எதிர்நீச்சல்: சொத்தை மாற்றி எழுதும் குணசேகரன்.. ஜனனி கொடுத்த அதிர்ச்சி.. அவமானப்படுத்தும் ரேணுகா
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தத்திடமிருந்து சொத்தை மீட்டுக் கொண்டு வருவது இனி மருமகள்களின் வேலை தான் என்று குணசேகரன் சொல்ல ரேணுகா அவமானப்படுத்துகிறார்.
இந்த நிலையில் எதற்கு சற்றும் எதிர்பார்க்காத பதிலை ஜனனி கொடுக்க மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர்.
இந்த நிலையில் ஜூலை 31ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

எதிர்நீச்சல் சீரியலில் இதுவரைக்கும் ஆண்கள் நாங்கள்தான் எல்லாமே என்று ஆட்டம் போட்டு பெண்களை அடிமையாக வைத்துக் கொண்டிருந்த நிலையில், இப்போது பெண்கள் தயவை சொத்துக்காக தேடத் தொடங்கி இருக்கின்றனர். ஏற்கனவே குணசேகரன் தனக்கு ஒரு காரியமாக வேண்டும் என்றால் என்ன வேண்டுமென்றாலும் செய்வார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
இந்த நிலையில் பட்டம்மாள் சொத்து 40% இப்போது ஜீவானந்தம் பெயருக்கு மாறி இருக்கிறது. அதை குணசேகரன் தன்னுடைய தம்பிமார்களோடு சென்று சண்டை போட்டு வாங்கி விடலாம் என்று நினைத்திருந்த நிலையில் குணசேகரனுக்கு அதிர்ச்சி தான் கிடைத்திருக்கிறது. ஜீவானந்தத்தால் அடுத்தடுத்து பிரச்சனை வந்த நிலையில் அதிலிருந்து மீண்டு வருவதற்காக வீட்டு மருமகள்களின் உதவியை நாடுகிறார்.

ஆனாலும் தனக்கு சொத்து வேண்டும் என்பதற்காக இத்தனை நாட்களாக அவமானப்படுத்திக் கொண்டிருந்த மருமகளிடம் இன்றைய பிரமோவில் கெஞ்ச தொடங்கி இருக்கிறார். அந்த வகையில் ஆரம்பத்தில் குணசேகரன் தன்னுடைய அம்மாவிடம் சொத்தை மீட்டு கொண்டு வர வேண்டியது. உன் மருமகளோட கடமை அம்மா என்று சொல்ல, அதற்கு ரேணுகா ஆம்பளையாளுக இத்தனை பேர் இருக்கீங்க இல்ல, களத்தில் இறங்கி ஆடுங்க என்று சொல்ல, அதற்கு ஞானம் ரேணுகாவை அடிக்க கையை ஓங்கி போகிறார்.

அதைப் பார்த்து கோபமான ஜனனி நிறுத்துங்க. உங்களுக்கு சொத்தை நாங்க வாங்கி தருகிறோம் என்று சொல்கிறார். அதைத் தொடர்ந்து குணசேகரன், ஞானம், கதிர், கரிகாலன் என அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது குணசேகரன் ஞானத்திடம் ஞானம் அந்த ஆடிட்டர் சொன்னாருல்ல டாக்குமெண்ட் எல்லாம் பொம்பள பொம்பளைங்க பேர்ல எழுதி இருக்கோம்ல, என்று சொல்லி சில ரகசியத்தை ப்ரோமோவில் பேசிக்கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் குணசேகரன் இனி என்ன மாதிரி சொத்தை மாற்றி எழுதப் போகிறார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications