எதிர்நீச்சல்: மாரிமுத்து இடத்தில் வேலராமமூர்த்தி சொன்ன வார்த்தை.. ஈஸ்வரிக்கு வந்த பிரச்சனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அக்டோபர் 5ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

இதில் குணசேகரனிடம் ஜனனி அவருடைய கேரக்டர் குறித்து கேள்வி கேட்கிறார்.

அதே நேரத்தில் கோவத்தில் வீட்டிற்கு வரும் குணசேகரனிடம் கதிர், ஈஸ்வரி பற்றி போட்டுக் கொடுக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

Ethirneechal Serial 2023 October 5th promo and fans reaction

இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் எதிர்பார்த்தபடியே நேற்றைய எபிசோடில் குணசேகரன் கேரக்டரில் நடிகர் வேலராமமூர்த்தி என்ட்ரி ஆன முதல் நாளே அவருடைய மாசான காட்சிகள் வந்தது. குணசேகரனை கதிர் கொலை செய்து விட்டார் என்று சக்தியும் ஜனனியும் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருந்த நிலையில் அது குறித்த விசாரணை நேற்று நடைபெற்றது.

அப்போது குணசேகரனை காட்டுகிறேன் என்று ஒரு காட்டுப் பகுதியில் கதிர் மற்றும் ஞானம் போலீஸ் ஆபீசர்களை கூட்டிக்கொண்டு வந்திருந்தனர். அங்கு குணசேகரன் இல்லாததால் போலீஸ் ஆபீஸர்ஸ் கதிரிடம் விசாரணை செய்ய அதற்கு அவர் திமிராக பேசிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் போலீஸ் ஆபீஸர் கதிர் மற்றும் ஞானத்தை அடிக்க அங்கு குணசேகரன் காரில் வந்து கெத்தாக இறங்கினார். பிறகு போலீஸ்காரர்களை என்னுடைய தம்பிகளை அடிப்பியா என்று குணசேகரன் அடித்து இருந்தார்.

Ethirneechal Serial 2023 October 5th promo and fans reaction

அதற்குப் பிறகு குணசேகரன் சக்தி மற்றும் ஜனனியிடம் பாசமாக பேசுவது போன்று பேசி இருந்தார். அதே நேரத்தில் விசாலாட்சி நந்தினி மற்றும் ரேணுகாவை அவமானப்படுத்தி திட்டிக் என்னுடைய மகன் வந்ததும் உங்களை அறுத்துவிட்டு முடித்து விடுவேன் என்று மிரட்டிக் கொண்டு இருந்தார். அதற்கு நந்தினி உங்க மகன் வந்ததும் அவரிடம் சில கேள்விகளைக் கேட்டு விட்டு நாங்களே கிளம்பி போகிறோம். என்று கூறியிருந்தார்.

அதே நேரத்தில் இன்றைய எபிசோட்டுக்கான வெளியான ப்ரோமோவில் ஏற்கனவே குணசேகரன் தன்னுடைய தம்பிகளோடு சபதம் போட்ட அதே கோவிலில் வந்து கதிர் மற்றும் ஞானத்தோடு அமர்ந்திருக்கிறார். அப்போது அங்கு ஜனனியும் சக்தியும் நின்று கொண்டிருக்கின்றனர். ஜனனி குணசேகரன் இடம் மத்தவங்களை பற்றி நீங்கள் கவலைப்படுவதில்லலா? எல்லாமே உங்களுக்கு நடக்கணும்..! என்னைக்கு தான் மாறப் போறீங்களோ? என்று கேள்வி கேட்கிறார்.

Ethirneechal Serial 2023 October 5th promo and fans reaction

அதைத்தொடர்ந்து விசாலாட்சி சமையல் அறையில் இருக்கும் மருமகளிடம் மூத்தவன் வந்துருவான் அதுக்குள்ள அலங்காரம் பண்ணிட்டு கீழ வாங்க என்று சொல்ல, அதற்கு நந்தினி எங்களை என்ன பொண்ணு பார்க்கவா வராங்க என்று பதிலடி கொடுக்கிறார். அதைத்தொடர்ந்து காரில் குணசேகரன் வந்து கொண்டிருக்கும் போது அன்னைக்கு என்ன நடந்துச்சு தெரியுமா ஈஸ்வரி அண்ணி... என்று கதிர் பேசிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் கதிர் ஈஸ்வரி தன்னை அடித்ததை பற்றி சொல்லப் போகிறாரா? அல்லது ஈஸ்வரி காலேஜில் வேலை பார்ப்பதை பற்றி சொல்லப் போகிறாரா? என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் நடிகர் மாரிமுத்துவின் இடத்தில் நேற்றைய எபிசோடில் நடிகர் வேலு ராமமூர்த்தி அறிமுகம் ஆகி இருந்தாலும் அவரும் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிக்காட்டி இருக்கிறார். இன்றைய பிரமோவில் மாரிமுத்துவை போன்றே அவர் அமர்ந்திருந்த இடத்தில் கம்பீரமாக வேலராமமூர்த்தி அமர்ந்திருந்தது அதுபோல ஜனனியை கம்பீரமாக பார்த்தது பலரையும் கவர்ந்திருக்கிறது.

அதே நேரத்தில் குணசேகரன் கேரக்டரில் நடிகர் மாரிமுத்து நடித்து இருந்தது வேறு யாராலும் ஈடு செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் வேல ராமமூர்த்தி தன்னுடைய பெஸ்ட்டை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது பொறுத்து இருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+