எதிர்நீச்சல்: வேல ராமமூர்த்தி வந்த முதல் நாளே இப்படியா ஆகணும்.. ஜனனியை விடுங்க, சக்திக்கு கஷ்டம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசோட்டில் குணசேகரன் ஆக நடிகர் வேல ராமமூர்த்தி அதிகாரப்பூர்வமாக அறிமுகமானார்.
அதில் வந்த முதல் நாளே போலீஸ்காரர்களை அவர் எட்டி உதைப்பது போன்று காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கிறது.

அதே நேரத்தில் நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் எபிசோட்டின் ஆரம்பத்தில் நந்தினியின் அப்பாவிடமும், ஈஸ்வரியின் அப்பாவிடமும் தன்னுடைய வீட்டு மருமகள்களால் தான் நிம்மதி இல்லாமல் இருப்பதாகவும் தன்னுடைய வீட்டு மருமகள்கள் தன்னுடைய குடியை கெடுக்க வந்தவர்கள் என்று அவதூறாக விசாலாட்சி பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்போது விசாலாட்சியின் பேச்சுக்கு நந்தினி பதிலுக்கு பதில் அடி கொடுத்துக்கொண்டே இருக்கிறார். அந்த நேரத்தில் உங்க பொண்ணு தாலியை கழட்ட போறேன்னு சொன்னா என்று நந்தினி அப்பாவிடம் விசாலாட்சி சொல்ல, அவர் என்ன நடந்தது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து நான் வீட்டு மருமகள்களிடம் நான் கொஞ்சம் இறங்கி போனது தான் தப்பு. அதனால் தான் என்னுடைய மகன் என்னை விட்டு போய்விட்டான். இனி நான் அப்படி நடந்துக்க மாட்டேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

அதே நேரத்தில் காட்டுப்பகுதிக்கு போலீஸ்காரர்களை கூட்டிட்டு வந்த கதிரும், ஞானமும் நாங்க இங்க தான் அண்ணனை கடைசியா பார்த்தோம். ஆனா இப்போ எங்க இருக்காருன்னு தெரியல என்று சொல்ல, அதற்கு போலீஸ்காரர்கள் நீங்க உண்மையை சொல்லிருங்க இல்லன்னா நடக்கிறதே வேற என்று மிரட்டி கொண்டிருக்கின்றனர். அப்போது சக்தி ஞானத்திடம் கதிர் தான் உண்மையை சொல்ல மாட்டேன் என்கிறான். நீயாவது சொல்லு என்று சொல்ல, உன் வேலையை பார்த்துட்டு போயிடு இத்தனை பிரச்சனைக்கும் காரணமே நீதான் என்று ஞானம் சத்தியை திட்டுகிறார்.

அதை தொடர்ந்த கதிர் திமிராக பேசுவதால் போலீஸ் ஆபீஸர் அவரை போட்டு அடிக்கின்றனர். கதிர் மற்றும் ஞானம் இருவரும் அடி வாங்குகின்றனர். அந்த நேரத்தில் குணசேகரன் ( ராமமூர்த்தி) மாஸாக காரில் இருந்து என்ட்ரி கொடுக்கிறார். தன்னுடைய தம்பிகள் அடி வாங்கும் போது, யார்ல என் தம்பியை அடிக்கிறது என்று என்று கேட்க, குணசேகரனை பார்த்ததும் ஞானம் மற்றும் கதிர் இருவரும் ஓடி வந்து அண்ணனை கட்டி அணைத்து கொள்கின்றனர். பிறகு எதுக்காக போலீஸ் உங்களை அடிக்கிறாங்க என்று கேட்க, நான் உன்னை கொன்னுட்டேன்னு சொல்லி இந்த சக்தியும் ஜனனியும் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க என்று கதிர் அழுகிறார்.
அதற்கு என்னுடைய தம்பிகள் என்று தெரிந்தும் உங்க மேல கை வச்சாங்களா? என்று குணசேகரன் ஓடிப்போய் போலீஸ் ஆஃபீஸர் நெஞ்சில் மிதிக்க ஞானமும் கதிரும் பங்குக்கு போலீஸ்காரர்களை அடிக்கின்றனர். பிறகு போலீஸ்காரர் குணசேகரனை மிரட்டுகிறார். தன்னை பற்றி கம்பளைண்ட் கொடுத்த சக்தியை இவன் இன்னமும் குழந்தை மாதிரி தான் இருக்கான் என்று சொல்லிக்கொண்டு வாயா சக்தி காரிலில் ஏறு வீட்டுக்கு போகலாம் என்று பாசமாக பேசுவது போன்று பேசிக்கொண்டு போகிறார்.

அதைத் தொடர்ந்து வீட்டில் நந்தினிக்கும் விசாலாட்சிக்கும் மீண்டும் வாக்குவாதம் நடைபெறுகிறது. அப்போது நந்தினி உங்க பையன் இன்னைக்கு வரட்டும் அவர்கிட்ட நான் இத்தனை நாளா இந்த வீட்டில் வேலை செஞ்சதுக்கு வாங்க வேண்டியதை வாங்கிட்டு போயிருவேன் என்று சொல்ல, அதற்கு விசாலாட்சி இன்னைக்கு என் பையன் வந்தாலும் உங்களை முடிச்சு பிரிச்சு விட்டுருவேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் காரில் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார். இப்படியாக நேற்றைய எபிசோடு முடிவடைந்தது.
அதே நேரத்தில் குணசேகரனாக இதுவரைக்கும் நடிகர் மாரிமுத்து நடித்து வந்த நேரத்தில் போலீஸ் ஆபீசர்களிடம் தகராறு செய்திருந்தாலும் இப்படி எட்டி மிதித்ததில்லை. ஜீவானந்தம் தன்னை கம்பெனியை விட்டு வெளியே துரத்தி அடித்தபோது கூட போலீஸ் ஆபீசர்கள் ஜீவானந்தத்திற்கு ஆதரவாக பேசுகிறபோது பயந்து கொண்டு தான் வந்திருந்தார். ஆனால் இப்போது வந்திருக்கும் ஆதி குணசேகரனாக வேலராமமூர்த்தி வந்த முதல் நாளில் போலீஸ் ஆபீசர்களின் நெஞ்சில் மிதித்தது இது அவருக்காக கொடுக்கும் ஓவர் பில்டப் என்பதே வெளிப்படையாக காட்டுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications