அப்பத்தா முன்பு ஜனனி செய்த சபதம்.. கதிர் கேட்ட கேள்வி..ஈஸ்வரியின் பதிலடி..சக்தி எடுக்கும் முடிவு?
சென்னை: அப்பத்தாவை நேரில் பார்த்த ஜனனி மீண்டும் உங்களை பழைய நிலைக்கு கொண்டு வந்து விடுவேன் என சபதம் போடுகிறார்.
அப்பத்தாவை பார்ப்பதற்கு இவள் யார் என்று கதிர் கேள்வி கேட்கிறார்.
அதற்கு ஈஸ்வரி என்னுடைய தங்கச்சி என்று உரிமையில் ஜனனி இருக்கிறார் என்று பதிலடி கொடுக்கிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் இன்றைய எபிசோடில் நடக்க இருக்கிறது. ஒரு பக்கம் குணசேகரனுக்கு எதிராக அப்பத்தா என்ன செய்து வைத்திருக்கிறார் என்று தெரியாமல் அனைவரும் இருக்கும் நிலையில், அப்பத்தாவை யாரும் சந்தித்து விடக்கூடாது என்று குணசேகரன் வீட்டிற்குள்ளேயே தனி அறையில் வைத்திருக்கிறார்.
கோமாவில் இருக்கும் அப்பத்தாவை கவனித்துக் கொள்வதற்காக நர்ஸ் கலைவாணியை வீட்டில் வைத்து வீட்டில் யாரும் அப்பத்தாவை பார்க்க கூடாது என்று கட்டளையையும் வைத்திருக்கிறார். குறிப்பாக ஜனனி அப்பத்தாவை பார்த்து விடக்கூடாது என்பதில் குணசேகரன் உறுதியாக இருக்கிறார். ஏற்கனவே 40 % ஷேர் உங்களுக்கு கிடைக்காது என்று ஜனனி கூறியதில் இருந்து அடுத்து என்ன செய்யலாம் என்று குணசேகரன் புது பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்.
பக்கத்தில் குணசேகரன் ஆதிரை மற்றும் கரிகாலனுக்கு திருமணத்திற்கு பத்திரிகையும் அடித்து பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்க, ஆதிரையும் அவருடைய அம்மாவும் அருணுடைய வீட்டில் சென்று திருமணத்தை நடத்தி வைத்து விட வேண்டும் என்று கெஞ்சி விட்டு வருகிறார்கள். அதே நேரத்தில் வீட்டில் இருக்கும் மருமகள்கள் அனைவரும் அருணை சந்தித்து புது பிளான் வேறு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் இன்று வெளியான பிரமோவில் யாருக்கும் தெரியாமல் அப்பத்தா வைத்திருக்கும் அறைக்குள் சென்ற ஜனனி, அப்பத்தான் முன்பு நின்று நான் உங்களை பழைய நிலைமைக்கு கொண்டு வந்து விடுவேன் அப்பத்தா, நீங்க என்னை ஜனனி என்று கூப்பிடுங்க அப்பத்தா என்று பேசிக் கொண்டிருக்க, பின்னாடியே வரும் கதிர் ஜனனி என்று நக்கல் செய்து அதிர்ச்சி கொடுக்கிறார்.
பிறகு ஜனனியை ரூமை விட்டு வெளியே இழுத்து வந்த கதிர் அங்கே அனைவரும் வந்த பிறகு இங்க பாருங்க அப்பத்தாவை யார் வேணாலும் இந்த வீட்டில் உள்ளவங்க பார்க்கலாம். ஆனா இந்த வீட்டுக்கு இவ யார்ரா? என்று ஜனனியை பார்த்து கேட்க? அதற்கு ஈஸ்வரி என்னுடைய தங்கச்சியா இந்த வீட்டில இருப்பா என்று கூற, அதற்கு கதிர் நக்கலாக ஓ என்று கூறுகிறார்.. சக்தி எதுவும் பேசாமல் முறைத்தபடி இருக்கிறார். இதனால் இன்றைய எபிசோடில் பெரும் பிரச்சனையும் வெடிக்க இருக்கிறது என்பது தெரிகிறது.












Click it and Unblock the Notifications