எதிர்நீச்சல்: குணசேகரன் நாடகத்தை கண்டுபிடித்த ஈஸ்வரி.. அசிங்கப்படுத்தும் சக்தி.. பரபரப்பின் உச்சம்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் வீட்டை விட்டு வெளியே சென்ற சக்தியும் ஜனனியும் மீண்டும் வீட்டிற்குள் வந்திருக்கின்றனர்.
இந்த நிலையில் குணசேகரன் போடும் நாடகத்தை பார்த்து ஈஸ்வரிக்கு சந்தேகம் வந்து கேள்வி எழுப்புகிறார்.
குணசேகரன் பேசும் சென்டிமென்ட் நாடகத்திற்கு எல்லாம் கட்டுப்படாமல் சக்தி துணிச்சலாக கேள்வி கேட்கிறார். இந்த நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்பதை பற்றி பார்க்கலாம்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் கடந்த வாரத்தில் நடைபெற்றது. பல மாதங்களாக இழுத்துக் கொண்டு இருந்த ஆதிரையின் திருமணம் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடைசி நேரத்தில் அதிர்ச்சி கொடுத்து குணசேகரன் நினைத்த மாதிரியே ஆதிரை கழுத்தில் கரிகாலன் தாலி கட்டி விட்டார்.
இந்த நிலையில் இனி ஆதிரை என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது பற்றி பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. காரணம் ரெஜிஸ்டர் ஆபீஸில் கையெழுத்து போட்டு விட்டு வந்த ஆதிரையிடம் ஜனனி பேசப்போகும் போது உங்க எல்லாரையும் நம்புனதற்கு என்னுடைய வாழ்க்கையை தெருவுக்கு கொண்டு வந்துட்டீங்க என்று வெறுப்போடு பேசுகிறார். இதனால் தன்னுடைய வாழ்க்கையை தான் தான் இனி முடிவெடுக்க போக வேண்டும் என்று ஆதிரை தைரியமாக செயல்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

அதே நேரத்தில் திருமண விஷயத்தில் தனக்கு எதிராக நடந்ததற்காக குணசேகரன் ஜனனி மற்றும் சக்தியை அவமானப்படுத்தி வீட்டை விட்டு கிளம்புகிறார். ஆனால் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு முன்பு ஜனனியை அடிக்க வந்த கதிரை சக்தி அடித்தது ரசிகர்களை ரொம்பவே கவர்ந்திருக்கிறது. இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியே வந்த இவர்கள் இருவரும் ரோட்டில் நின்று பேசும் போது கூட ஜனனிக்கு ஆதரவாக இனி நான் முழுமையாக இருப்பேன் என்று சக்தி தைரியம் கொடுத்திருக்கிறார்.
அதே நேரத்தில் பட்டம்மாளின் ஷேர் விஷயத்தில் வீட்டு பெண்களுக்கு தொடர்பு இருக்கிறது என்பது பற்றி ஆடிட்டர் குணசேகரிடம் கூறியிருக்கிறார். இதனால் மீண்டும் ஜனனியை வீட்டிற்கு கொண்டு வந்து விடுங்கள், ஜனனி என்ன செய்கிறாள் என்பதை உங்களுடைய கண் பார்வையில் வைத்துக் கொண்டால்தான் நமக்கு அந்த சொத்து கிடைக்கும் என்று ஆடிட்டர் போட்டுக் கொடுத்த பிளானை இன்றைய ப்ரோமோவில் குணசேகரன் காட்டி இருக்கிறார்.

அந்த வகையில் இன்றைய பிரமோவில் ஜனனியையும் சக்தியையும் வீட்டிற்கு மீண்டும் வரவழைத்த குணசேகரன் இருவரும் வீட்டு வாசலில் வரும் போது என் பிள்ளையை வர சொல்லுப்பா என்று கண்கலங்கியபடி பேசுகிறார். இதைக் கேட்டு ஈஸ்வரி என்னங்க இது புது ட்ராமாவா இருக்கு? என்று நம்பாமல் கேள்வி கேட்கிறார். உடனே "ஏய்..." என்று அதட்டி ஈஸ்வரியை ஆப் செய்கிறார்.
பிறகு ஜனனியும் சக்தியும் வீட்டிற்கு வந்ததும் கோவத்துல தான் ஏதோ பேசிட்டேன். நீ போன பிறகு தான் எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்து என்று குணசேகரன் பேச, அதற்கு சக்தி நான் ஒன்னும் உங்களுக்காக இந்த வீட்டிற்கு வரல என்று சொல்ல, சொத்தில் இருந்து உன் பங்கு பிரிச்சு கொடுத்திருதேன் பா என்று குணசேகரன் சமாதானப்படுத்த பார்க்கிறார்.
அதற்கு சக்தி உங்க சொத்து எல்லாம் எனக்கு வேண்டாம். சொந்தமா சம்பாதிக்கிற திராணி எங்கிட்ட இருக்கு என்று சொல்ல, அருகில் இருந்த ரேணுகா நந்தினி இருவரும் கைத்தட்டுகின்றனர். இனி குணசேகரன் ஆட்டம் ஆரம்பமாகப் போகிறதா? அல்லது ஜனனிக்கு ஆதரவாக சக்தி இனி குணசேகரனை எதிர்த்து நிற்க போகிறாரா? என்று எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications