கை, கால் செயலிழந்த குணசேகரன்.. நந்தினி சொன்ன வார்த்தை.. பதறிய குடும்பம்.. உணர்வு பூர்வமான தருணம்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் மருத்துவமனையில் வலது பக்கத்தில் கை கால் செயல் இழந்து போய் இருக்கிறார்.
அந்த நேரத்தில் மருத்துவமனைக்கு வந்த நந்தினி குணசேகரனிடம் பேசிய வார்த்தையை கேட்டு குணசேகரன் நக்கல் செய்கிறார்.

இந்த நிலையில் ஜூலை 29ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் எதிர்பாராத பல திருப்பங்களும் கதையும் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் குணசேகரனுக்கு நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

குணசேகரனுக்காக ஜீவானந்தத்திடம் சொத்து பற்றி பேசி சொத்தை திரும்ப வாங்கிவிடலாம் என்று ஈஸ்வரி நந்தினி, ஜனனி மூவரும் ஹாஸ்பிடலில் இருந்து கம்பெனிக்கு தேடி வந்த நிலையில் ஜீவானந்தம் கம்பெனியில் இன்று இல்லை என்று அங்கு இருப்பவர்கள் சொல்ல அதைக் கேட்டு மூவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
இந்த நிலையில் ஜீவானந்தம் பற்றி பேசுவதற்காக கௌதமிடம் ஈஸ்வரி பேச வேண்டும் என்று சொல்ல ஜனனி எனக்கு விருப்பமில்லை என்று சொன்ன பிறகும் ஈஸ்வரி கௌதமுக்கு போன் போட்டு செண்டிமெண்ட் ஆக பேசுகிறார். உன்னிடம் பேச வேண்டும் அதற்காக காத்திருப்பதாகவும் சொல்கிறார். ஆனால் கௌதம் பதில் சொல்லாமல் இருப்பதால் ஈஸ்வரியை வந்து சந்திப்பாரா என்று கேள்வி எழும்புகிறது.

இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஹாஸ்பிடலுக்கு வந்த ஈஸ்வரி, நந்தினி மற்றும் ஜனனி மூவரும் குணசேகரனை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு நந்தினி மெதுவாக என்ன ஆச்சு என்று கேட்க, கரிகாலன் மாமாவுக்கு ஒரு பக்கம் விளங்காமல் போயிடுச்சு என்று சொல்ல, நந்தினி என்னடா இப்படி சாதாரணமா சொல்ற என்று கேட்க அதற்கு கரிகாலன் உசுரு போகலல்ல அது வரைக்கும் சந்தோசம் தானே என்று கேட்கிறார்.
அதைத்தொடர்ந்து நந்தினி குணசேகரனை உத்து உத்து பார்த்துக் கொண்டிருக்க குணசேகரன் யம்மா நந்தினி என்ன இப்படி உத்து உத்து பார்த்து கொண்டு இருக்கா என்று கேட்க," ஐ பீல் ரியலி சாரி அபௌட் திஸ் மாமா" என்று சொல்ல, இங்கிலீஷ் பேசுற நேரமா இது என்று குணசேகரன் கேள்வி கேட்க அனைவரும் முழித்துக் கொண்டு இருக்க, இப்படியாக சோகமான நேரத்திலும் கலகலப்பாக ப்ரோமோ வந்திருக்கிறது.

இந்த நிலையில் இன்றைய எபிசோடில் கௌதம் ஈஸ்வரியை வந்து சந்தித்தாரா? அல்லது ஜீவானந்தம் பற்றி ஏதேனும் பேசுவாரா? என்று தெரிந்து கொள்வதற்காக ரசிகர்கள் ஆர்வமாக இருப்பதாக கமெண்ட்களில் தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் உண்மையாகவே குணசேகரனுக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆகி இருக்கிறதா? அல்லது நடித்துக் கொண்டிருக்கிறாரா? என்றும் பலர் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications