எதிர்நீச்சல்: விசாலாட்சிக்கு வார்னிங் கொடுக்கும் மருமகள்கள்.. புது வில்லனால் மாறிப்போன கதை
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அக்டோபர் 17ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் வீட்டு குழந்தைகள் கரிகாலனையும் ஜான்சி ராணியும் அவமானப்படுத்தியதால் அதை தட்டிக் கேட்க விசாலாட்சி போக, அதற்கு நந்தினி மற்றும் ரேணுகா வார்னிங் கொடுக்கின்றனர்.

அதே நேரத்தில் ஜனனி சக்தி வாழ்க்கையில் புது வில்லனால் புது பிரச்சனை வந்திருக்கிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிகர் வேலராமமூர்த்தி அறிமுகமாகி சில தினங்களுக்குப் பிறகு இப்போது கதையில் வேகம் எடுத்து இருக்கிறது. ஆதி குணசேகரன் ஜெயிலில் இருக்கும் நிலையில் இனி கதை எப்படி பயணிக்க போகிறது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் இனி அடுத்ததாக மிகப்பெரிய ட்விஸ்ட் ஒன்றை வைத்திருக்கின்றனர்.
ஏற்கனவே ஜீவானந்தத்தின் மனைவியை கொலை செய்தது குணசேகரன் மற்றும் கதிர்தான் என்ற ரகசியம் கௌதம்மிற்க்கு தெரியும். ஆனால் இத்தனை நாட்களாக இந்த ரகசியம் ஜீவானந்தத்திற்கு தெரியாமல் இருந்தது. அதே நேரத்தில் தெரிந்தாலும் ஈஸ்வரிக்காக ஜீவானந்தம் தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்வாரா என்ற கேள்விகளும் இருந்தது.
ஆனால் நேற்றைய எபிசோடில், என்னுடைய மனைவி கயல்விழியை கொலை செய்த குணசேகரனையும் அவருடைய தம்பி கதிரையும் என் கையாலேயே கதையை முடிக்க போகிறேன் என்று ஈஸ்வரி இடமே ஜீவானந்தம் சபதம் போட்டிருந்தார். இந்த நிலையில் அப்பத்தா கதிர் கோயில் திருவிழாவை நடத்தும் அதே நாளில் அதே இடத்தில் தானும் பங்க்ஷன் நடத்தப் போகிறேன் என்று கூறியிருக்கிறார்.
அப்போது அதற்கு தலைமை வகிப்பதற்காக ஜீவானந்தம் வரும் நிலையில் அப்பத்தா தன்னுடைய சொத்து விஷயத்தில் முக்கியமான முடிவை எடுக்கப் போகிறார். ஆனால் அது அதே நேரத்தில் கதிரும் ஞானமும் சேர்ந்து ஜீவானந்தம் மற்றும் அப்பத்தாவை போட்டு தள்ள முடிவோடு இருக்கின்றனர். இந்த நிலையில் இனி என்ன நடக்க போகும் என்பது எதிர்பார்க்க முடியாது.
ஏற்கனவே ஆதிரை திருமணத்தில் கடைசி வரைக்கும் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தது நடக்காமல் திடீரென்று டுவிஸ்ட் ஏற்பட்டது. அதுபோல இப்போதும் எப்படி வேணும் என்றாலும் நடக்கலாம். இந்த நிலையில் இப்போது புதியதாக கிருஷ்ணா என்ற வில்லனும் அறிமுகமாகி சக்தி ஜனனி வாழ்க்கையில் பிரச்சனையை தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் அப்போது மாடியில் தாரா தர்ஷன், தர்ஷினி, ஐஸ்வர்யா என எல்லோரும் ஆதிரையிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது தாரா கரிகாலனையும் அவனோட அம்மாவையும் எனக்கு புடிக்கவே இல்லை என்று பேசிக் கொண்டிருக்க அங்கே மாடிப்படி ஏறி ஜான்சி ராணி வருகிறார். அவர் இதையெல்லாம் கேட்டும் விடுகிறார். அதைத் தொடர்ந்து கிருஷ்ணா கம்பெனிக்கு டாக்குமெண்டோடு சக்தியும் ஜனனியும் போகின்றனர்.
அங்கு ஜனனி, கிருஷ்ணாவிடம் என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க? உங்கள நான் வார்ன் பண்றேன். இதுக்கு பிறகு நான் லீகலா ஆக்சன் எடுப்பேன் என்று மிரட்ட அதற்கு கிருஷ்ணா முடிஞ்சா எடு என்று மிரட்டுகிறார். அதைத் தொடர்ந்து மாடியில் இருந்து கீழே வந்த ஜான்சி ராணி விசாலாட்சியிடம் நீங்க வாங்க எனக்கு ஒரு முடிவு சொல்லிட்டு போங்க என்று மாடிக்கு கூப்பிட, அதற்கு ரேணுகா அத்தை நீங்க போகாதீங்கன்னு சொல்லிட்டேன் என்று மிரட்டுகிறார். ஆனால் அதை கண்டு கொள்ளாமல் விசாலாட்சி மாடிக்கு போகிறார். இந்த நிலையில் என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பு அதிகரிக்க வைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications