குணசேகரனின் நடிப்பை கண்டுபிடித்த ஜனனி.. ஜான்சி ராணிக்கு தெரிய வந்த உண்மைகள்.. சந்தோஷத்தில் ஈஸ்வரி

குணசேகரன் டபுள் கேம் விளையாடுவதை ஜான்சி ராணி மறைந்து இருந்து பார்த்துக் விடுகிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் தன்னை ஏமாற்றிக் கொண்டிருக்கும் குணசேகரின் சூழ்ச்சியை ஜான்சி ராணி தெரிந்து கொள்கிறார்.

ஈஸ்வரிக்கு புதியதாக வேலை கிடைத்திருக்கிறது.

குணசேகரன் இடம் நந்தினி கேள்வி கேட்க துவங்கி இருக்கிறார்.

 புரிஞ்சிக்கவே முடியலையே

புரிஞ்சிக்கவே முடியலையே

எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்த பல எதிர்பாராத திருப்பங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்று பல யூகங்களும் ரசிகர்களின் மத்தியில் எழுத்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை புரிந்து கொள்ள முடியாத வகையிலே கதை நகர்ந்து வருகிறது. இதுவரைக்கும் குணசேகரன் எதற்காக டபுள் கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று ஒரு பக்கம் வீட்டில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களாலும் புரிந்து கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் அப்பத்தாவும் அவருக்கு ஈடு இணையாகவே தன்னுடைய செயலைப் பற்றி வெளியே சொல்லாமல் புதிய கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்.

குணசேகரனின் மாறாத குணம்

குணசேகரனின் மாறாத குணம்

அப்பத்தாவை புரிந்து கொண்ட ஜனனி நந்தினி மற்றும் ரேணுகாவிடம் அப்பத்தா எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும். அவர் ஏதோ ஒரு பிளான் வைத்து தான் இப்படி காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார். அதனால் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறி இருக்கிறார். இந்த நிலையில் எஸ்கேஆர் வீட்டுக்கு சம்பந்தம் பேச போன குணசேகரன் மற்றும் ஜனனி இருவரும் வீட்டிற்கு வரும் வழியில் ஈஸ்வரிக்கு காலில் அடிபட்டு இருக்கும் செய்தி கேட்டு குணசேகரன் எனக்கு சொல்லாமல் அது என்ன உனக்கு போன் பண்ணி தர்ஷன் சொல்கிறான். அந்த அம்மா ஹாஸ்பிடல்ல பொய் உக்காந்துகிட்டு நடிச்சுக்கிட்டு இருக்காளா? என்று வழக்கம்போல ஈஸ்வரியை திட்டிக் கொண்டிருக்கிறார்.

புடவை எடுக்க கிளம்பியாச்சு

புடவை எடுக்க கிளம்பியாச்சு

திருமணத்திற்கு புடவை எடுக்க வேண்டும் என்று அப்ப அப்பத்தா சொன்ன உடனே இன்றே கிளம்பி விடலாம் என்று குணசேகரன் சொன்னதை கேட்டு வீட்டில் இருப்பவர்களுக்கு சந்தேகம் வருகிறது. இவ்வளவு அவசர அவசரமாக வேலை பார்க்கிறாரே இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்று அவர்கள் புரிந்து கொண்டாலும் குணசேகரன் உடன் சேர்ந்து கடைக்கு துணி எடுக்க போவதற்கே பயந்து நாங்கள் வரவில்லை என்று நந்தினியும் ரேணுகாவும் சொல்லுகின்றனர். ஆனால் கண்டிப்பாக வரவேண்டும் என்று அப்பத்தா அனைவரையும் மிரட்டுகிறார்.

ரேணுகாவிற்கு கிடைத்த ஆஃபர்

ரேணுகாவிற்கு கிடைத்த ஆஃபர்

இந்த நிலையில் ரேணுகாவிற்கு வேலை கிடைத்திருக்கும் விஷயத்தை பற்றி ரேணுகா ஜனனியிடம் சொல்ல ஜனனி இது நல்ல ஆப்பர்சுனிட்டி இதைவிட வேண்டாம் இதில் நீங்கள் முயற்சி செய்து உங்களுடைய திறமையை காட்டுங்கள் என்று கூறுகிறார். பிறகு வீட்டில் இருக்கும்போது காலேஜிலிருந்து ரேணுகாவிற்கு போன் பண்ணி இன்றே ஆபீசுக்கு வர சொல்ல, நான் எப்படி இப்போ வர முடியும் வெளியே புடவை எடுக்க செல்ல வேண்டும் என்று ஈஸ்வரி சொல்ல, அதெல்லாம் நாங்க பாத்துக்கிறோம் நீங்க எப்படியாவது போங்க என்று நந்தினி, ரேணுகா, ஜனனி மூவரும் சொல்கின்றனர். எப்படி வெளியே கிளம்புவது என்று அவர்கள் யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஜான்சி ராணிக்கு வரும் சந்தேகம்

ஜான்சி ராணிக்கு வரும் சந்தேகம்

இந்த நிலையில் புடவை எடுக்கப் போக வேண்டும் என்பதை ஜான்சி ராணிக்கு போன் பண்ணி குணசேகரன் சொல்கிறார். துணிக்கடைக்கு வந்து விட வேண்டும் என்றும் ஆனால் எனக்கு போன் பண்ண வேண்டாம் நானே போன் பண்ணி கூப்பிட்ட பிறகு உள்ளே வந்தால் போதும் என்று ஜான்சி ராணியிடம் குணசேகரன் சொல்லி இருக்கிறார். இந்த நிலையில் ஜான்சி ராணி ஒரு நாள் குணசேகரன் அப்படிப் பேசுகிறான். ஒருநாள் இப்படி பேசுகிறான். இவனை புரிஞ்சிக்கவே முடியலை. ஆனா என்னை ஏமாத்துனானா அவனுக்கு நான் யாருன்னு காட்டுவேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+