எதிர்நீச்சல்: குணசேகரனிடம் உண்மையை மறைக்கும் கரிகாலன்.. ஜான்சி ராணியால் வரும் புது பிரச்சனை
சென்னை: எதிர்நீச்சல் சீரியலுக்காக வெளியான ப்ரோமோவில் ஃபர்ஸ்ட் நைட் ரூமில் கரிகாலன் கதறி அழுது கொண்டிருக்கிறார்.
உண்மையை சொல்லி விடுவேன் என்று ஆதிரை மிரட்டி கொண்டு இருப்பதால் இனி கரிகாலன் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.

அதே நேரத்தில் ஜான்சி ராணி மீண்டும் குணசேகரன் வீட்டிற்கு வந்திருப்பதால் புது பிரச்சனையும் அடுத்து வர போகிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் அதிகமான ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் ஒரு சீரியலாக மாறி இருக்கிறது. இந்த சீரியலில் ஆதிரை மற்றும் கரிகாலன் திருமணம் பெருமளவில் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அதைத் தொடர்ந்து தற்போது கதை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் கரிகாலனுக்கும் ஆதிரைக்கும் முதலிரவு ஏற்பாடு நடைபெற்றிருக்கிறது.

ஏற்கனவே சில நாட்களாகவே எனக்கு முதலிரவு நடக்கவில்லை என்று கரிகாலன் புலம்பிக்கொண்டே இருக்க, நான் கரிகாலனோடு வாழ்க்கையை தொடங்க மாட்டேன் எனக்கு கரிகாலனை கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்று ஆதிரையும் கூறிக் கொண்டிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் குணசேகரனின் மிரட்டலுக்கு பயந்து ஆதிரை சடங்கு ஏற்பாடுகளுக்கு சரி என்று சொல்லி இருந்தார்.
இந்த நிலையில் உன்னை பற்றிய ரகசியம் எல்லாம் எனக்கு தெரியும் என்று முதலிரவு அறையில் இருக்கும் போது ஆதிரை கரிகாலனை மிரட்ட, நம்மளை பற்றி என்ன ரகசியமாக இருக்கும் என்று கண்டதை எல்லாம் யோசித்துப் பார்க்கும் கரிகாலானால் ஆதிரை பொய் சொல்வதை கண்டுபிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்.

இதனால் கதறி அழுதபடி நான் இங்க ஒன்னும் நடக்கல என்பதை போய் மாமா கிட்ட சொல்லப்போறேன் என்று கரிகாலன் கிளம்பி போக, இந்த விஷயத்தை அண்ணன் கிட்ட சொன்ன அவ்வளவுதான் என்று ஆதிரை மேலும் மிரட்டி இருக்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான பிரமோ வெளியாகி இருக்கிறது.
அதில் மாமா எல்லாம் முடிஞ்சு போச்சுயா என்று கதறியப்படியே ரூமை விட்டு கரிகாலன் வெளியே வருகிறார். மறுபக்கம் குணசேகரன் ஏன் இப்படி முழிக்கிறா என்று கரிகாலனிடன் கேட்கிறார். அதற்கு கரிகாலன் நேற்று என்று இழுக்கிறார். பதிலுக்கு குணசேகரன் வியாழக்கிழமை, இன்னைக்கு வெள்ளிக்கிழமை அதற்கு என்ன என்று கேட்கிறார்.

அந்த சமயத்தில் அங்கு ஜான்சி ராணி அண்ணே என்று கூப்பிட்டபடி வீட்டிற்குள் வர, கரிகாலனின் முகம் பிரகாசமாக மாறுகிறது. இந்த நிலையில் ஆதிரை தன்னை மிரட்டியது பற்றி கரிகாலன் ஜான்சி ராணியிடம் சொன்னால் வீட்டில் பெரும் பிரச்சனை வெடிக்க போகிறது இதனால் இந்த எபிசோட்க்கான ஆர்வம் அதிகரித்து இருக்கிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications