எதிர்நீச்சல்: ஓடிப்போனவர்களை கண்டுபிடித்த கரிகாலன்.. குணசேகரன் ஆட்டம் ஆரம்பம்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் கரிகாலனை ஏமாற்றிவிட்டு ஓடிப்போன ஜனனி, நந்தினி, ரேணுகா, ஆதிரையை கரிகாலன் கண்டுபிடித்து விடுகிறார்.
கோவிலில் சக்தி காத்திருக்க ஜனனி போவதற்கு வண்டி வராமல் நடுத்தெருவில் தவித்துக் கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் கோவிலுக்கு போனவர்களை காணவில்லையே என்று ஜான்சி ராணி குணசேகரன் இடம் கேள்வி கேட்கிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் இன்று விறுவிறுப்பான கதை ஒளிபரப்பாக இருக்கிறது. நேற்றைய எபிசோடில் கோவிலுக்கு போகும்போது கதிர் கூடவே வருவதால் பிளான் போட்டு ஜனனி தன்னுடைய தோழி மூலமாக கதிருக்கு போன் பண்ண வைத்து கதிரை பாதியில் இறங்க வைத்து இருக்கிறார்கள்.

அதைத் தொடர்ந்து கரிகாலன் அவர்களோடு கோவிலுக்கு போய் இருந்த நிலையில் கோவிலில் ஐயர் யார் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என்று கேட்க அதற்கு நந்தினி ஆதிரை செல்வி, அருண் என்கிற பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று சொல்ல அதைக் கேட்டு கரிகாலன் எனது அருணா என்று கோபப்பட பின்பு ரேணுகா சூழ்ச்சியால் கரிகாலன் கோவிலில் சாமி முன்பு ஆதிரை கரிகாலன் திருமணம் நடக்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கும் போது அங்கிருந்து நந்தினி, ரேணுகா, ஜனனி, ஆதிரை நான்கு பேரும் ஓடிப் போகின்றனர்.
இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் நான்கு பேரும் நடுத்தெருவில் நடந்து வந்து கொண்டிருக்கும் போது சக்தி போன் பண்ணி நீங்க அங்கிருந்து கிளம்பிட்டீங்களா ஜனனி என்று கேட்க அதற்கு ஜனனி இல்ல சக்தி இன்னும் எங்க கார் வரல என்று சொல்ல, அந்த நேரத்தில் அதே இடத்திற்கு கரிகாலன் கோபமாக வந்து நிற்கிறார்.
அதே நேரத்தில் மண்டபத்தில் குணசேகரன் இடம் ஜான்சி ராணி நேரம் ஆகிட்டு இருக்கு கோயிலுக்கு போன உன் குடும்பப் பொண்ணுங்க கிட்ட இருந்து இன்னும் போனும் வரல, இன்னும் மண்டபமும் வந்து சேரல என்ன நடக்குது அண்ணே என்று கேட்க விசாலாட்சி பதில் சொல்ல முடியாமல் தவித்து முழித்துக் கொண்டிருக்கிறார் அந்த நேரத்தில் குணசேகரன் பயங்கரமாக யோசித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது. அதே நேரத்தில் ஆதிரைக்கு யாரோடு திருமணம் என்று யூகிக்க முடியாமல் ரசிகர்களே குழப்பத்தில் இருக்கின்றனர். அதே நேரத்தில் அதிகமான ரசிகர்கள் ஆதிரை மற்றும் கரிகாலன் கல்யாணம் நடந்தால் சீரியல் விறுவிறுப்பாக இருக்கும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications