எதிர்நீச்சலில் இனி இதுதான் நடக்கப் போகிறதா? ஆதிரையை விடுங்க.. குணசேகரனுக்கு அதிர்ச்சி கொடுத்த ஈஸ்வரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஒன்பதாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் குணசேகரனை தன்னுடைய தம்பிகளுக்கு எதிராகவே திருப்பி விடுவதற்காக ஜான்சி ராணி புது பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறார். அதைத்தொடர்ந்து கரிகாலனும் தன்னுடைய பங்குக்கு குணசேகரன் முன்பு மீண்டும் தர்ஷினினோடு தனக்கு திருமணம் நடக்குமா இல்லையா என்று கேள்வி கேட்க அதற்கு ஈஸ்வரி கடும் கோபத்தில் திட்டி இருக்கிறார்.

அதே நேரத்தில் எலக்ஷனில் ஈஸ்வரி ஜெயிக்கப் போகிறாரா? அல்லது குணசேகரன் ஜெயிக்கப் போகிறாரா? என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கும் நிலையில் அது குறித்து குணசேகரனின் தாய் மாமா புதிய விஷயம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்த பிரச்சனைகளுக்கு மட்டும் பஞ்சமே இல்லாமல் தினமும் ஒவ்வொரு பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் இந்த சீரியலில் வில்லன்கள் தான் ஒவ்வொரு முறையும் ஜெயித்துக் கொண்டிருக்கின்றனர்.

Ethirneechal Serial 2023 January 9th promo Ishwari shocked Gunasekaran

இதனால் இது ரசிகர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இப்போது கதை வேறு விதமாக பயணிக்க தொடங்கி இருக்கிறது. அதிலும் இதுவரைக்கும் திமிராகவே இருந்து வந்த குணசேகரனுக்கு அடுத்தடுத்த ஆப்பு ரெடி ஆகி கொண்டு இருக்கிறது. அதாவது அப்பத்தா பிரச்சனையில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்வதற்காக ஜனனியும் சக்தியும் மீண்டும் கேஸை விசாரிக்க வேண்டும் என்று கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கின்றனர்.

Ethirneechal Serial 2023 January 9th promo Ishwari shocked Gunasekaran

அதை தொடர்ந்து ஆதிரையும் தனக்கு விருப்பமில்லாத திருமணத்தை செய்து வைத்ததற்காக குணசேகரன், கதிர், ஞானம் மூவரும் ஏதும் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறார். இதனால் குணசேகரன் தலைமுறைவாக இருந்த நிலையில் இப்போது முன்ஜாமின் கொண்டு மீண்டும் வீட்டிற்கு வந்திருக்கிறார் இப்படியான நிலையில் நேற்று நந்தினியை குணசேகரன் வாடி போடி என்று திட்டியதற்காக வண்டிக்கு போற எல்லாரும் கதிர் எதிர்த்து கேள்வி கேட்டிருந்தார்..

Ethirneechal Serial 2023 January 9th promo Ishwari shocked Gunasekaran

இதுவும் குணசேகரனுக்கு அடுத்த அடியாக விழுந்திருக்கிறது. இதுவரைக்கும் தனக்கு ஆதரவாக எதிர்த்து பேசாத கதிர் இப்போது தன்னை எதிர்த்து பேசி விட்டான் என்ற வருத்தத்தில் இருக்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் குணசேகரன், கதிர், கரிகாலன், விசாலாட்சி, ஜான்சி ராணி எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் போது ஜான்சி ராணி குணசேகரன் அண்ணே உனக்காக என்னைக்குனே வாழ்ந்திருக்கா நீ.. உன் தம்பிகளுக்கு மாடா உழைச்சு ஓடா தேய்கிறா... ஆனா அவங்களுக்கு தான் இது புரிய மாட்டேங்குது என்று கதிரை குத்தி காட்டி பேசுகிறார்.

அதை தொடர்ந்து குணசேகரனின் தாய் மாமாவிடம் குணசேகரன் இந்த எலக்சனில் என்ன நடக்கும் என்று கேட்க அதற்கு அவர் நல்லதே நடக்கும் என்று சொல்கிறார். அதற்கு ஞானம் அதான் யாருக்கு நல்லது நடக்கும் என்று கேட்க அதற்கு சாமியார் மாமா நல்லது நினைக்கிறவங்களுக்கு நல்லது நடக்கும் என்று சொல்கிறார்.

அதைத்தொடர்ந்து கரிகாலன் வாயை வச்சிட்டு சும்மா இருக்காமல் எனக்கும் அந்த தர்ஷினி பிள்ளைக்கும் கல்யாணம் நடக்குமா இல்லையா என்று கேள்வி கேட்கிறார். அதற்கு ஈஸ்வரி அனைவரும் முன்பும் கரிகாலனிடம் இதை பத்தி நீ பேச கூடாதுன்னு நான் சொல்லி இருக்கனா இல்லையா? என்று கையை நீட்டி மிரட்டுகிறார். இதற்கு குணசேகரன் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருக்கிறார். இதனால் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+