ஜீவானந்தம் குணசேகரனின் சொந்தக்காரரா? ஜனனியால் சக்திக்கு கிடைத்த அதிர்ச்சி.. பரபரப்பின் உச்சம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆகஸ்ட் இரண்டாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இதில் மனகசப்பில் இருந்த ஜனனி நான் சக்தியின் மனைவி என்று சொன்னதை கேட்டு ரசிகர்களும் சந்தோஷமடைந்து இருக்கின்றனர். இருவரும் இனி மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள் என்று இவர்களுடைய வார்த்தையில் இருந்து தெரிகிறது.

அதே நேரத்தில் ஜீவானந்தம் விஷயத்தில் குணசேகரன் புது பிளான் போட்டு வைத்திருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்த எதிர்பாராத பல திருப்பங்களும் வந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே பட்டமாளின் சொத்தை ஜீவானந்தம் தன்னுடைய பெயருக்கு மாற்றி இருக்கிறார். அதை தொடர்ந்து ஜீவானந்தத்திடமிருந்து சொத்துக்களை எப்படி பெற முடியும் என்று குணசேகரன் ஒரு பக்கமாக யோசித்து அதற்காக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

அதே நேரத்தில் ஜனனியும் சக்தியும் ஒரு பக்கமாக ஜீவானந்தம் பற்றி தகவல்களை சேகரிக்க தொடங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் ரேணுகாவிற்கு அவருடைய திறமையின் அடிப்படையில் அவருக்கு ஒரு புது வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஏற்கனவே ஈஸ்வரி மோட்டிவேஷன் ஸ்பீக்கர் ஆக மாறி இருக்கிறார். இந்த நிலையில் ஐஸ்வர்யாவின் ஸ்கூலுக்கு போன ரேணுகாவிற்கு டான்ஸ் டீச்சராக வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்த நிலையில் இனி நந்தினிக்கும் ஒரு சமையல் மாஸ்டராக ஆகும் வாய்ப்பு வந்திருக்கிறது. இதனால் இனி அடுத்தடுத்து பெண்கள் சுயமாக முன்னேற புது வழி கிடைத்துக் கொண்டிருக்கிறது. இதனால் இவர்கள் ஜீவானந்தத்திற்கு எதிராக எப்படி செயல்பட போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் இவர்களுடைய திறமைக்கு தகுந்த மாதிரி வேலையை குணசேகரன் பார்க்க விடுவாரா? என்றும் எதிர்பார்க்க வைத்திருக்கிறது.

இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான பிரமோ வெளியாகி இருக்கிறது. அதில் நேற்றைய எபிசோடில் ஜீவானந்தத்தால் ஏமாற்றப்பட்ட நபரை சந்திப்பதற்காக ஜனனியும் சக்தியும் காவலுக்கு காத்திருந்தனர். அப்போது அந்த நபர் இன்று ப்ரோமோவில் வந்திருக்கிறார். அவரிடம் சக்தி பேசிக் கொண்டிருக்கையில் அவங்களுக்கும் இந்த விஷயத்துக்கு எந்த சம்பந்தமும் கிடையாது என்று சொல்கிறார்.
மேலும் நான் குணசேகரனின் தம்பி என்று சொல்ல, அந்த நபர் ஜனனியை பார்த்து இவங்க யார் என்று கேட்க, அதற்கு நான் சக்தியின் வைஃப் என்று ஜனனி சொல்கிறார். இதை கேட்டு சக்தி அதிர்ச்சியாகி ஜனனியை பார்க்கிறார். அதைத்தொடர்ந்து சென்னையில் இருக்கும் குணசேகரனும், கதிரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கதிர் "பட்டுக்கு இந்த ஜீவானந்தம் என்ன சம்பந்தம்..? ஒருவேளை ஏதாவது உறவாக இருப்பானோ?" என்று கேட்கிறார்.

அதற்கு குணசேகரன் "உறவா இருக்கானோ, கருவா இருக்கானோ? ஆனா அவன் கதையை முடிக்கணும்பா" என்று பேசிக் கொண்டிருக்கிறார். இப்படி ஆக ப்ரோமோ முடிவடைந்திருக்கும் நிலையில் இனி சக்தி மற்றும் ஜனனிக்கு மீண்டும் காதல் தோன்றி வளருமா? அதே நேரத்தில் ஜீவானந்தம் விஷயத்தில் இவர்களுக்கு உண்மை தெரிய வருமா? ஜீவானந்தத்தால் குணசேகரனுக்கு பிரச்சனை வருமா? அல்லது குணசேகரசேகரனால் ஜீவானந்தத்திற்கு பிரச்சனை வருமா என்று பல எதிர்பார்ப்புகள் எழுகின்றது. இன்றைய எபிசொடில் இத்தனைக்கும் விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications