எதிர்நீச்சல்: ஆதிரையை பழிவாங்க குணசேகரன் எடுத்த முடிவு.. கலங்கி நிற்கும் குடும்பம்.. மாற்றப்பட்ட கதைக்களம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் டிசம்பர் 19ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
அதில் ஆதிரை வீட்டை விட்டு கிளம்பி போனதால் கரிகாலனும் அவருடைய அம்மா ஜான்சி ராணியும் தற்கொலை முயற்சி செய்கின்றனர்.
அதற்கு குணசேகரன் தான் முக்கிய முடிவெடுத்து இருப்பதாக சொல்ல அதை கேட்டு ஈஸ்வரி அதிர்ச்சி ஆகிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பல மாதங்களுக்குப் பிறகு இப்போது சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று யோசிக்க முடியாத வகையில் தான் கதையின் வேகம் தொடங்கி இருக்கிறது. சில மாதங்களாக எதிர்நீச்சல் சீரியல் ஒரே இடத்தில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் அப்பத்தாவின் மறைவுக்குப் பிறகு சீரியல் வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது.
ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே நந்தினி தன்னுடைய வாழ்க்கையை தனியாக தொடங்கி இருந்தார். ஆனால் அந்த நேரத்தில் நந்தினியின் கண்முன்பே கதிரை சிலர் அடித்து துவைத்து எடுத்து இருக்கின்றனர். ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இப்போது கதிர் கை கால் அசைக்க முடியாமல் படுத்திருக்க கதிரின் அடிப்படை தேவையை கூட நந்தினி தான் செய்கிறார். இதை பார்த்து கதிர் கண் கலங்கி கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் ஆதிரை கட்டாய திருமண வாழ்க்கையில் இருந்திருந்த நிலையில் இப்போது தாலியை மீண்டும் கழட்டி வீசிவிட்டு தான் காதலித்த அருணுக்கு விபத்து நடப்பதற்கு காரணமாக இருந்தது தன்னுடைய அண்ணன் தான் என்பதை தெரிந்து கொண்டதும் அருண் வீட்டிற்கு போய் தஞ்சம் அடைந்திருக்கிறார்.
அதிலும் கரிகாலன் மற்றும் ஜான்சி ராணியை கன்னத்தில் அறைந்து இனி என்னுடைய வாழ்க்கை என்னுடைய இஷ்டப்படி தான் நடக்கும் என்று ஆதிரை தைரியமாக பேசி இருந்தது. பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் கரிகாலன் வழக்கம்போல ஆதிரையை நினைத்து அழுது கொண்டு இருக்க அதற்கு ஜான்சி ராணி இனி நானும் என்னுடைய மகளும் தற்கொலை பண்ண போறோம் என்று மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொளுத்த முடிவு செய்கின்றனர்.
அதனை தடுத்து நிறுத்திய குணசேகரன் கரிகாலன் வாழ்க்கை என்னால் அழிந்துவிட்டது. அதை நானே சரி செய்ய போகிறேன் என்று சில வார்த்தைகளை சொல்ல அதைக் கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சியாக இருக்கின்றனர். இதனால் கரிகாலன் இடம் குணசேகரன் என்ன சொல்லி இருப்பார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏற்கனவே தர்ஷினிக்கு பேச முடித்த மாப்பிள்ளை தான் தர்ஷினிக்கு வயது போதாது என்ற காரணத்தை காட்டி ஆதிரைக்கு கரிகாலனை கட்டி வைத்திருந்தனர்.
இப்போது ஆதிரை வேண்டாம் என்று போய்விட்டதால் மீண்டும் தர்ஷினிக்கு கரிகாலனை கட்டி வைக்கப் போகிறாரா? என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. இதுவரைக்கும் அமைதியாக இருந்த ஆதிரையே கரிகாலனை கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டு போயிருந்த நிலையில் தர்ஷினி ஏற்கனவே கராத்தே எல்லாம் படித்திருக்கிறார்.

அதனால் இனி ஜான்சி ராணி மற்றும் கரிகாலனை போட்டு துவைத்து எடுக்க போகிறாரா என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. அதுபோல ஈஸ்வரி இப்போது குணசேகரனுக்கு எதிராக தனித்து எலெக்ஷனில் நிற்கிறார். அதில் குணசேகரனுக்கு ஆதரவாக கரிகாலன் தான் மொத்த வேலைகளையும் பார்த்து வருகிறார். இனி குணசேகரன் ஜெயிக்கப் போகிறாரா? அல்லது ஜனனியின் உதவியோடு ஈஸ்வரி ஜெயிக்கப் போகிறாரா என்று எதிர்பார்ப்பும் இருக்கிறது.
அதே நேரத்தில் மீண்டும் வசு இந்த சீரியலில் அறிமுகமாக இருக்கிறார். அதனால் ஈஸ்வரி ஜெயித்து குணசேகரனுடைய கொட்டத்தை அடக்க போகிறார் என்று தான் தெரிகிறது. அதிலும் இத்தனை நாட்களாக தன்னுடைய வேட்டை நாயாக கதிரை பயன்படுத்தி வந்த குணசேகரன் இப்போது கதிர் கை கால் தூக்க முடியாமல் இருக்கும் நிலையில் இனி குணசேகரன் தன்னுடைய தம்பியை அவமானப்படுத்த அதனால் தான் கதிர் மனமாருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுபோல ஜனனிக்கு ஆதரவாக இருந்து வரும் சக்தியை குணசேகரன் தன் வசப்படுத்த வேண்டும் என்பதற்காக தன்னுடைய நாடகத்தை தம்பியிடம் காட்டி தான் சக்தியை எஸ் கே ஆர் வீட்டுக்கு கூட்டிட்டு போயிருந்தார். அதோடு இனி சக்தி இப்படியே இருக்கப் போகிறாரா? இல்லை மீண்டும் குணசேகரன் பக்கம் சாய போகிறாரா? இந்த கேள்விகளும் வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications