ஜனனிக்கு வந்த போன் கால்..துடித்துப் போகும் குடும்பத்தினர்.. அலட்சியம் செய்த குணசேகரனுக்கு அதிர்ச்சி?
ஜனனிக்கு வந்த போன் கால் பற்றி கேட்டு குணசேகரன் வழக்கம்போல அலட்சியம் செய்கிறார்.
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி குணசேகரன் உடன் சேர்ந்து ஆதிரைக்கு எஸ்கேஆர் தம்பியுடன் தாம்பூல தட்டு மாற்றிவிட்டு காரில் வந்து கொண்டிருக்கிறார்.
ஜனனிக்கு தர்ஷன் போன் செய்து சொன்ன விஷயத்தை கேட்டு ஜனனி அதிர்ச்சியாகிறார்.
ஜனனி குணசேகரனோடு வீட்டிற்கு வராத விஷயத்தை கேட்டு குடும்பத்தில் இருக்கும் அனைவரும் பதறுகின்றனர்.

புரிஞ்சிக்கவே முடியலையே
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்த பல திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே ஆதிரையின் திருமணத்தில் ஆதிரைக்கு திருமணம் நடக்குமா? இல்லையா? என்று ஒரு பக்கம் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் குணசேகரன் சூழ்ச்சி என்ன என்பதை பற்றி புரிந்து கொள்ள முடியாமல் இருந்து வருகிறது. அதே நேரத்தில் குணசேகரனுக்கு சளைக்காமல் அப்பத்தாவும் பல விஷயங்களை செய்து வைத்துவிட்டு குணசேகரின் பேச்சுக்களுக்கு தற்போது சரி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதனால் அப்பத்தா என்ன செய்து வைத்திருக்கிறார் என்பதை பற்றியும் அறிந்து கொள்வதற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஜனனியோடு வாக்குவாதம்
இந்த நிலையில் மார்ச் 20 ஆம் நாளுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் எஸ்கேஆர் வீட்டிற்கு சென்று விட்டு காரில் வந்து கொண்டிருக்கும் ஜனனிக்கு திடீரென தர்ஷன் போன் செய்கிறார். தர்ஷன் எதற்காக போன் செய்கிறான் என்று குணசேகரன் கேட்க, அதற்கு தர்ஷன் போன் பண்ணுன விஷயத்தை சொல்கிறார். அடுத்து தர்ஷன் எதற்காக போன் பண்ணி சொல்கிறான் என்று குணசேகரன் கேட்க? இப்போ அதுவா முக்கியம் என்று ஜனனி கேட்க, எது முக்கியம் எது முக்கியம் இல்லை என்று எனக்கு நீ பாடம் நடத்த வேண்டாம் என்று குணசேகரன் சொன்னதும் நடுரோட்டில் ஜனனி காரில் இருந்து கீழே இறங்கி சென்று விடுகிறார்.

குணசேகரனின் அலட்சியம்
பிறகு வீட்டிற்கு வரும் குணசேகரனிடம் அப்பத்தா என்ன ஆச்சி போன விஷயம் எனக் கேட்க அது சக்சஸ் தான் என குணசேகரன் சொல்கிறார். பிறகு ஜனனி எங்கப்பா என்று கேட்க, ஜனனியை பற்றி குணசேகரன் சில விஷயங்களை சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதைக் கேட்டு குணசேகரன் ரொம்ப தான் பாசத்தில் எல்லாரும் பொங்காதீங்க என்று கூறுகிறார். இந்த பிரமோ தற்போது பரபரப்பையும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும் அதிகரித்திருக்கிறது.

இதுதான் நடக்குதா
இந்த நிலையில் ஏற்கனவே நேற்றைய எபிசோடில் ஈஸ்வரி தர்ஷினியின் ஸ்கூலுக்கு சென்று இருப்பதாக வீட்டில் அனைவரும் கூறினார்கள். அதே நிலையில் தற்போது தர்ஷன் போன் பண்ணி கூறியிருப்பதால் ஈஸ்வரிக்கு ஆக்சிடெண்ட் ஆகிவிட்டது என்றுதான் போன் வந்திருக்க வேண்டும். ஏற்கனவே ஈஸ்வரியாக நடிக்கும் கனிகாவிற்கு காலில் பிராக்சர் இருப்பதால் இந்த கேரக்டரோடு ஒன்றாகி போவதற்கு அவருக்கு ஆக்சிடென்ட் ஆகி இருப்பது போன்று தான் கதை போயிருக்க வேண்டும். அதைக் கேட்டு தான் ஜனனி பதறி காரில் இருந்து இறங்கி போய் இருக்க வேண்டும்.

அடுத்த ட்விஸ்ட் இதுதான்
அதனால்தான் குணசேகரனும் தர்ஷினியின் ஸ்கூலுக்குப் போன ஈஸ்வரிக்கு ஆக்சிடெண்ட் ஆகிவிட்டது என்பதை எதற்காக தர்ஷன் போன் செய்து சொல்கிறான் என்று கேட்டிருக்க வேண்டும். இதைப் பற்றி வீட்டில் சொன்னதால்தான் அனைவரும் பரபரப்பாக அதிர்ச்சி அடைகின்றனர். இந்த நிலையில் நடிகர்களின் நிஜ நிலைமையோடு தற்போது கதையை மாற்றி அமைத்து கொண்டு செல்ல எதிர்நீச்சல் டீம் இருக்கின்றனர் என்று தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications