எதிர்நீச்சல்: நந்தினியால் குணசேகரனுக்கு விழுந்த இடி.. வீட்டுக்கு வந்த நபர் .. எதிர்பாராத திருப்பம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நவம்பர் இரண்டாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இதில் வெண்பாவை ஈஸ்வரி வீட்டிற்கு கூட்டிட்டு வந்தது குறித்து விசாலாட்சி கேள்வி கேட்கிறார். அதை தொடர்ந்து கிள்ளி வளவனோடு குணசேகரனும், கதிரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இதை நந்தினி பார்த்துவிட அதை குணசேகரனும் பார்த்து அதிர்ச்சி ஆகிறார். இந்த நிலையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்ப்போம்.
அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் கோவில் திருவிழா பங்க்ஷன் தொடங்கி இருக்கிறது. அப்பத்தா ஊர் திருவிழாவிற்கு மொத்த குடும்பமும் வந்திருக்கின்றனர். அதில் ஜீவானந்தத்தை போட்டு தள்ள வேண்டும் என்று குணசேகரனும் கதிரும் ப்ளான் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் கதிரை கௌதம் பூங்குழலி என்ற பெண் மூலம் கடத்தி வைத்திருந்தார்.
ஆனால் எதிர்பாராத விதமாக அங்கு போலீஸ் வந்து விட்டதால் கதிர் அங்கிருந்து தப்பித்து இருந்தார். இந்த நிலையில் இது பற்றி எல்லாம் தெரிந்த குணசேகரன் நமக்கு முன்பு ஜீவானந்தம் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறான். அவனை சும்மா விடக்கூடாது என்று பேசிக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் வெண்பா தான் ஈஸ்வரியை பார்க்க வேண்டும் என்று அழுது கொண்டு இருந்த நிலையில் இரவு தூங்கும் நேரத்தில் கட்டிலில் இருந்து கீழே விழுந்ததால் வெண்பாவிற்கு அடிபட்டு இருக்கிறது.

அதனால் பர்ஹானா வெண்பாவை கூட்டிக்கொண்டு அப்பத்தாவின் ஊருக்கே வந்திருக்கிறார். இதை ஜான்சி ராணி பார்த்து விட்டார். ஈஸ்வரி ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டு போவதை பார்த்த ஜான்சி ராணி அது யார் குழந்தை என்பதை பார்க்கவில்லை என்ற நிலையில் அதைப் பற்றி விசாரிப்பதற்காக நேற்றைய எபிசோடில் கதவைத் தட்டி வீட்டிற்குள் அறைக்குள் வந்து பேசிக் கொண்டிருந்தார்.
அந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் விசாலாட்சியை கூட்டிக்கொண்டு வந்து இவர்களிடம் பஞ்சாயத்துக்கு நிற்க வைக்கிறார். அப்போது விசாலாட்சி ஒரு குழந்தையை நீங்க தூக்கிட்டு வந்தீங்கலாமே அது யாரு என்று கேட்க வீட்டு மருமகள் எதுவும் பேசாமல் முழித்துக் கொண்டிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து கிள்ளிவளவனிடம் குணசேகரனும் கதிரும் பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்போது உனக்கு ஜீவானந்தத்தை பற்றி முழுசா தெரியல பார்த்துக்கோ என்று கிள்ளிவளவன் குணசேகரனிடம் சொல்ல, அதற்கு குணசேகரன் "அவன் வர்றது என் மண்ணுக்கு மண்ணோடு மண்ணாக தான் போவான். அவன் திரும்பி ஊருக்கு போக மாட்டான்" என்று மிரட்டுகிறார். அப்போது கதிர் நா முடிச்சு காட்டுறேன் அண்ணே என்று சொல்ல, இவர்கள் மூவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது அந்தப் பக்கமாக வந்த நந்தினி இவர்கள் பேசுவதை பார்த்து யார் இந்த ஆளு புதுசா இருக்கு என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது நந்தினி பார்ப்பதை கதிரும் குணசேகரனும் பார்த்து விடுகின்றனர். இந்த நிலையில் இனி என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீரியலில் எப்போதுமே வில்லன் ஜெயித்துக் கொண்டிருப்பதால் வில்லன் தான் ஹீரோ என்று மக்கள் மனதில் பதிகிறது.
அதனால் தவறானவர்களே எப்போதும் ஜெயித்துக் கொண்டிருப்பது போன்று காட்சி வைக்காமல் கதையை மாற்றினால் நன்றாக இருக்கும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதே நேரத்தில் ஆரம்பத்தில் இருந்த விறுவிறுப்பு இப்போது சீரியலுக்கு இல்லை என்பது பலருடைய கமெண்டாகவும் இருக்கிறது.
அதுபோல இந்த சீரியலில் இனி எப்போதான் திருவிழா ஸ்டார்ட் பண்ணுவீங்க இப்படியே வம்பு கதை பேசிக்கிட்டே இருக்கீங்களே? ஏற்கனவே காரில் பல நாட்களாக சுற்றிக் கொண்டிருந்தீங்க, இப்போ ஊருக்கு வந்து திருவிழா இன்னும் தொடங்கப்படவில்லை என்று பலர் தங்களுடைய வருத்தங்களை கமெண்ட்டுகளில் கொட்டுகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications