எதிர்நீச்சல்: மீண்டும் வந்த அப்பத்தா.. கோர்ட்டில் அதிர்ச்சி கொடுத்த ஜீவானந்தம்.. செம ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நவம்பர் 22ஆம் தேதிக்கான எபிசோடு ஒளிபரப்பாகி இருந்தது.

ஜெயிலில் இருக்கும் ஜீவானந்தம் கோர்ட்டில் முக்கிய முடிவு எடுத்திருப்பது சக்தி மற்றும் ஜனனிக்கு தெரிய வந்திருக்கிறது.

Ethirneechal Serial 2023 November 22th episode full update

அதுபோல அப்பத்தா ஏற்கனவே பேசிய பழைய நினைவுகள் எல்லாம் ஈஸ்வரி நினைத்து பார்த்து முக்கிய முடிவு எடுத்திருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் நேற்றைய எபிசோடில் யாரும் எதிர்பார்க்காத பல நிகழ்வுகள் நடைபெற்றது. அதில் குணசேகரன் தேர்தலில் நிற்க போகிறேன் என்று சொல்ல அவரை எதிர்த்து எஸ்கேஆர் குடும்பத்தினர் நிற்பார்கள் என்று எல்லோரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் எஸ் கே ஆர் குடும்பத்தினர் நாங்கள் இந்த தேர்தலில் நிற்கவில்லை என்று என்று எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்திருந்தனர்.

அதோடு ஜீவானந்தம் அப்பத்தாவை கொலை செய்திருக்க மாட்டார். ஏற்கனவே ஜீவானந்தத்தை பற்றி எனக்கு தெரியும் அவர் ரொம்ப நல்ல மனுஷன் என்று எஸ் கே ஆர் சொல்ல அதைக் கேட்டு கரிகாலன் உட்பட ஞானமும் அதிர்ச்சி அடைந்தனர். அதைத்தொடர்ந்து வீட்டில் ஜனனி சக்தியிடம் அப்பத்தா விஷயத்தில் உன்னுடைய அண்ணன் தப்பு பண்ணி இருக்கிறார் என்று தெரிந்தால் இது போலவே எனக்கு சப்போர்ட் பண்ணுவியா என்று கேட்கிறார்.

அதற்கு சக்தி ஏற்கனவே எங்க வீட்டுல உள்ளவங்களால ஒரு அப்பாவி பொண்ணோட உயிர் போயிட்டு. அந்த ஜீவானந்தத்தோட மனைவியை என் அண்ணன்களே கொன்னுட்டானுக. நான் அப்பவே அவங்களுக்கு சரியான தண்டனை வாங்கி கொடுத்து இருந்தா இப்ப அப்பத்தா நம்ம விட்டு போய் இருக்க மாட்டாங்க. அதனால அப்பத்தாவுக்கு கண்டிப்பா நான் நியாயம் வாங்கி கொடுப்பேன் என்று கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து ஈஸ்வரி காலேஜுக்கு போயிருந்த இடத்தில் அங்கு ஜீவானந்தத்தால் தான் தனக்கு வேலை கிடைத்திருக்கிறது என்பது தெரிய வருகிறது. அதுபோல அப்பத்தா ஏற்கனவே பேசிய வார்த்தைகளை எல்லாம் நேற்று ஈஸ்வரி மீண்டும் நினைத்து பார்த்துக் கொண்டிருந்தார். பல நாட்களுக்கு பிறகு அப்பத்தாவை பார்த்த ரசிகர்களுக்கும் இது மகிழ்ச்சியை கொடுத்திருந்தது.

அதுபோல அதைத் தொடர்ந்து கோர்ட்டில் ஜீவானந்தத்தை வெளியே எடுக்க வக்கீல் இடம் பேசுவதற்காக சக்தி மற்றும் ஜனனி போயிருந்த நிலையில் ஜீவானந்தம் தன் தரப்பில் வக்கீல் எதுவும் நியமிக்காமல் தானே வாதாடி கொள்வதாக கோர்ட்டில் கூறியிருக்கிறார்.இது தெரிந்ததும் தவறு என்று சொல்வதற்காக சக்தி மற்றும் ஜனனி முயற்சி செய்கின்றனர்.

ஆனால் ஜீவானந்தம் இவர்களிடம் பேசாமல் புறக்கணித்துவிட்டு கோர்ட்டுக்குள் போய்விடுகிறார். இதனால் சக்தி மற்றும் ஜனனி இருவரும் நீங்கள் வெளியே வரும் வரைக்கும் நாங்கள் இந்த இடத்தை விட்டு போக மாட்டோம் என்று கோர்ட் வாசலில் காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படியாக நேற்றைய எபிசோடு முடிவடைந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+