குடும்பத்தை விட்டு பிரியும் ஈஸ்வரி.. துப்பாக்கியோடு மிரட்டும் வளவன்.. கதிருக்கு கிடைத்த அதிர்ச்சி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அக்டோபர் 21ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் எல்லோரும் கோவிலுக்கு கிளம்பி போகும் நேரத்தில் அவர்களுடன் இருந்து ஈஸ்வரி மட்டும் தனியாக கிளம்பி போகிறார்.

அதைத்தொடர்ந்து வளவன் கரிகாலன் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி கொண்டிருக்க அப்போது கரிகாலன் அலறிக் கொண்டிருக்கும் போது அங்கு கதிர் வந்து காப்பாற்றுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
அந்த வகையில் நேற்றைய எபிசோடில் ஜீவானந்தத்திடம் தங்களை நம்பிக்கொண்டிருந்த ஜீவானந்தத்திடம் அவருடைய மனைவியை குணசேகரனும், அவருடைய தம்பியும் கொலை செய்ததை பற்றி சொல்லாதது எவ்வளவு பெரிய தப்பு என்று புரிந்து கொண்ட ஈஸ்வரி கதறி அழுதார்.
காலையில் போன ஈஸ்வரி எங்கேயும் காணவில்லையே என்று தேடிக் கொண்டிருந்த வீட்டு மருமகள்களுக்கு வீட்டிற்கு வந்ததும் ஈஸ்வரி சொல்லி அழுததை கேட்கும்போது அதிர்ச்சியாக இருந்தது. அனைவரும் ஈஸ்வரிக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் வீட்டு குழந்தைகளிடம் விசாலாச்சி எப்பவும் போல பழைய பஞ்சாங்கத்தை பாட, அதற்கு தர்ஷினி, தர்ஷன், ஐஸ்வர்யா, தாரா என எல்லோருமே பதிலடி கொடுத்திருந்தனர்.
அதற்கு விசாலாட்சியும், கதிரும் பிள்ளைகளை சரியாக வளர்க்காமல் பேச வச்சு வேடிக்கை பார்க்குறாளுங்க என்று வீட்டு மருமகள்களை திட்டி இருந்தனர். அதைத் தொடர்ந்து கதிரும் கரிகாலனும் ஊருக்கு திருவிழா ஃபங்ஷனுக்கு போவதாக விசாலாட்சி இடம் சொல்லி கிளம்பி இருந்தனர். அப்போது ஊருக்கு போவதற்காக கிளம்பி இருந்த நந்தினி கரிகாலன் ஏதோ ஏற்பாடு செய்யப் போறோம் என்று சொன்னானே அது திருவிழா ஏற்பாடு தானா? இல்ல வேறு எதுவும் ஏற்பாடா? என்று கேட்க அதை கேட்டு கதிர் கோபத்தில் முறைத்தப்பட்டபடி நின்றார்.

அப்படியாக நேற்றைய எபிசோடு முடிவடைந்தது. அதை தொடர்ந்து இன்று வெளியான ப்ரோமோவில் எல்லோரும் கோவிலுக்கு கிளம்பி கொண்டிருக்கின்றனர். அப்போது ஜான்சி ராணி விசாலாட்சி இடம் உங்க சின்ன மகன் சத்தியை உங்க வீட்டு மருமகள்கள் வேலைக்காரனா தான் யூஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க. இப்ப கூட எல்லாருக்கும் டிரைவரா தான் கூட்டிட்டு போறாங்க என்று சிரிக்க அதை கேட்டு சக்தி கோபமாக நிற்கிறார்.
அதைத்தொடர்ந்து கரிகாலன் தலையில் வளவன் துப்பாக்கியை வைத்து கொண்டு நிற்கிறார். அப்போது கரிகாலன் யோவ்.. இதை கேட்டதற்காக இப்படி பண்ணுறா? எனக்கு ஃபர்ஸ்ட் நைட் கூட ஆகல என்ன சுட்டுராத என்று கத்தி கதறுகிறார். அப்போது ஓடி வந்து கதிர் வளவனிடம் இருந்து கரிகாலனை காப்பாற்றுகிறார். அதை தொடர்ந்து காரில் வீட்டு மருமகள்கள் எல்லோரும் போய்க்கொண்டிருக்கும் போது ஈஸ்வரி மட்டும் அவர்களிடம் இருந்து கிளம்பி தனியாக போகிறார்.

நந்தினியும் ஜனனியும் எங்கே போறீங்க என்று கேட்க ஈஸ்வரி ரகசியமாக பேசிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. ஏற்கனவே நேற்றைய எபிசோடில் ஜீவானந்தம் தன்னுடைய மகளிடம் சொல்லி விட்டு தான் ஒரு வாரம் கழித்து வருவதாக கூறிக்கொண்டு கிளம்பி இருந்தார். இந்த நிலையில் மீண்டும் ஈஸ்வரி ஜீவானந்தத்தை சந்திக்க போகிறாரா? என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. என்ன நடக்கப்போகிறது என்று இன்றைய எபிசோடில் பார்ப்போம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications