Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எதிர்நீச்சல்: அப்பத்தா பற்றி ஜீவானந்தம் சொன்ன விஷயம்.. போலீஸ் கொடுத்த அதிர்ச்சி.. கதறி அழும் ஜனனி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நவம்பர் 15ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் அப்பத்தா இறந்து போய்விட்டார் என்று ஞானம் கூறி இருந்த நிலையில் அதைப்பற்றி சக்தி மற்றும் ஜனனி இருவரும் போலீசில் விசாரிக்கின்றனர்.

Ethirneechal Serial 2023 November 15th promo full update

அதே நேரத்தில் ஈஸ்வரி ஜீவானந்தத்தை தேடி போயிருந்த நிலையில் ஜீவானந்தம் ஈஸ்வரியிடம் தான் சொல்லும் இடத்திற்கு வர வேண்டும் என்று தகவல் கூறுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் நேற்றைய எபிசோட்டில் வீட்டில் பெண்கள் எல்லோரும் அப்பத்தாவை காணவில்லையே என்று தேடிக் கொண்டிருந்தனர். அப்போது கதிர், ஞானம், கரிகாலன் மூன்று பேரும் வீட்டிற்கு ஈரத்துணியோடு நெற்றியில் விபூதி வைத்துக்கொண்டு அழுதபடியே வந்திருந்த நிலையில் வீட்டில் எல்லோரும் என்ன ஆச்சு அப்பத்தாவை காணவில்லை மூத்தவரையும் காணவில்லையே என்று விசாரிக்கும் போது முதலில் எந்த பதிலும் சொல்லாமல் கதிர் மற்றும் கரிகாலன் ஞானம் மூவருமே அழுது கொண்டிருந்தனர்.

Ethirneechal Serial 2023 November 15th promo full update

பிறகு ஞானம் அப்பத்தா போய்விட்டார் ஒரேடியா போய்விட்டார். நாங்க ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயிட்டு இருக்கும்போது எங்க காரைநோக்கி சிலர் சுட்டாங்க. அதனால அது யாருன்னு பார்க்கிறதுக்காக அண்ணன் சொல்லி நாங்களும் காரை விட்டு இறங்கி எல்லோரும் தேடிப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

அப்போது அப்பத்தா இருந்த கார் வெடித்து சிதறி மொத்தமா தீப்பிடிச்சு போயிடுச்சு. அப்பத்தாவோட உடம்பு எதுவுமே கிடைக்கல. அங்க சின்ன சின்னதா சிதறி போய் இருந்த பாகங்களை எடுத்துக் கொண்டு அண்ணன் காசியில் அப்பத்தாவை கரைக்க போய் இருக்காரு என்று அழுதப்படியே சொல்ல அதைக் கேட்டு வீட்டு மருமகள் எல்லோரும் அழுது கொண்டிருந்தனர்.

Ethirneechal Serial 2023 November 15th promo full update

அதோடு கதிர் இத்தனை பிரச்சனைக்கு காரணம் ஈஸ்வரியின் கள்ளக்காதல் தான். அவனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததுனாலதான் இவ்வளவு பிரச்சனை. அவன் தான் சொத்துக்காக அப்பத்தாவை கொலை செஞ்சுட்டான் என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்க, அதற்கு சக்தி ஈஸ்வரிக்கு சாதகமாக கதிரை அடிக்க பாய அப்போது ஞானம் ஜீவானந்தம் நல்லவன்னா நீங்க போன் பண்ணுங்க அவன் இப்போ இங்க வரட்டும் என்று சொல்ல, அதற்கு ஜனனி போன் போட்டு பார்க்க ஜீவானந்தம் போனை எடுக்கவில்லை.

அதைத்தொடர்ந்து ஜனனியும் சக்தியும் இதை நாங்க நம்ப மாட்டோம் நாங்க போலீஸ்ல விசாரிச்சிக்கிறோம் என்று போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிருந்தனர். அப்போது ஈஸ்வரி ஜீவானந்தத்தை பார்ப்பதற்காக வீட்டை விட்டு அவசரமாக கிளம்பி போயிருந்தார். இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் போலீஸ் இடம் ஜனனி மற்றும் சக்தி இருவரும் அப்பத்தா பற்றி விசாரிக்கின்றனர்.

Ethirneechal Serial 2023 November 15th promo full update

அதோடு அப்பத்தா கார் எரிஞ்ச இடம் எங்க இருக்கு அதை நாங்க பார்க்கணும் என்று சக்தி போலீஸிடம் விசாரிக்க அவர்கள் சில தகவல்களை கூறுகின்றனர். அதே நேரத்தில் வீட்டில் நந்தினி மற்றும் ரேணுகா இருவரும் அப்பத்தாவை நினைத்து கதறி அழுது கொண்டிருக்கின்றனர். மறுபக்கத்தில் ஈஸ்வரி பர்ஹானாவை சந்தித்து பேசிக்கொண்டு இருக்கும்போது ஈஸ்வரி ஃபோனுக்கு ஒரு போன் வருகிறது. அதில் ஜீவானந்தம் நான் உங்களுக்கு ஒரு லொகேஷன் அனுப்புறேன் நீங்க கிளம்பி வாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அதை தொடர்ந்து சக்தி மற்றும் ஜனனி இருவரும் அப்பத்தா கார் எரிந்த இடத்தில் நின்று அழுது கொண்டிருக்கிறனர். இந்த நிலையில் அப்பத்தாவிற்கு எதுவும் ஆகி இருக்காது குணசேகரன் பிளான் படி அப்பத்தாவை போட்டு தள்ளுவதற்கு முன்பே ஜீவானந்தம் அப்பத்தாவை கடத்திக் கொண்டு போய் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் என்ன நடக்கப்போகிறது என்று பார்ப்போம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+