சக்தியை அவமானப்படுத்திய அப்பத்தா.. ஜனனி செய்த செயல்.. குணசேகரனை ஒரே வார்த்தையால் மடக்கிய ஜான்சி ராணி

குணசேகரன் ஜான்சி ராணியை அதட்டி பேச அதற்கு ஜான்சி ராணி பதிலடி கொடுத்திருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் தன்னுடைய மனைவியை அனைவரும் அவமானப்படுத்துகிறார்கள் என்று சக்தி பொங்குகிறார்.

சக்தி உடைய செயலைப் பார்த்து இது எந்த உரிமையில் நீ செய்கிறாய் என்று பட்டம்மாள் திட்டுகிறார்,

ஜான்சி ராணி தன்னை மிரட்டும் குணசேகரனை இந்த சவுண்ட் விடுற வேலையெல்லாம் உங்க விட்டு பொம்பளைகளோடு நிறுத்திக்கோங்க என்று அவமானப்படுத்துகிறார்.

அவமானப்படுத்தி அப்பத்தா

அவமானப்படுத்தி அப்பத்தா

எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா, நந்தினி, ஈஸ்வரி மூவரும் அப்பத்தாவிடம் 40% கொடுத்து விட்டால் எங்க நிலைமை என்ன ஆகும் என்று பேசிக் கொண்டிருக்க, அதற்கு அப்பத்தா மூவரையும் திட்டி விடுகிறார். நீங்கள் இன்னும் தற்குறிகளாக வீட்டிற்குள் அடங்கி கொண்டே இருந்தால் உங்களுக்கு இந்த பணத்தை தந்து என்ன பிரயோஜனம் என்று கேள்வி கேட்கிறார். உங்களுக்கு இருக்கும் திறமையை எப்போதாவது கொண்டு வர வேண்டும் என்று நினைத்தீர்களா என்று மூவரையும் அவமானம் செய்கிறார். நந்தினியை நீ என்ன படிச்சிருக்க என்று கேட்க நான் டெக்ஸ்டைல் படித்திருக்கிறேன் என்று சொல்ல, சுத்த வேஸ்ட் எல்லாம் என்று அப்பத்தா அவமானப்படுத்த நந்தினியும், ரேணுகாவும் அழுது கொண்டிருக்கின்றனர்.

அழுது பிரச்சனை செய்யும் நந்தினி

அழுது பிரச்சனை செய்யும் நந்தினி

பிறகு மூவரும் கிச்சனில் பேசிக் கொண்டிருக்கும்போது அங்கே வரும் ஜனனி அவர்களிடம் அப்பத்தா இப்படி பேசுவாங்க என்று எனக்கு தெரியாது. அவங்க என்ன பிளான் வச்சிருக்காங்கன்னு எனக்கு எதுவுமே தெரியாது என்று சொல்ல, நந்தினி ஜனனிடம் தன்னுடைய இயலாமையை கோபத்தையும் காட்டுகிறார். நீங்க எல்லாம் ஒரே ஆளுங்க அதனால ஒன்னா தைரியமா யோசிப்பீங்க. நாங்க அப்படி இல்ல நாங்க முட்டாள் இந்த வீட்டில் வந்து அடிமையாக மாறிவிட்டோம். உங்களை யாரையும் நாங்க நம்புற மாதிரி இல்ல. நீ போயிரு என்று திட்ட, அப்போது அங்கு வரும் கதிர் ஜனனிக்கு ஆதரவாக அனைவரையும் திட்டுகிறார்.

சக்தி முடிவு

சக்தி முடிவு

ஜனனி என்னுடைய மனைவி அவளை திட்டும் உரிமை இந்த வீட்டில் யாருக்கும் இல்லை என்று ஜனனியை கையைப் பிடித்து படி கூட்டிக் கொண்டு சக்தி வந்தார். அது மட்டுமல்லாமல் அதே நேரத்தில் குணசேகரன் கரிகாலனுக்கு ஆதரையை திருமணம் செய்து வைத்தால் கரிகாலனுக்கு சொத்து இருந்தாலும் அவன் இரண்டாவது தாரத்து பையன் அதனால் நமக்கு அந்த சொத்து வருவதில் ஏகப்பட்ட பிரச்சனை இருக்கிறது. ஆனால் அதுவே ஏ கே ஆர் குடும்பத்தில் சம்மதம் வச்சுக்கிட்டா. அவருடைய தம்பியை நம்முடைய கைவசம் வச்சிக்கிட்டு மொத்த சொத்தையும் நாம புடிங்கிரலாம். நம்ம வீட்டில் இருக்கும் 40% ஷேரும் நம்மை விட்டு போகாது. ஷேரை மொத்தமா நம்மகிட்ட வாங்கிக்கிட்டு அப்பத்தாவுக்கு பழைய கஞ்சியை போட்டு உட்கார்ந்து தின்னுகிட்டு இரு என்று வைத்துக் கொள்ளலாம் என்று திமிராக பேசிக் கொண்டிருக்கிறார்.

ஜனனியின் முடிவு என்ன

ஜனனியின் முடிவு என்ன

தன்னுடைய முடிவுக்கு சம்மதம் சொல்லி ஞானம் மற்றும் கதிரிடம் குணசேகரன் சத்தியமும் வாங்கி விடுகிறார். இந்த நிலையில் இன்றைய பிரமோவில் ஜனனியை கையைப் பிடித்து சக்தி கூட்டிக் கொண்டு வந்தபடி அப்பத்தாவிடம் ஜனனியை என்னென்ன பேசுறாங்க தெரியுமா? அப்பத்தா, எனக்கு சங்கடமா இருக்கு என்று சொல்ல, இதுவெல்லாம் எந்த உரிமை கொண்டாடி பண்ணுகிற, புருஷன் என்கிற உரிமையிலையா? அப்படி என்று கேட்க, அதற்கு இது முடிவு பண்ணா போறது ஜனனி என்று சக்தி சொல்கிறார்.

ஜான்சி ராணியின் பதிலடி

ஜான்சி ராணியின் பதிலடி

அடுத்ததாக தனியாக நின்று கொண்டிருக்கும் குணசேகரனை பார்ப்பதற்காக ஜான்சி ராணியும் கரிகாலனும் வருகின்றனர். இப்போ உங்களுக்கு என்ன வேண்டும் என்று ஜான்சி ராணி சத்தமாக கேட்க, குணசேகரன் சத்தம் போடாதம்மா என் இடத்துக்கு வந்து இருக்க என்று சொல்ல, இந்த சவுண்டு விடுற வேலை எல்லாம் உங்க வீட்டு பொம்பளைங்களோட நிறுத்திக்கோங்க என்று மிரட்டுகிறார். இந்த பிரமோ தற்போது இன்றைய எபிசோடுக்கான ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+