பரபரப்பில் எதிர்நீச்சல்.. காணாமல் போன ஜீவானந்தம்.. ஈஸ்வரியை தேடி வந்த வெண்பா.. மாட்டிக்கொள்ளும் கதிர்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்புக்கு வரும் எதிர்நீச்சல் சீரியலில் நவம்பர் ஒன்றாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இதில் ஜீவானந்தத்தின் நம்பர் சுவிட்ச் ஆப்பில் இருக்கிறது என்று அப்பத்தா சொல்ல அதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சடைகின்றனர்.

அதே நேரத்தில் கௌதம் தான் கதிரை கடத்தியது என்று குணசேகருக்கு தெரியவரும் நிலையில் கதிர் பற்றிய ரகசியத்தை கரிகாலன் போட்டு உடைக்கிறார்.
இந்த நிலையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்ப்போம். எதிர்நீச்சல் சீரியலில் பலரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த கோவில் திருவிழா தொடங்கியிருக்கும் நிலையில் அடுத்து அடுத்து எதிர்பாராத நிகழ்வுகள் வந்து கொண்டிருக்கிறது. அதுவும் கதிர் கௌதமிடம் மாட்டியதும் அவருடைய கதை முடிந்தது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் கடைசியில் ஏமாற்றம் கிடைக்க வைத்து விட்டனர்.

அதே நேரத்தில் கதிர் அடிப்பட்டு வந்திருக்கும் செய்தியை கேட்ட பிறகும் நந்தினி அலட்சியமாக இருந்தது, அவருக்குள் இருக்கும் வெறுப்பை காட்டியது. ஏற்கனவே நான் சொன்னது இப்போது நடந்து விட்டது என்று நேற்று ஈஸ்வரியும் ரேணுகாவும் கதிரை போய் பாரு என்று சொல்லும்போது கூட நந்தினி அசால்ட்டாக சொல்லி இருந்தார். அதே நேரத்தில் குணசேகரன் நடந்து கொள்ளும் விதம் குறித்து தர்ஷன் தன்னால் இனி அமைதியாக இருக்க முடியாது என்று கோபமாக பேசியிருந்தார்.
இப்படியாக நேற்றைய எபிசோடு இருந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அப்பத்தா ஜீவானந்தத்தை பங்க்ஷனுக்கு கூப்பிட்டு இருந்தேன். ஆனால் என்ன ஆச்சுன்னு தெரியல, சுவிட்ச் ஆஃப் என்று வருகிறது. உனக்கு ஏதாவது தெரியுமா? என்று அப்பத்தா ஈஸ்வரியிடம் கேட்கிறார். அதைத்தொடர்ந்து குணசேகரனிடம் கரிகாலன் இந்த கௌதம் பையன் இவரை கடத்தினது தானே உங்களுக்கு தெரியும்.

இவர் எப்படி போனார் என்று உங்களுக்கு தெரியுமா? என்று போட்டுக் கொடுக்கிறார். அடுத்ததாக சக்திக்கு ஒரு போன் வருகிறது ஃபோனை ஈஸ்வரி இடம் சக்தி கொடுக்க அதில் பர்ஹானா பேசுகிறார். நாங்கள் இப்போ உங்க வீட்டு வாசலில் தான் நிற்கிறேன். நீங்க கொஞ்சம் வெளியே வர முடியுமா என்று கேட்கிறார். அப்போது வீட்டு மருமகள் எல்லோரும் வெளியே வாசலில் சென்று பார்க்க காரில் பர்ஹானா நிற்கிறார்.
காருக்குள் ஒரு நபர் இருக்கிறார். ஈஸ்வரி காரில் இருக்கும் நபரோடு பேசுகிறார். அதை மறைந்து இருந்து ஜான்சி ராணி பார்த்து விடுகிறார். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்து இருக்கிறது. அதே நேரத்தில் ஈஸ்வரியை தேடி வெண்பா தான் வந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் பர்ஹானாவிடம் வெண்பாவை ஜீவானந்தம் விட்டு விட்டு சென்றிருப்பார்.

அப்போதும் வெண்பா நான் ஈஸ்வரி அம்மாவை பார்க்க வேண்டும் அவரோடு போகிறேன் என்று கூறிக் கொண்டிருந்தார். அதனால் அவர்தான் வந்திருக்க வேண்டும். அதே நேரத்தில் இப்போது ஈஸ்வரி வெண்பாவோடு பேசுவதை ஜான்சி ராணி பார்த்தால் இது ஜீவானந்தத்தின் குழந்தைதான் என்பது மொத்த குடும்பத்திற்கும் தெரியவரும். அதனால் இனி என்ன பிரச்சனை நடக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
அதே நேரத்தில் ஒரு வேலை கௌதம் கதிரை கடத்தியது போல ஜீவானந்தத்தை வேறு எதுவும் ஸ்கெட்ச் போட்டு குணசேகரன் தூக்கி விட்டாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இனி என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். சில நேரங்களில் இவர்கள் இவ்வளவு பில்டப் கொடுத்து விட்டு கடைசியில் புஸ் என்று ஆக்கி இருக்கிறார்கள். அதுபோல இப்போதும் அதிகமாக பில்டப் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்ப்போம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications