எதிர்நீச்சல்: சொத்து விஷயத்தில் ஏமாந்த குணசேகரன்.. இனி ஜீவானந்தம் செய்யப் போகும் செயல்..?
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் பட்டம்மாள் சொத்து ஜீவானந்தம் பெயருக்கு மாறிவிட்டது என்று பர்ஹானா சொல்லி சந்தோஷப்படுகிறார்.
அதே நேரத்தில் தர்ஷினி குணசேகரனை எதிர்த்துப் பேச, குணசேகரன் தர்ஷினியை அவமானப்படுத்துகிறார்.

குணசேகரன் பேசிய வார்த்தையை கேட்டு குடும்பமே அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்து எதிர்பார்க்காத பல திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. இதுவரைக்கும் அமைதியாக இருந்த குழந்தைகள் கூட இப்போது குணசேகரனை எதிர்த்து பேச தொடங்கி இருக்கின்றனர். வீட்டு மருமகள், ஜனனி பேச்சைக் கேட்டு எதிர்த்து பேசிக்கொண்டிருக்கும் நிலையில் அனைவருக்கும் நான்கு நாட்கள் மட்டுமே குணசேகரன் கெடு வைத்திருக்கிறார்.

நான்கு நாட்களுக்குள் சொத்து எல்லாம் தன்னுடைய பெயருக்கு மாறிய பிறகு இவர்களை பார்த்துக் கொள்ளலாம் என்று குணசேகரன் நினைத்திருக்கும் நிலையில் இன்றைய பிரமோவில் சற்றும் எதிர்பார்க்காத பல அதிரடி நடந்திருக்கிறது. ஏற்கனவே பட்டம்மாள் சொத்து தன்னுடைய பெயருக்கு மாற்றுவதற்காக ஜீவானந்தம் யாருக்கும் தெரியாமல் கைரேகையை எடுத்து இருந்தார்.
இந்த நிலையில் இரண்டு நாட்களுக்குள் ஜீவானந்தத்தின் பெயருக்கு பட்டம்மாள் ஷேர் வந்துவிடும் என்று கூறிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்றைய ப்ரோமோவில் பட்டம்மாள் ஷேர் உங்களுடைய பெயருக்கு மாறிவிட்டது என்று கூறி பர்ஹானா ஜீவானந்தத்திற்கு கை கொடுத்து தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்.

அதே நேரத்தில் குணசேகரன் தர்ஷினி தன்னுடைய நண்பர் வீட்டிற்கு கூட்டிட்டு வந்தது தப்பு என்று திட்டிக் கொண்டிருக்க நீங்க எல்லாம் காட்டுமிராண்டிங்க என்று தெரிந்தும் நான் இவனை வீட்டுக்கு வர சொன்னது என்னுடைய தப்பு தான் என்று தர்ஷினி சொல்ல குணசேகரன் தர்ஷினியை அசிங்கமாக திட்டுகிறார். அதைக் கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர். இன்றைய எபிசோடின் பரபரப்பான பிரச்சனைகள் இருக்கிறது.

அதே நேரத்தில் அதிகமான ரசிகர்கள் தர்ஷினி இப்படி எல்லாம் பேசுவது வயதுக்கு மீறி ஓவராக இருக்கிறது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதுவரைக்கும் குணசேகரனை திட்டிக் கொண்டிருந்த அதிகமான ரசிகர்கள் கூட தற்போது குணசேகரனுக்கு ஆதரவாக ப்ரோமோவிற்கு அதிகமான கமெண்ட்களை குவித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications