எதிர்நீச்சல்: குணசேகரனுக்கு அதிர்ச்சி கொடுத்த வெண்பா.. பிரச்சனைக்கு முடிவு கட்டிய அப்பத்தா
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நவம்பர் எட்டாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் குணசேகரன் முன்பு வெண்பா ஈஸ்வரியை அம்மா என்று அழைக்க மொத்த குடும்பமும் அதிர்ச்சி ஆகின்றனர்.

அதைத்தொடர்ந்து அப்பத்தா தன்னுடைய சொத்து விஷயத்தில் தான் எடுத்திருக்கும் முடிவு பற்றி சொல்வதற்காக ஃபைலோடு பங்க்ஷனுக்கு வருகிறார். இந்த நிலையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் கோவில் திருவிழாவில் வைத்து குணசேகரன் ஜீவானந்தத்தை போட்டு தள்ள வேண்டும் என்ற முடிவில் அதற்கு தகுந்த ஏற்பாடுகளை செய்து வைத்திருக்கும் நிலையில் ஜீவானந்தமும் குணசேகரனையும், கதிரையும் போட்டுத்தள்ள வேண்டும் என்று துப்பாக்கியோடு அங்கு வந்திருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று குணசேகரனை சுட்டு விடலாம் என்று நினைத்திருந்த நேரத்தில் அங்கு வெண்பா வந்துவிட அதனால் பிளானை ஜீவானந்தம் தள்ளி வைத்திருக்கிறார். அதோடு வெண்பா எப்படி இங்கு வந்தா என்று குழப்பத்தில் இருந்த ஜீவானந்தத்திற்கு வெண்பா நான் ஈஸ்வரி அம்மாவை பார்க்க வேண்டும் என்று காய்ச்சலில் இருந்ததும், அதனால் தலையில் அடிபட்டு பர்ஹானா மூலமாக ஈஸ்வரியிடம் வந்து சேர்ந்தது முதலிய எல்லாவற்றையும் சொல்லி முடித்தார்.
அதை தொடர்ந்து ஜீவானந்தம் ஈஸ்வரியிடம் என்ன நீங்க குழந்தைகளை வச்சு கேம் விளையாடுறீங்களா? என்று சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் கேள்வி கேட்டு இருந்தார். அந்த நேரத்தில் அங்கு வந்த தர்ஷனும் தர்ஷினியும் ஜீவானந்தத்தை பார்த்ததும் நலம் விசாரித்துக் கொண்டு இருந்தனர். அப்போது தர்ஷினி நான் உங்களைப் பற்றி ரொம்பவே கேள்விப்பட்டு இருக்கேன்.
எங்களுக்கு இப்படி ஒரு அப்பா இல்லையே என நாங்க ஏங்கிப் போய் இருக்கோம். எனக்கு அப்பான்னு ஒருத்தர் இருக்காரு ஆனா அவரு இருந்தும் எங்களுக்கு அப்பா பாசம் கிடைக்கல. வெண்பா எங்க அம்மாவை அம்மானு கூப்பிடற மாதிரி நான் உங்கள அப்பானு கூப்பிடவா என்று கேட்டு ஜீவானந்தம் தோளில் சாய்ந்து அழுதார். அதை தொடர்ந்து ஜீவானந்தம் கோவிலுக்கு வந்திருந்ததை பார்த்த குணசேகரன் ஜீவானந்தத்தை பங்க்ஷனுக்கும் கூப்பிட்டு இருந்தார்.
அதோடு ஜீவானந்தத்தை பார்த்து பேசுவதற்காக தான் உனக்கு உடம்பு சரி இல்லை என்று பொய் சொன்னியா? என்று ஈஸ்வரியிடமும் குணசேகரன் கேள்வி கேட்டிருந்தார். இப்படியான நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் குணசேகரன், வெண்பா எங்க கூடவே இருக்கட்டும். நீங்க நாளைக்கு நடக்கும் ஃபங்ஷனுக்கு வாங்க என குணசேகரன் ஜீவானந்தத்தை அழைக்கிறார்
அதற்கு ஜீவானந்தமும் சரி என்று சொல்ல அப்போது குணசேகரன் வெண்பாவிடம் என்ன போலாமா என்று கேட்க, அப்போ அதற்கு வெண்பா ஈஸ்வரியை அம்மா என்று கூப்பிடுகிறார். அதற்கு குணசேகரன் என்னது அம்மாவா யாரு என்று கேட்க அதற்கு வெண்பா,ஈஸ்வரி அம்மாதான் என்று சொல்ல, சரிதான் என்று குணசேகரன் தலையாட்டுகிறார். பிறகு தனியாக சக்தி மற்றும் மருமகளிடம் ஜீவானந்தம் பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்போது நந்தினி இவ்வளவு நடந்தும் விட்டுட்டீங்களே சார் என்று ஜீவானந்தத்திடம் கேட்க, அதற்கு ஜீவானந்தம் குணசேகரன் என்னையும் விருந்தாளியாக கூப்பிட்டதுக்கும் ஒரு காரணம் இருக்கு, எல்லாம் தெரிஞ்சு இங்கே நான் வந்து இருக்கேன்னா அதுக்கும் ஒரு காரணம் இருக்கு என்று கூறுகிறார். அதைத்தொடர்ந்து அடுத்த நாள் பங்க்ஷனுக்கு எல்லோரும் தயாராக இருக்கும் நிலையில் அங்கு அனைவரும் ஜீவானந்தம் மற்றும் அப்பத்தாவுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது அப்பத்தாவோடு ஜீவானந்தம் பேக்கோடு வருகிறார். அப்பத்தா தன்னுடைய கையில் ஒரு பைலையும் வைத்துக்கொண்டு மேடைக்கு வருகிறார். இந்த நிலையில் என்ன நடக்கப்போகிறது என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். அதே நேரத்தில் இந்த கலவரத்தில் ஜீவானந்தத்தை பழிவாங்குவதற்காக குணசேகரன் ஜீவானந்தத்தின் மகள் வெண்பாவை கடத்தி வைத்துக்கொள்ள போகிறாரா?
அல்லது வெண்பாவை வைத்து மிரட்ட போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது.அதே நேரத்தில் இந்த பிரச்சனையில் குணசேகரனுக்கு ஏதோ ஒன்று ஆகப் போகிறது என்று தெரிகிறது. கதை படி அவர் ஜீவானந்தத்தால் சுடப்பட்டு ஹாஸ்பிடலில் இருப்பது போன்று இனி கதையை நகர்த்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காரணம் இப்போது குணசேகரனாக நடித்துவரும் வேலராமமூர்த்தி மீண்டும் சூட்டிங்கிற்கு பாரீசுக்கு கிளம்பி போயிருப்பதால் அவர் மருத்துவமனையில் இருப்பது போன்று காட்சிகளை கொண்டு போவார்களாக இருக்கும். அல்லது அப்பத்தாவை கொலை செய்துவிட்டு அந்த கொலை பழிக்காக போலீசில் குணசேகரன் இருப்பது போன்று கதையை கொண்டு போகப் போகிறார்களா? என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் என்ன நடக்கப்போகிறது என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications