வெளிச்சத்துக்கு வந்த குணசேகரனின் சூழ்ச்சி.. ஜனனி போடும் மாஸ்டர் பிளான்.. பதிலடி கொடுத்த ஆதிரை
குணசேகரன் ஜான்சி ராணியோடு ஜவுளி கடையில் இருப்பதை பார்த்து தாரா பாப்பா கேள்வி கேட்கிறார்.
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஜான்சி ராணி குடும்பத்தோடு நிச்சயதார்த்த புடவை எடுத்து இருக்கிறார்.
ஈஸ்வரி இரண்டாவது முறையாக தைரியமாக பேசி பலருடைய பாராட்டை வாங்குகிறார்.
ஜனனி ஆதிரை திருமண விஷயத்தில் எடுத்து வைக்கும் முடிவுகளால் குணசேகருக்கு சிக்கல் வர இருக்கிறது.

திருமணத்தில் தொடரும் பிரச்சனை
எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரையின் திருமண பிரச்சனை கடந்த ஒரு மாதமாகவே இழுத்துக்கொண்டு வருகிறது. இந்த சீரியலில் இதுவரைக்கும் ஒரு குடும்பத்திற்குள்ளே நடக்கும் சண்டைகள் பிரச்சனைகள் போட்டிகள் பற்றி இருந்து வந்த நிலையில் தற்போது ஆதிரை காதல் விஷயம் வீட்டிற்கு தெரிந்த நாளிலிருந்து அவருடைய திருமணம் நடைபெறுமா? இல்லையா? என்பது ஒரு கேள்விக்குறியோடு ஒவ்வொரு நாளும் நகர்ந்து வருகிறது.

ஜான்சி ராணியின் சபதம்
ஆரம்பத்தில் குணசேகரன் கரிகாலனுக்கு தன்னுடைய மகளை திருமணம் செய்து வைக்கிறேன் என்று சொல்லி, அதனால் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் சென்று பிரச்சனையான பிறகு, தன்னுடைய தங்கையை உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்று கரிகாலனை சமாதானப்படுத்தி வைத்திருக்கிறார். தற்போது கரிகாலனின் அம்மாவாக ஜான்சி ராணி தன்னுடைய மகனுக்கு ஆதிரையை திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் குணசேகரன் உயிரோடு இருக்க மாட்டான். அவருடைய சோலியை முடித்து விடுவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்.

மாட்டிக்கொண்ட குணசேகரன்
இந்த நிலையில் அப்பத்தாவின் ஷேர் 40% தன்னுடையதாக மாற்ற வேண்டும் என்பதற்காக குணசேகரன் ஆதிரை காதலிக்கும் அருணோடு திருமணம் செய்து வைக்கிறேன் என்று தன்னுடைய பகையையும் மறந்து எஸ்கேஆர் வீட்டில் சம்பந்தம் பேச போக, அங்கே அவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் குணசேகரனை குத்தி குத்தி காண்பித்து அவமானப்படுத்துகின்றனர். அத்தனை அவமானங்களையும் தாங்கி தனக்கு எப்படியாவது சொத்து வந்தாக வேண்டும் என்று தாங்கிக் கொண்டிருக்கும் குணசேகரன் தற்போது தாரா பாப்பாவிடம் மாட்டிக் கொள்கிறார்.

யாரோடு நிச்சயதார்த்தம்
ஏற்கனவே குணசேகரன் ஜான்சி ராணி இடம் கரிகாலனுக்கு தான் தன்னுடைய தங்கச்சி ஆதிரையை திருமணம் செய்து வைப்பேன் என்று வாக்கு கொடுத்திருக்கும் நிலையில் நிச்சயதார்த்த புடவை எடுப்பதற்காக ஜான்சி ராணியை துணி கடைக்கு வர வைத்திருக்கிறார். ஏற்கனவே அதே துணி கடைக்கு தன்னுடைய குடும்பத்தோடு ஆதிரை மற்றும் அருண் உடைய நிச்சயதார்த்தத்திற்கு புடவை எடுப்பதற்காக அதே கடைக்கு கூட்டி கொண்டு வந்திருக்கும் நிலையில் குணசேகரன் ஜான்சிராணி மற்றும் கரிகாலன் உடன் கடையில் அமர்ந்திருப்பதை தாரா பார்த்து யார் இவர்கள் என்று கேட்ட ஸ்பெஷல் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

அடுத்த பிரச்சனை ரெடி
இந்த நிலையில் ஜான்சி ராணி யோடு குணசேகரன் துணிக்கடையில் சந்தித்துக் கொண்ட விஷயங்கள் எல்லாம் ஜனனி மற்றும் அப்பத்தாவுக்கு தெரிய வர இருக்கும் நிலையில் அடுத்த பிரச்சனை தொடங்குகிறது. அதே நிலையில் ஏற்கனவே தவிப்பில் பயத்திலிருந்து ஈஸ்வரி இரண்டாவது முறையாக காலேஜில் மாணவர்களின் முன்னாடி நின்று பேசி விட்டார். இதனால் அவருக்கு காலேஜில் வேலை கிடைக்க இருக்கும் நிலையில் இனி அடுத்தது இதை வைத்து வீட்டில் என்ன மாதிரி பிரச்சனை வர இருக்கிறது என்று எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications