தர்ஷினி மற்றும் கதிர் கொடுத்த டுவிஸ்ட்.. இனி குணசேகரன் நிலைமை அவ்வளவுதானா? அதிரடியாக மாறிய கதை
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் டிசம்பர் 21 ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
அதில் குணசேகரனிடம் தர்ஷினி தான் காதலிக்கும் விஷயத்தை சொல்ல மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகி இருக்கின்றனர்.
அதே நேரத்தில் தர்ஷினியை தொடர்ந்து கரிகாலன் குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இனி என்ன நடக்கப் போகிறது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி கதை வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது. இதுவரைக்கும் குணசேகரன் தான் எதிர்நீச்சல் சீரியலில் ஜெயித்துக்கொண்டே இருந்த நிலையில் இது ரசிகர்களுக்கு அலுப்பு தட்டி இருந்தது. இதை தொடர்ந்து இப்போது வீட்டு பெண்களும் தங்களுடைய பயணத்தை தொடங்கி இருக்கின்றனர். ஏற்கனவே ஈஸ்வரி குணசேகரனை எதிர்த்து தைரியமாக எலக்ஷனில் நிற்கிறார்.
அதுபோல கட்டாய திருமண வாழ்க்கையில் குணசேகரனால் மாட்டியிருந்த ஆதிரையும் தாலியை கழட்டி வீசிவிட்டு தான் காதலித்த அருண் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அதோடு குணசேகரன் மற்றும் அவருடைய தம்பிமார்கள் மீது ஆதிரை இனி கேஸ் போட இருக்கிறார். அதுபோல ஆதிரைக்கு இனி அருனோடு திருமணம் நடக்கும் என்று சாருபாலா கூறி இருக்கிறார்.
அப்பத்தா நிலைமை என்ன ஆனது என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும், இப்போது வீட்டுப் பெண்கள் எடுத்திருக்கும் முடிவு ரசிகர்களின் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கரிகாலன் உடைய வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு பதிலாக இனி தர்ஷினியை திருமணம் செய்து வைக்கப் போகிறேன் என்று குணசேகரன் சொல்லி இருக்கிறார்.
ஏற்கனவே தர்ஷினியை கரிகாலனுக்கு திருமணம் செய்து வைக்க எடுத்த முயற்சியில் பட்ட அவமானங்களும் பிரச்சனையும் மறந்து போய்விட்டது போல. அதனால் மீண்டும் அதே செயலை செய்ய குணசேகரன் துணிந்திருக்கும் நிலையில் அதற்கு ஈஸ்வரி அட்வைஸ் செய்து பார்த்தாலும் அடங்காத குணசேகரனுக்கு தர்ஷினி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
அதாவது ஒரு பையன் வீட்டிற்கு வரவைத்து இவனை தான் நான் காதலிக்கிறேன் என்று மொத்த குடும்பத்தின் முன்பும் தர்ஷினி சொல்ல அனைவரும் அதிர்ச்சியாகி இருக்கின்றனர். நேற்று வரைக்கும் தர்ஷினி தனக்கு விரைவில் டொனமென்ட் வரப்போகிறது. அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்த நிலையில் அதற்கு ஈஸ்வரி உனக்கு என்ன சப்போர்ட் தேவையோ அதை நான் பண்ணுகிறேன் என்று கூறியிருந்தார்.
ஆனால் கடைசியில் ஒரு பையனை கூட்டி வந்து அவர்தான் என்னுடைய காதலன் என்று மொத்த குடும்பத்திற்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். ஏற்கனவே ஆதிரை கொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீளாத குணசேகரனுக்கு இப்போது தர்ஷினி கொடுத்த அதிர்ச்சி பெரியதாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து இனி கதிரும் அதிர்ச்சி கொடுக்க இருக்கிறார் என்று தெரிகிறது.

ஏற்கனவே இதுவரைக்கும் நந்தினி மீது கோபத்தையே காட்டிக் கொண்டிருக்கும் கதிர் இப்போது நந்தினியை புரிந்து கொண்டு கண்கலங்கி இருக்கிறார்.இந்த நிலையில் இனி தன்னுடைய மனைவிதான் தனக்கு என்று சொல்லும் காலம் வெகு சீக்கிரத்தில் இருக்கிறது என்று தெரிகிறது.
தன்னுடைய வேட்டை நாயாக கதிரை பயன்படுத்தி வந்த குணசேகரன் இனி கதிர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் அவரை அவமானப்படுத்த, அப்போது தனக்கு துணையாக இருக்கும் நந்தினியால் கதிர் அதிரடியாக மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மொத்தம் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இப்போது எதிர்நீச்சல் பயணிக்க தொடங்கி இருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications