எதிர்நீச்சலில் அதிரடியாக மாற்றப்பட்ட கதைக்களம்.. சாருபாலாதான் இனி வில்லியே.. இனி கதை இதுவா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நவம்பர் 27ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் குணசேகரன் தன்னை எதிர்த்து தேர்தலில் நிற்கும் சாரு பாலாவை தோற்கடிப்பதற்காக புது பிளான் போடுகிறார்.

அதே நேரத்தில் வழக்கம் போல ஜனனி குணசேகரனிடம் நாங்க தான் ஜெயிக்கப் போறோம் என்று சபதம் போட்டுக் கொண்டிருக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத திருப்பங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே அப்பத்தா நிலைமை என்ன ஆனது என்று கேள்வி எல்லோருக்கும் இருக்கிறது. ஒரு பக்கம் அப்பத்தா இன்னும் உயிரோடுதான் இருக்கிறாரா என்ற கேள்வி இருக்கிறது. அதேபோல அப்பத்தாவை ஒரு வேளை ஜீவானந்தம் மறைத்து வைத்திருக்கிறாரா? அல்லது குணசேகரன் மறைத்து வைத்திருக்கிறாரா? என்ற கேள்விகளும் இருக்கிறது.

இந்த நிலையில் அப்பத்தா ஆசைப்பட்டபடி வீட்டு பெண்கள் தங்களுடைய வாழ்க்கையில் இனி பயணத்தை தொடங்கி விட்டார்கள் என்று நினைத்திருந்த நேரத்தில் அந்த முயற்சியிலும் குணசேகரன் தடை கற்களை அள்ளி வீசி இருக்கிறார். ஜீவானந்தம் சொன்ன மாதிரியே ஈஸ்வரிக்கு காலேஜில் வேலை கிடைத்திருந்த நிலையில் தான் இனி வேலைக்கு செல்வது உறுதி என்று வீட்டை விட்டு கிளம்பி கெத்தாக போயிருந்த ஈஸ்வரியை காலேஜுக்கு போய் அனைவர் முன்பும் குணசேகரன் அவமானப்படுத்தி இருந்தார்.

அதனால் ஈஸ்வரி வேறு வழி இல்லாமல் இந்த கல்லூரியில் இனி என்னால் வேலை பார்க்க முடியாது என்று கிளம்பி வந்துவிட்டார். இதனால் கடுப்பான ஜனனி வழக்கம் போல தற்போது வெளியான ப்ரோமோவில் குணசேகரிடம் வாக்குவாதம் செய்கிறார். அதில் மிஸ்டர் குணசேகரன் நீங்க செஞ்ச காரியத்தால் நீங்க இந்த வீட்டுக்குள்ளேயே நாங்க முடங்கிடந்து விடுவோம் என்று மட்டும் நினைக்காதீங்க.

இனிமேல் தான் நாங்கள் வேகமாக செயல்படுவோம் என்று கூறுகிறார். அதைத் தொடர்ந்து குணசேகரனுக்கு இன்னொரு அதிர்ச்சியான செய்தி வருகிறது. அதாவது பிசினஸ் எலக்ஷனில் எஸ் கே ஆர் குடும்பத்தின் சார்பாக சாருபாலா குணசேகரை எதிர்த்து போட்டியிட போவதாக தகவல்களை சிலர் தெரிவிக்கின்றனர்.
இதனால் கோபமான குணசேகரன் சாருபாலாவை எதிர்த்து நிற்க வேண்டும் என்றால் இவள் ஒருத்தியால் தான் முடியும் என்று ஈஸ்வரியை பற்றி பேசுகிறார். இதனால் குணசேகரன் இனி எலெக்ஷனில் ஈஸ்வரியை இறக்க வைக்க போகிறார். அதே நேரத்தில் இனி ஈஸ்வரி எலெக்ஷனில் ஜெயித்து தன்னுடைய திறமையை காட்ட இருக்கிறாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இனி ஈஸ்வரி எலக்ஷனில் ஜெயித்து குணசேகரனை இனி ஆட்டி படைக்க வேண்டும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கும் நிலையில் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications