பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல்.. ஜான்சிராணியால் குணசேகரனுக்கு வந்த சிக்கல்.. கதறி அழுத மருமகள்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் குணசேகரன் வீட்டிற்கு வந்து ஜான்சி ராணி குணசேகரனை மிரட்டுகிறார்.

அதே நேரத்தில் ஜீவானந்தம் குழந்தையை பார்க்க சென்ற மருமகளுக்கு அந்த குழந்தையால் அதிர்ச்சி கிடைத்திருக்கிறது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது யூகிக்க முடியாத வகையில் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புது புது திருப்பங்களும், பிரச்சனைகளும் அடுத்தடுத்து வந்து கொண்டே இருப்பது எதிர்நீச்சல் சீரியலில் ஸ்பெஷலாக இருக்கிறது. இதில் பிரச்சனை இல்லாத நாளே இல்லையா என்று ரசிகர்கள் மனதிற்குள் கேட்கும் கேள்விகள் வெளியே தெரிந்தாலும் சீரியலின் சுவாரசியத்திற்காக தினமும் ஒரு பிரச்சனை இங்கே வெடித்துக் கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பல நாட்களுக்கு பிறகு மீண்டும் ஜான்சி ராணி குணசேகரன் வீட்டிற்கு வந்திருக்கிறார். ஏற்கனவே குணசேகரன் கிள்ளிவளவனை பார்ப்பதற்காக சென்னைக்கு போயிருந்த நேரத்தில் ஜான்சி ராணி வீட்டிற்கு வந்து ஆதிரையை கல்யாணம் செய்வதற்காக என்னுடைய புருஷன் கல்யாண மண்டபத்தை எழுதி கொடுத்தார். அந்த கதை தெரியுமா? என்று வீட்டில் பிரச்சனையை போட்டு உடைத்து விட்டு போயிருந்தார். ஆனால் அதற்குப் பிறகு அது பற்றி எந்த விளக்கமும், பிரச்சனைகளும் வெளியே வராமல் இருந்தது.

இந்த நிலையில் இன்று வீட்டிற்கு வந்த ஜான்சி ராணி "நான் அடிக்கடி உன் வீட்டிற்கு வருவது, பிரச்சனை பண்ணுவது, சமாதானப்படுத்துறது இனி இதெல்லாம் நடக்கவே நடக்காது. எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சு ஆகணும்" என்று கடும் கோபத்தில் கத்தி பேச குணசேகரன் டைனிங் ஹாலில் வழக்கமாக கண்டுகொள்ளாமல் அசட்டையாக இருப்பது போலவே இருந்து கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் ஜீவானந்தத்தை பார்ப்பதற்காக நந்தினி, ரேணுகா, ஈஸ்வரி, ஜனனி நான்கு பேரும் போயிருக்கும் நிலையில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஜீவானந்தத்தின் மகள் ஜனனியிடம் "அன்னைக்கு எங்க அம்மா இறந்தப்போ நீங்க சப்போர்ட்டா இருந்தீங்க, ரொம்ப தேங்க்ஸ்..!" என்று சொல்ல, கதறி அழுதபடியே நந்தினி அந்த குழந்தையை தோளோடு கட்டி அணைத்துக் கொள்கிறார். அந்த நேரத்தில் ஜீவானந்தம் அங்கு வர இவர்கள் எல்லோரும் குழந்தையை பார்த்து அழுது கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக பிரமோ முடிவடைந்து இருக்கிறது.

இந்த நிலையில் ஜீவானந்தத்தின் மனைவியை கொன்றது கதிர் மற்றும் குணசேகரன் ஆள் வைத்து தான் என்பது ஜீவானந்தரத்திற்கு தெரிய வந்தால் நிலைமை என்னவாக இருக்கும்? கதிர் செய்த தப்புக்காக நந்தினி அழுதது பலரையும் பீல் பண்ண வைத்திருக்கிறது. அதுபோல குழந்தையை பார்த்ததும் ரேணுகா இனி என்ன மாதிரி முடிவு எடுக்கப் போகிறார்? என்றெல்லாம் பல்வேறு கேள்விகள் குவிந்து வருகிறது.
அதே நேரத்தில் குணசேகரனின் விஷயத்தில் ஜான்சி ராணி செய்யும் பிரச்சனைகளால் குணசேகரனுக்கு அடுத்த எதிரி ஜான்சி ராணி தானா? என்று எதிர்பார்ப்பும் ரசிகர்களின் மத்தியில் இருக்கிறது. இந்த நிலையில் ஜனனி ஜீவானந்தத்தின் குழந்தையை நான் வளர்க்கிறேன் என்று சொல்லி வீட்டிற்கு கூட்டிட்டு வருவாரா? என்று பலர் எதிர்பார்ப்போடு கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் இனி என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications