எதிர்நீச்சல் கௌதம் சுட்டது யாரை தெரியுமா? ஜீவானந்தம் அப்பத்தா சேவ்.. விழுந்த அந்த நபர்..?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நவம்பர் 10ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் அப்பத்தா தன்னுடைய 40% சொத்து யாருக்கு என்பதை பற்றி மேடையில் தெரிவித்து இருக்கும்போது அங்கு கௌதம் துப்பாக்கியால் சுடுகிறார்.

துப்பாக்கி சத்தம் கேட்டதும் கீழே விழுந்த நபரை பார்த்து மேடையில் இருந்த மொத்த குடும்பத்தினரும் பதறிப் போகின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் பெரும் எதிர்பார்ப்போடு இருந்த திருவிழா காட்சிகள் சில நாட்களாக இருந்து வருகிறது. கோவில் திருவிழாவில் வைத்து அப்பத்தாவையும் ஜீவானந்தத்தையும் போட்டு தள்ள வேண்டும் என்று குணசேகரன் பிளான் போட்டு இருந்த நிலையில் தன்னுடைய மனைவியை கொலை செய்த உண்மையை தெரிந்து கொண்ட ஜீவானந்தம் குணசேகரன் மற்றும் கதிரை போட்டு தள்ளுவதற்காக அதே கோவில் திருவிழா பங்க்ஷனுக்கு வந்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் ஜீவானந்தம் மனைவியை கொலை செய்தவரை பழிவாங்க வேண்டும் என்று கௌதமும் துப்பாக்கியோடு கோவிலில் சுத்திக் கொண்டிருக்கிறார். இப்படியாக இருக்கும் நிலையில் ஜீவானந்தத்தை ஈஸ்வரியோடு பார்த்த குணசேகரன் அப்போது அனைவர் முன்பு அமைதியாக ஈஸ்வரியிடம் நீ ஜீவானந்தத்திடம் பேசுவதற்காக தான் எனக்கு உடம்பு சரியில்லைன்னு பொய் சொன்னியா என்று கேட்கிறார்.

அதை தொடர்ந்து ஜீவானந்தத்தின் மகள் வெண்பா ஈஸ்வரியை அம்மா என்று அழைப்பதையும் குணசேகரன் தெரிந்து வைத்திருக்கிறார். எல்லாம் தெரிந்திருந்தும் அப்பத்தா பங்க்ஷன் முடியட்டும் அதற்கு பிறகு எல்லாவற்றிலும் சேர்த்து பார்த்துக் கொள்ளலாம் என்று பிளான் போட்டுக் கொண்டு இருக்கும் குணசேகரன் அப்பத்தா பங்ஷனுக்கு தன் தரப்பில் இருந்தும் ஜீவானந்தத்தை அழைத்து இருந்த இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரமோ வெளியாகி இருக்கிறது.
அதில் மேடையில் அப்பத்தா பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது நான் என்னுடைய 40% சொத்தை யாருக்கு கொடுக்கப் போகிறேன் தெரியுமா? என்று சில தகவல்களை சொல்ல அதைக் கேட்டு மேடையில் இருந்த வீட்டு மருமகள்கள் எல்லோரும் சந்தோஷம் அடைகின்றனர். ஆனால் கீழே அமர்ந்திருந்த குணசேகரனின் குடும்பம் அதிர்ச்சி ஆகிறது. அப்போது குணசேகரன் பக்கத்தில் இருந்த ஜான்சி ராணி அப்போ இந்த சொத்து நமக்கு இல்லையா என்று கேட்கிறார்.

அதைத் தொடர்ந்து அப்பத்தா, ஜீவானந்தத்திற்கு என்னுடைய பேரன் குணசேகரன் நினைவு பரிசு வழங்குவார் என்று சொல்ல குணசேகரன் மேடைக்கு போகிறார். அப்போது அங்கு தயாராக இருந்த கௌதம் மேடையை நோக்கி சுடுகிறார். அதில் ஒரு நபர் கீழே விழவும் மொத்த குடும்பமும் பதறுகிறது.
இப்படியாக ஒரு ப்ரோமோ முடிவு அடைந்து இருக்கிறது. அதை தொடர்ந்து ஸ்பெஷல் ப்ரோமோ ஒன்றும் வெளியாகி இருக்கிறது. அதில் உண்மை தெரிந்த கௌதம் கதிரையும் குணசேகரனையும் கொள்ளாமல் விடமாட்டேன் என்று சொல்லிட்டு போயிருக்கிறான் விஷயம் தெரியாம எதுவும் பண்ணிறாதடா கௌதம் என்று அந்த பிரமோவில் ஜீவானந்தம் பேசிக் கொண்டிருக்கும்போதே துப்பாக்கி சத்தம் கேட்க, ஒரு நபர் கீழே விழுகிறார்.
அதை எல்லோரும் பதறிப் போய் பார்க்கின்றனர். அப்போது ஜீவானந்தமும் அங்கு நல்லபடியாகத்தான் நிற்கிறார். அதே நேரத்தில் மேடையில் குணசேகரன் சால்வை போடும் போது போல காட்டப்பட்டது. இப்படியாக இருக்கும் நிலையில் எல்லோருடைய கண்களும் மேடையில் கீழே தான் பார்வை போகிறது.
அதுபோல ஜான்சி ராணியும் தனக்கு முன்பு இருந்த ஆளை தான் பார்க்கிறார். அப்படி என்றால் அந்த இடத்தில் கதிர் தான் இருந்திருந்தார். அதனால் கௌதம் சுட்டது கதிராகத்தான் இருக்கும். இந்த பிரச்சனையில் அப்பத்தாவுக்கும் ஜீவானந்தரத்திற்கும் எதுவும் ஆகவில்லை என்பதால் சுடப்பட்டது கதிர் அல்லது ஒருவேளை குணசேகரன் ஆக கூட இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எதுவாக இருந்தாலும் இன்னும் சில மணி நேரத்தில் ரகசியம் வெளிப்பட்டுவிடும். ஆனால் நீங்கள் கௌதம் சுடப்போகிறவர் யார் என்று உங்களுக்கு தோன்றுகிறதோ அதை சொல்லுங்கள்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications