எதிர்நீச்சலில் குணசேகரனாக மாரிமுத்து வரும் கடைசி காட்சி.. நந்தினியால் மாட்டிக்கொண்ட விசாலாட்சி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் செப்டம்பர் 11ம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் நந்தினி புதியதாக தொடங்கி இருக்கும் பிசினஸ் விஷயம் குணசேகரனுக்கு தெரிய வந்திருக்கிறது.

அதே நேரத்தில் குணசேகரன் ஆக நடிகர் மாரிமுத்து கடைசியாக நடித்த எபிசோடு இன்று வெளியாக இருக்கிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சன் டிவில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடித்த நடிகர் மாரிமுத்து சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்திருந்தார். இந்த நிலையில் அவர் கடைசியாக எதிர்நீச்சல் சீரியலில் நடித்துக் கொடுத்த எபிசோடு இன்று வெளியாக இருக்கிறது.
அதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் நந்தினி, ஜனனி கூட்டிட்டு வந்த காரில் தான் செய்த சாப்பாடு அனைத்தையும் ஏற்றிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் குணசேகரன், ஞானம் மற்றும் கதிரோடு காரில் வந்து இறங்கி விடுகிறார். அப்போது நந்தினியும் ஜனனி சக்தி மூவரும் சாப்பாடு பாத்திரங்களை முன்பு நிற்பதை பார்த்ததும் ஏதோ சோறாக்கி எடுத்துட்டு போற மாதிரி இருக்கு என்று குணசேகரன் கேள்வி கேட்கிறார்.

அதற்கு நந்தினி சும்மா கேள்வி கேட்டுக்கிட்டே இருக்காதுங்க, சாமி குத்தமா ஆகிடும் என்று சொல்ல, அதற்கு கதிர் அப்போ வா நானும் சேர்ந்து வருகிறேன் நாலு பேருமா சேர்ந்து போயிட்டு வந்துரலாம் என்று சொல்ல, அதற்கு நந்தினி நாலும், 40ம் மாமாவுக்கு சுத்தமா ஆகாது என்று சொல்ல, அதற்கு குணசேகரன் ஏய் மரியாதையா உண்மைய சொல்லிரு என்று மிரட்டுகிறார்.
அது தொடர்ந்து வீட்டுக்குள் வந்த குணசேகரன் டைனிங் ஹாலில் இருந்தபடி தன்னுடைய அம்மா விஷாலாட்சியிடம் சோத்த பொங்கி வீட்டு பொம்பளைங்கள எங்கேயோ அனுப்பி வச்சிருக்கு, அது என்ன ஏதுன்னு கேட்டு சொல்லுங்கப்பா என்று கேட்கிறார். அப்போது என்னவென்று புரியாத விசாலாட்சி திரு திருவென்று முழித்துக் கொண்டிருக்க, வெளியே நின்று கொண்டிருக்கும் ரேணுகாவும், ஈஸ்வரியும் விசாலாட்சியிடம் யாருக்கும் தெரியாமல் சைகை மொழியில் ஆமாம் என்று சொல்லும் படி சிக்னல் காமித்து கொண்டு இருக்கின்றனர்.

அதை ஒரு வழியாக புரிந்து கொண்ட விசாலாட்சி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்து இருக்கும் நிலையில குணசேகரன் ஆக மாரிமுத்து நடித்த கடைசி எபிசோடு இதுதான் என்று நடிகர் ஞானமாக நடிக்கும் கமலேஷ் இன்று பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். அதுவும் மாரிமுத்து இன்று கலகலப்பான ஜாலியான எபிசொட்டில் நடித்து முடித்து இருந்தார் என்றும் ஞானம் கூறியிருக்கும் நிலையில் இந்த எபிசோடுகாக ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications