எதிர்நீச்சல்: குணசேகரனுக்கு வீடியோ மூலம் ஆப்பு வைக்கும் ஜீவானந்தம்.. கோபத்தில் சக்தி கேட்ட கேள்வி
அதில் ஈஸ்வரி ஜீவானந்தத்தோடு கோவில் திருவிழாவில் பேசிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் ஜீவானந்தனின் மகள் வெண்பா பற்றி ஜான்சி ராணி குணசேகரனிடம் போட்டுக் கொடுக்கிறார்.

அதுபோல ஜான்சி ராணி ஓவராக சவுண்ட் விட்டு சக்தி இடம் வாங்கி கட்டிக் கொள்கிறார். சக்தி கேட்ட கேள்வியை பார்த்து மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகி இருக்கின்றனர். இந்த நிலையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்ப்போம்.
அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று யூகிக்க முடியாத வகையில் கதை பயணித்துக் கொண்டிருக்கிறது. சில மாதங்களாகவே கோவில் திருவிழாவை மையமாகக் கொண்டு கதை நகர்ந்து வந்த நிலையில் இப்போது கோவில் திருவிழா தொடங்கியிருக்கிறது.
அதில் யார் யாரை பழிவாங்க போகிறார்கள் என்று எதிர்பார்ப்பும் குழப்பமும் ரசிகர்களுக்கு இருக்கிறது. ஒரு பக்கம் ஜீவானந்தம் போன் சுவிட்ச் ஆப்பில் இருக்கிறது. அதனால் ஜீவானந்தத்திற்கு என்ன ஆனது என்று அப்பத்தா முதல் குணசேகரனின் வீட்டில் இருக்கும் பெண்கள் அனைவரும் குழப்பத்தில் பயந்து கொண்டிருக்கின்றனர்.
அதே நேரத்தில் ஜீவானந்தம் மனைவியை கொன்றது நம்மதான் என்ற உண்மை ஜீவானந்தத்துக்கு தெரிந்ததுதான் சந்தோஷம் என்று மமதையில் குணசேகரனும், கதிரும் இருக்கின்றனர். இதனால் குணசேகரனால் ஜீவானந்தம் உயிருக்கு ஆபத்து வர போகுதா அல்லது ஜீவானந்தம் மற்றும் கௌதமால் குணசேகரன் மற்றும் கதிர் உயிருக்கு ஆபத்து வரப்போகிறதா என்ற பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அப்பத்தா வீட்டில் இருந்து எல்லோரும் கோவிலுக்கு கிளம்பி கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் ஜான்சி ராணி குணசேகரனிடம் மண்டையில் ரெண்டு தட்டு தட்டி நான் கூட்டிட்டு வாரேன் நீங்க கிளம்புங்க அண்ணே என்று சொல்ல, அதனால் கோபமான சக்தி நாங்க ஏறுற கார்ல நீ கால் எடுத்து வச்சேன்னு வச்சுக்க கால ஒடச்சிபுடுவேன் என்று கையை நீட்டி பேசுகிறார்.
அதைத் தொடர்ந்து ஜான்சி ராணி குணசேகரன் குரூப்போடு காரில் வந்து கோவில் திருவிழாவில் இறங்கி இருக்கிறார். அங்கு நடந்து போய் கொண்டு இருக்கும்போது ஜான்சி ராணி குணசேகரனிடம் உன் பொண்டாட்டி ஒரு பிள்ளையை தூக்கிக்கிட்டு குடுகுடுன்னு வடி வந்தா. நான் யாருன்னு போயி விசாரிச்சா ஒளிச்சு வச்சிருக்காங்கன்னு போட்டுக் கொடுக்கிறார்.
இதையெல்லாம் ஒரு பெண் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து எல்லோரும் கோவிலில் இருக்கின்றனர். அப்போது குணசேகரன் எங்களுக்கு மரியாதை என்றால் உங்களுக்கு பிரச்சனை தானே என்று வீட்டு பெண்களிடம் கேட்க அதற்கு நந்தினி தலையில அடித்துக் கொள்கிறார். அதே நேரத்தில் இன்னொரு பக்கத்தில் ஜீவானந்தத்தோடு ஈஸ்வரி வெண்பாவை பக்கத்தில் வைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் அந்தப் பக்கமாக கதிரும் வெளியே வருகிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது. அதே நேரத்தில் இந்த கோவில் திருவிழா காட்சிகள் இன்னும் எத்தனை மாதங்களுக்கு இழுக்க போகிறார்கள் என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications