பிளானை வொர்க் அவுட் செய்ய ஆரம்பித்த அப்பத்தா.. திணறும் குணசேகரன்.. அதிர்ச்சி கொடுத்த சக்தி
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் மார்ச் 28ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
ஆதிரையின் திருமண வரதட்சணையாக மொத்த ஷேரில் தங்களுக்கு 5% வேண்டும் என்று எஸ் கே ஆர் தம்பி டீல் பேசுகிறார்.
அனைவருடைய செயலைப் பார்த்து கோபத்தில் சக்தி புது முடிவு எடுக்கிறார்.

வீட்டிற்கு வந்த அரசு
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு தற்போது ரசிகர்களின் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. அந்த வகையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஆதிரையின் நிச்சயதார்த்த விஷயங்களை பற்றி பேசுவதற்காக எஸ் கே ஆர் தம்பி குணசேகரன் வீட்டிற்கு வந்திருக்கிறார்.

என்ன கேட்க போகிறார்
எஸ் கே ஆர் தம்பி அரசுவிடம் விசாலாட்சி அம்மா, உங்களுக்கு என்னென்ன வேண்டும் என்று நீங்கள் கேளுங்கள் என்று கூறுகிறார். அதற்கு அரசு அதைக் கேட்டு முடிவு பண்ணுவதற்காக தான் இங்கே வந்திருக்கிறோம் என்று சொல்கிறார். ஆனால் நீங்கள் நினைத்தபடி நிச்சயதார்த்த வேலைகளை பற்றி நான் எதுவும் கேட்கப் போவதில்லை என்று கூறியிருக்கிறார்.

சொத்து வேணுமாம்
அதற்கு குணசேகரன் வேற என்ன வேண்டும் என்று கேட்கிறார். அப்போது அரசு மொத்த சொத்தில் ஐந்து பங்கு உள்ளது. அதில் ஆதிரைக்கு ஒரு பங்கு வேண்டும் என்று கேட்கிறார். இதை எதிர்பார்க்காத குணசேகரன் ரொம்பவும் டென்ஷன் ஆகிறார்.. என்ன பேசுறோம் என்று யோசித்து பேசுங்க அரசு என்று சொல்கிறார். இதைத்தொடர்ந்து எஸ் கே ஆர் தம்பி அருள் எங்க அண்ணன் கேட்டது சரிதான் எனக்கும் அதில் உடன்பாடு இருக்கிறது என்று கூறுகிறார்.

புரிஞ்சிக்க முடியலையே
என்னதான் இருந்தாலும் அரசு குணசேகரன் திருமணத்திற்கு சம்மதம் சொல்வதற்கு முன்பே அப்பத்தாவின் ஷேர் எவ்வளவு இருக்கிறது. என்னென்னவெல்லாம் அவருடைய பெயரில் சொத்தாக வருகிறது என்பதை விசாரிக்க சொன்னார். அதனால் நிஜத்தில் குணசேகரனை பழிவாங்குவதற்காக ஆதரையை வைத்து பங்கு கேட்கிறாரா? அல்லது இது அப்பத்தாவின் பிளான் தானா? என்பது தெரியவில்லை.

சந்தேகம் வருகிறது
ஆனால் கண்டிப்பாக சொத்துக்காக இந்த மாதிரி பேசக்கூடிய ஆள் அரசு இல்லை என்றாலும் தற்போது அரசு குடும்பமும் மாறிவிட்டார்களா? என்று தான் சந்தேகப்பட தோன்றுகிறது. என்றாலும் இதற்கு குணசேகரின் முடிவு என்னவாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதில் 40% சொத்துக்காக இதுக்கு ஓகே தான் சொல்லப் போகிறார் ஆக இருக்கும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.

சக்தி கேட்பதும் சரிதானே
இந்த நிலையில் இதையெல்லாம் பார்த்து சத்தி ஜனனிடம் எல்லோரும் அவங்க அவங்க தேவையைகளை பற்றி யோசிக்கும் போது நாம் மட்டும் ஏன் நம்ம வாழ்க்கையை பற்றி யோசிக்காமல் கஷ்டப்படணும் என்று கேட்கிறார். இவர் கேட்பது சரியான கேள்வியாக இருந்தாலும் இதற்கு ஜனனி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏற்கனவே குணசேகரன் அண்ணன் தம்பி அனைவரிடமும் தோட்டத்தில் வைத்து ஒரு நாள் கையெழுத்து வாங்கி வைத்திருப்பதால் அனைத்து சொத்துக்களும் குணசேகரின் பெயருக்கு மாறி இருக்கும் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. ஆனாலும் பார்ப்போம் இனி என்ன நடக்க போகிறது என்பதை.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications