ஜனனி கூறிய மோட்டிவேஷன்.. கட்சி மாறிய ஜான்சி ராணி..குணசேகரனுக்கு கிடைத்த அவமானம்..அடுத்த பிரச்சனை ரெடி
ஈஸ்வரி தன்னால் முடியுமா என திணறி இருக்கும் நேரத்தில் ஜனனி அவருக்கு அறிவுரை கொடுத்து தைரியம் கொடுக்கிறார்.
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரையின் திருமணத்திற்கு குணசேகரனோடு வீட்டு பெண்கள் டிரஸ் எடுக்க வந்திருக்கின்றனர்.
ஜவுளி கடையில் குணசேகரனுக்கு அடுத்தடுத்த அவமானங்கள் கிடைக்கிறது.
ஜான்சி ராணி தன்னை குணசேகரன் ஏமாற்றியதை தெரிந்து கொண்டு குணசேகரனுக்கு எதிராக செயல்பட இருக்கிறார்.

குழப்பும் குணசேகரன்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பல எதிர்பாராத திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. எதிர்பார்க்காத வகையில் ஆதிரைக்கு அவருக்கு பிடித்த அருணுடன் திருமணத்தை செய்து வைக்க சம்மதித்திருக்கிறார். இதை எதிர்பார்க்காத குடும்பத்தினர் குணசேகரனின் மீது சந்தேகத்தில் இருக்கின்றனர். அதே நேரத்தில் அப்பத்தாவுடைய 40% ஷேர் எனக்கு கிடைத்தால் தான் நான் ஆதிரையின் திருமணத்திற்கு சம்மதிப்பேன் என்று குணசேகரனும் சொன்னதால் அப்பத்தாவும் குணசேகரனின் கண்டிஷனுக்கு சரி என்று சொல்லி இருக்கிறார். ஆனால் குணசேகரன் வீட்டிற்கு தெரியாமல் ஜான்சிராணி இடம் ஆதிரையை கரிகாலனுக்கு தான் திருமணம் செய்து வைப்பேன் என்று வீடியோ மூலமாக உறுதி கொடுத்திருக்கிறார்.

ஈஸ்வரிக்கு கிடைத்த தைரியம்
இந்த நிலையில் ஈஸ்வரிக்கு காலில் அடிபட்டு இருக்கிறது. அதே நேரத்தில் ஈஸ்வரிக்கு தர்ஷன் படிக்கும் காலேஜில் வேலை கிடைத்திருக்கிறது. அதற்காக வீட்டில் சொல்லாமல் இன்டர்வியூவில் கலந்து கொள்வதற்காக ஈஸ்வரி தர்ஷன் காலேஜுக்கு சென்று இருக்கிறார். அந்த இடத்தில் இருந்து கொண்டு ஈஸ்வரிக்கு பதட்டம் ஏற்படவே ஜனனிக்கு போன் பண்ணி பேச, ஜனனி, பயந்து ஓடி வந்திட்டா திரும்ப நாலு செவத்துக்குள்ள முட்டிக்கிட்டு தான் நிக்கணும். என்ன செய்யணும் நீங்களே முடிவு எடுத்துக்கோங்க! என்று மோட்டிவேஷன் கொடுக்க, பயந்து கொண்டு இருக்கும் ஈஸ்வரிக்கு தைரியமாக மாறுகிறார்.

ஏமாத்திய ஜான்சி ராணி
ஏற்கனவே ஜனனிக்கு புதியதாக கம்பெனி கிடைத்திருக்கிறது. அந்த கம்பெனிக்கு பணம் கட்ட வேண்டிய இக்கட்டான சூழ்நிலையும் இருக்கிறது. ஆனால் அதைப்பற்றி யாரிடமும் பேசிக்கொள்ளாமல் ஜனனி ஆதிரை திருமணத்திற்காக புடவை எடுப்பதற்கு குணசேகரனோடு ஜவுளி கடைக்கு வந்து இருக்கிறார். ஏற்கனவே ஜவுளி கடைக்கு நாங்கள் வருகிறோம் என்று ஜான்சி ராணிக்கு போன் செய்த குணசேகரன் நான் சொன்ன பிறகு, கடைக்கு வந்தால் சரி என்று கூறியிருந்தார். அதற்கு முன்பே காத்துக் இருந்த ஜான்சி ராணி இடம் குணசேகரன் அப்படி இப்படி என்று ஜான்சி ராணியை அலையவிட்டு இருக்கிறார்.

குணசேகரனுக்கு கிடைத்த அவமானம்
குணசேகரனின் சூழ்ச்சியை தெரிந்து கொண்ட ஜான்சி ராணி என்னை தெரு தெருவா சுத்த விட்டுடான்ல, இனி ஜான்சி ராணி யார் என்று குணசேகரனுக்கு காட்டுகிறேன் என்று கடும் கோபத்தில் பேசிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் ஆதிரை எனக்கு கல்யாண புடவை ஜனனி அண்ணியே செலட் செய்யட்டும் என்று ஆதிரை சொல்ல, உங்களுக்கு எல்லாம் ஒரு விஷயம் தெரியுமா எஸ்கேஆர் வீட்டில் ஜனனியை தத்து எடுத்துட்டாங்க என்று குணசேகரன் சிரித்தபடியே சொல்ல, அதற்கு அரசு ஜனனிக்கு எங்க வீட்டில் உள்ள குணம் இருக்கு. தத்து எடுத்தா கூட தப்பு இல்லை என்று சொல்ல, குணசேகரனின் முகம் மாறுகிறது. தற்போது இந்த பிரமோ இன்றைய எபிசோடு காண ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications