வெளிச்சத்துக்கு வந்த குணசேகரனின் முகம்... திட்டும் கதிர்.. கேள்வி எழுப்பும் நந்தினி மற்றும் ரேணுகா
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் மார்ச் 25ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
கேள்வி எழுப்பிய ஜனனியை கதிர் திட்டுகிறார்.
தன்னுடைய மனைவிக்கு ஆதரவாக சக்தி கதிரை திட்ட, குணசேகரன் சக்தியிடம் கேள்வி கேட்கிறார்.

தீராத ஆதிரை பிரச்சனை
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஒரு சில வாரங்களாகவே இப்போது ஆதிரையின் திருமண விஷயங்களை சுற்றி சுற்றி கதை நகர்ந்து கொண்டு வருகிறது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை யூகிக்க முடியாமலும் இப்போது என்ன செய்து வைத்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியாமலும் கதை நகர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் இன்றைய எபிசோடுக்கான பிரமோ வெளியாகி இருக்கிறது.

புரிஞ்சிக்க முடியலையே
ஏற்கனவே ஆதிரையின் நிச்சயதார்த்தத்திற்கு குணசேகரன் ஆதிரை மற்றும் அருணுக்கு பிடித்த மாதிரி ஒரு பக்கம் புடவை எடுத்து கொடுத்துவிட்டு, இன்னொரு பக்கம் கரிகாலன் மற்றும் ஜான்சிராணி யோடு ஆதிரைக்கு புடவை எடுத்து வைத்திருக்கிறார். அதனால் இனி என்ன நடக்கப்போகிறது என்ன மாதிரி பிரச்சனை எல்லாம் வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் இருக்கும் நிலையில் ஈஸ்வரி காலேஜ் சென்று வந்திருக்கும் செய்தி குணசேகரனுக்கு தெரியுமா? தெரியாதா? என்று ஒரு பரபரப்பு இருக்கிறது.

மாஸ் காட்டும் சக்தி
இந்த நிலையில் இன்றைய ப்ரோமோவில் அப்பத்தா எதையும் முறைப்படி செய்யனும் இல்ல என்று குணசேகரிடம் சொல்ல, இதெல்லாம் அந்த ராணி ஜனனி வேற என கதிர் கோபமாக பேசுகிறார். அப்போது வெளியே இருந்து வீட்டுக்கு வரும் சக்தி என் பொண்டாட்டியை பற்றி பேச உனக்கு என்ன உரிமை இருக்கு என்று கேட்கிறார்.

கேள்வி எழுப்பும் பெண்கள்
பிறகு குணசேகரன் சக்தி இப்போ நல்லா பேச கத்துக்கிட்டா என சொல்ல, நந்தினி பொண்டாட்டிய தப்பா பேசினா இப்படித்தான் கோபப்படனும் என்று சொல்ல, கதிர் ஏன் என்ன என்று கோபமாக கத்த, அதற்கு ரேணுகா ஏயி நிறுத்துப்பா எரிச்சலா இருக்கு என்று பேசி அனைவருக்கும் ஷாக் கொடுக்கிறார்.

கோபத்தில் குணசேகரன்
இவர்களை எல்லாம் பேசுவதை கேட்டு குணசேகரன் யாரை குத்தி காட்டுற என கேட்கிறார். முதல்முறையாக நந்தினி மற்றும் ரேணுகா குணசேகரனை எதிர்த்து பேசியதை பார்த்து அப்பத்தாவும் சந்தோஷப்படுகிறார். தற்போது இந்த பிரமோ வெளியாகி இன்றைய எபிசோடு காண எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது. ஒவ்வொரு முறையும் எஸ் கே ஆர் வீட்டில் குணசேகரன் அவமானப்பட்டாலும் அவர்கள் குத்தி காட்டினாலும் அதற்கெல்லாம் தக்க பதிலடி கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது தன்னுடைய வீட்டிலும் அது தொடர்வதை நினைத்து கோபத்தில் இருக்கிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications