்லி, தான் காலேஜ் படிக்கும் போது தன்னை காதலித்தது அவர்தான் என்ற ரகசியத்தை சொல்கிறார்.

பிறகு அடுத்த நாள் கண்டிப்பா ஜீவானந்தத்தை போய் பார்க்க வேண்டும் என்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து நந்தினி தாராவுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் கதிர் காபி வேண்டும் என்று கேட்க உங்க அண்ணன் கிட்ட போய் காபி கேளு என்று நந்தினி திட்டி விடுகிறார்.
பிறகு நீங்க என்னலாம் செஞ்சீங்கன்னு எங்களுக்கு தெரியாதா? உன்னை பத்தி எல்லாம் தெரியும் என்று நந்தினி கதிரை திட்ட, என்ன தெரியும்? என்று கதிர் கேள்வி கேட்க, நந்தினியும் ஜீவானந்தம் மனைவியை பற்றி சொல்ல வர ரேணுகா தடுக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைந்தது.












Click it and Unblock the Notifications