எதிர்நீச்சல்: கரிகாலன் காதலை அசிங்கப்படுத்திய குணசேகரன்.. தர்ஷினி சொன்ன பதில்.. ஆடி போன குடும்பம்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் தன் வீட்டு ஆண்களிடம் பெண்களை எந்த மாதிரி நடத்த வேண்டும் என்று பாடம் எடுக்கிறார்.
அதற்கு கரிகாலன் என்னால் இப்படி அடிமையாக ஆதிரையை நடத்த முடியாது காரணம் காதல் என்று கூறுகிறார்.

அதைத்தொடர்ந்து குணசேகரன் தர்ஷினியை மிரட்ட அதற்கு தர்ஷினி ஒரே பதிலால் அவமானப்படுத்திவிட்டு செல்கிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்த எதிர்பாராத திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஏற்கனவே நேற்றைய எபிசோட்டில் எனக்கு அடிமையாக இருக்க விரும்பாதவங்க பேர்ல எதுக்கு என்னோட சொத்து இருக்கணும் இந்த பத்திரத்தில் கையெழுத்து போடுங்கன்னு குணசேகரன் அனைவரையும் மிரட்டி இருந்தார்.

அதைத்தொடர்ந்து இனியாவது இந்தப் போலி மரியாதை வேண்டாம் என்று நந்தினியும் ரேணுகாவும் கையெழுத்து போட்டு கொடுத்து விட்டனர். ஆனால் ஜனனி பேச்சை கேட்ட சக்தி தான் கையெழுத்து போட மாட்டேன் என்று மறுத்துவிட்டார். இந்த நிலையில் கடும் கோபத்தில் இருந்த குணசேகரனை நந்தினி நக்கல் செய்து மேலும் கோபபடுத்தி இருந்தார்.
அதைத்தொடர்ந்து இன்றைய ப்ரோமோவில் குணசேகரன் கரிகாலன் ஞானம் மூவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது குணசேகரன் பொம்பளைங்களை எப்படி நடத்தணுமோ அப்படித்தான் நடத்தணும் என்று சொல்ல, அதற்கு கரிகாலன் ஆதிரை மேல நான் வைத்திருக்கும் காதல் என்னை தடுக்குது என்று சொல்ல, பெரிய ரோமியோ ஜூலியட் காதல். அப்படியே நிலாவிலிருந்து குதிச்சீங்களா? நீங்க ரெண்டு பேரும் என்று திட்டுகிறார்.

குணசேகரன் வார்த்தையை கேட்ட கரிகாலன் முகம் வாடி போகிறது. அதை தொடர்ந்து வீட்டில் அனைவரும் ஹாலில் இருக்கும் போது தர்ஷினியை கூப்பிட்டு குணசேகரன், நீ கரிகாலனை அடிக்க போனியா? மாமன் கிட்ட மன்னிப்பு கேளு என்று சொல்ல, முடியாது என்று கத்தியபடி தர்ஷினி அங்கிருந்து கிளம்ப கோபமாக போகிறார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத குணசேகரன் அதிர்ச்சியாகி, என்னப்பா இது இப்படி ஆரம்பிச்சிருக்காங்க...? என்று சொல்ல, அந்த நேரத்தில் ஞானம் மீசையை முறுக்க, அப்போது கோபமாக குணசேகரன் இனிமே எதுக்கு நாம மீசைய முறுக்குகிட்டு திரியணும் என்று பேச, சக்தி முதலான மற்றவர்கள் அனைவரும் சிரித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இன்றைய எபிசோடு தர்ஷினி பேசும் பேச்சால் குணசேகரன் பெரிய அளவில் பிரச்சனை செய்யப் போகிறார் என்று தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications