எதிர்நீச்சல்: கையில் பத்திரத்தோடு வார்னிங் கொடுத்த அப்பத்தா.. சக்தி கேட்ட கேள்வியால் தலைகுனிந்த கதிர்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அக்டோபர் 13ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
அதில் வீட்டு மருமகளிடம் அப்பத்தா கையில் டாக்குமெண்ட் வைத்துக் கொண்டு நீங்க இதோட நிறுத்திடுங்கன்னு சொல்லிட்டு போகலாம்னு தான் வந்தேன் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அதே நேரத்தில் வீட்டிற்குள் வந்த கதிர் மற்றும் ஞானம் நாச்சியப்பன் எதற்காக வீட்டிற்கு வந்தார் என்று பிரச்சனை செய்ய அதற்கு சக்தி பதிலடி கொடுத்திருக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியலில் ஆரம்பத்திலிருந்து குணசேகருக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் இப்போது அவர் இல்லாமலேயே சீரியல் வேகமாக கதை பயணிக்க தொடங்கி இருக்கிறது. நேற்றைய எபிசோட்டில் குணசேகரன் போலீஸ் ஸ்டேஷனில் காவலில் இருக்கிறார் என்பது போன்று கதையை கொண்டு போய் இருக்கின்றனர்.
அதே நேரத்தில் குணசேகரன் வருவதற்குள் கோவில் திருவிழாவை நடத்தி அப்பத்தா மற்றும் ஜீவானந்தத்தை முடித்து விட வேண்டும் என்று கதிர் ஞானம் மற்றும் கரிகாலன் மூன்று பேரும் பிளான் போட்டுக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் வீட்டிற்கு வந்த நாச்சியப்பன் தன்னுடைய மகளுக்கு திருமணம் வைக்க போகிறேன். ஆனால் ஜனனி தன்னுடைய பேச்சை கேட்கவில்லை என்பதால் அவரை நான் என்னுடைய மகளாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஜனனி அவளுடைய வாழ்க்கையில் ஜெயித்துக் காட்டினால் நான் அவளுடைய காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு அவளை மகளாக ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்லியிருந்தார்.

ஜனனியும் தான் சீக்கிரமாக கம்பெனி தொடங்கப் போவது பற்றியும் அதற்கான தனக்கு லோன் கிடைத்துவிட்டது கம்பெனி திறப்பு விழா இன்விடேஷனை எங்க அப்பாவுக்கு அனுப்பிவை சக்தி என்று பேசியிருந்தார். அதைத்தொடர்ந்து இன்று எபிசோடுக்கு வெளியான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கதிர், ஞானம், கரிகாலன் மூன்று பேரும் வீட்டிற்கு வருகின்றனர்.
அப்போது சக்தி வீட்டு பெண்களோடு வாசல் படியில் அமர்ந்திருக்க அங்கு வரும் ஞானம் சக்தியிடம் இங்கு இருக்கிற பிரச்சனையில் அந்தாளு எதுக்குடா நம்ம வீட்டுக்கு வந்தாரு என்று நாச்சியப்பன் பற்றி திட்ட, அதற்கு சக்தி, "இங்க பாரு உன் கிட்ட இதை பத்தியெல்லாம் சொல்லுறதுக்கு தேவையும் இல்ல, அவசியமும் இல்லை நீ கெளம்பு" என்று சொல்ல இதைக் கேட்டு ஞானம் அதிர்ச்சி அடைய அதைக் கேட்டு கோபத்தில் கதிர் தலையை குனிகிறார்.

அதைத் தொடர்ந்து ஜான்சி ராணி கரிகாலனிடம் அண்ணன் எங்கடா அதை சொல்லுடா என்று கேட்க, அதற்கு கரிகாலன் விட முடியாதுன்னு சொல்லிட்டாங்க என்று சொல்ல, ஜான்சி ராணி அதிர்ச்சி அடைகிறார். அதை தொடர்ந்து வீட்டு மருமகள்கள் சக்தி, தர்ஷன், தர்ஷினி எல்லோரும் மாடியில் இருக்க அப்போது கையில் டாக்குமெண்டோடு நிற்கும் அப்பத்தா "தெளிவா எல்லாரும் ஒன்று புரிஞ்சுக்கோங்க. எல்லாரும் இதோட முடிச்சுக்கோங்கன்னு சொல்லுறதுக்காக தான் வந்தேன்" என்று சொல்ல, இதைக்கேட்டு வீட்டு மருமகள்கள் கோபத்தோடு அலட்சிய பார்வை பார்க்கின்றனர். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்து இருக்கிறது.

அதே நேரத்தில் எபிசோடில் ஜனனி அப்பாவை எதிர்த்து பேசியது சூப்பராக இருந்தது. வழக்கமாக அவர் வாயாலேயே வடை சுடுவது போன்று இல்லாமல் இப்பவாவது சாதித்து காட்டினால் குணசேகரன் இல்லாத வருத்தம் ரசிகர்களுக்கு ஏற்படாது. அதுபோல இன்றைய எபிசோட்டில் இதுவரைக்கும் டயலாக்கே இல்லாமல் நின்று கொண்டிருக்கும் சக்தி ஞானத்திடம் சாட்டையடி வசனங்களை பேசியது அருமையாக இருந்தது. அதுபோல இனி இவருக்கு அடிக்கடி பேச வாய்ப்பு கிடைத்தால் சீரியல் இன்னும் சூடு பிடிக்கும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications