எதிர்நீச்சல்: மீண்டும் மிரட்டிய குணசேகரன்.. ஆனால் “இதை” கவனிக்க மறந்துட்டாங்களே.. செம நடிப்பு
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆக நடித்து வந்த மாரிமுத்து கடந்த வாரம் காலமானார். ஆனால் அவர் மீண்டும் சீரியலில் நடிப்பது போன்று காட்சி அமைப்புகள் நேற்றைய எபிசோடில் இருந்தது.
அதே நேரத்தில் தர்ஷன் குணசேகரனை எதிர்த்து பேசியதால் கதிர் தர்ஷனை அடிக்க பாய்ந்து இருந்த நிலையில் தன்னுடைய மகனுக்காக அனைவரையும் எதிர்த்து பேசியிருந்தார்.

அதுபோல நேற்றைய எபிசோடில் சில சொதப்பல்களும் நடந்தது அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்து இறந்த பிறகு அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று பல ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர் அடுத்து யார் குணசேகரன் ஆக நடிக்கப் போகிறார்கள்? கதை எந்த மாதிரி போகப் போகிறது என்பது பலருடைய எதிர்பார்ப்பு. இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் மீண்டும் மாரிமுத்து வந்திருந்தார். அது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தது.
இந்த நிலையில் நேற்றைய எபிசோடு ஆரம்பத்தில் குணசேகரன் மாடியில் நின்று பார்ப்பது போன்று காட்சிகள் இருந்தது. இது ஏற்கனவே ஜனனி வீட்டை விட்டு வெளியே போகும் போது குணசேகரன் மாடியில் நின்று பார்த்த காட்சிகள் தான். ஆனால் நேற்றைய எபிசோட்டுக்கு அது தத்துரூபமாக ஆரம்பத்தில் பொருந்தி இருந்தது. அப்போது கீழே ஈஸ்வரிக்கு நந்தினி ஸ்வீட் கொடுக்க ஈஸ்வரியும் தர்ஷனும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்குள் இருந்து ஞானம் கதிர் வெளியே வந்தனர்.

ஆனால் நேற்று முன்தினம் வீட்டு வாசலில் நந்தினி ரேணுகாவுக்காக காத்துக் கொண்டிருக்கும் போது வீட்டில் இருக்கும் ஆம்பளைங்க யாரும் இல்லை என்று கூறியிருந்தார் அதுவும் குறிப்பிடத்தக்கது. ஆனால் நேற்றைய எபிசோட் ஆரம்பத்திலேயே வீட்டிற்குள் இருந்து ஞானமும், கதிரும் வெளியே வந்தனர்.. இதை பலரும் கவனித்தார்களா??? என்று தெரியவில்லை. அதே நேரத்தில் ஞானமும் கதிரும் நாங்க உனக்கு எத்தனை வாட்டி போன் பண்ணுனோம் அதை ஏன் நீ எடுக்கல? என்று கேட்கின்றனர். அப்போது தர்ஷன் நான் போனை சைலண்டில் போட்டு இருந்தேன். அதனால எடுக்கல என்று சொல்லி இருந்தார்.
அதற்கு நீ பொய் சொல்கிறாய் என்று கதிர் தர்ஷனிடம் சண்டை போடும் போது ஞானம் ஏன் நீ காலேஜ் ஃபீஸ் கட்டவில்லை என்று கேட்க, எனக்கு அந்த ஆளு பணத்தில் பீஸ் கட்ட பிடிக்கல. அதனாலதான் என்று தர்ஷன் சொன்னதும் யாரை பார்த்து அந்தாளு இருந்தாளு என்று பேசுர கதிர் தர்ஷனை அடிக்க போகிறார். அப்போதும் குணசேகரன் மாடியில் இருந்து பார்க்கிறார். ஆனால் அதற்குப் பிறகு சண்டை நடந்து கொண்டிருக்கிறது. அப்போது மாடி காட்சிகள் தெரிகிறது. ஆனால் அந்த இடம் அங்கே வெறுமையாக இருக்கிறது. அதை கவனித்து காட்சி எடுத்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
அதைத் தொடர்ந்து ஈஸ்வரி என்னுடைய மகனை அடிக்கிறதுக்கு இந்த வீட்டில யாருக்கும் உரிமை இல்லை என்று திட்டியதால் கதிர் எங்க அண்ணன் காசில் வாங்கிய பொருள்களை எல்லாம் கொடு என்று தர்ஷனிடம் இருந்த போன், வாட்ச், கழுத்தில் மாட்டி இருந்த செயின், பைக் சாவி என எல்லாத்தையும் வாங்கிக் கொண்டார் அதை தொடர்ந்து ஈஸ்வரி தர்ஷனுக்கு புது பைக் வாங்கி கொடுத்தார் இப்படியாக சீரியல் போய்க் கொண்டிருந்தது.
அதே நேரத்தில் மாரிமுத்து இறந்த பிறகு அவருடைய காட்சிகளை வைத்து எதற்காக சீரியலில் காட்டுகிறார்கள்? டிஆர்பிக்காக இப்படியும் கூடவா செய்வார்கள் என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதே நேரத்தில் பொதுவாக சீரியல்கள் என்பது டிஆர்பிஐ மையமாக கொண்டுதானே ஒளிபரப்பாகி வருகிறது? அதில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி நேற்று மீண்டும் குணசேகரன் ஆக மாரிமுத்து வந்தது அனைவருக்கும் சந்தோஷத்தை கொடுத்தது. ஒரு விதத்தில் பயத்தையும் கொடுத்ததாக பலர் கருத்து கூறி வருகின்றனர்.
இப்படியாக இருக்கையில் குணசேகரனுடைய காட்சிகள் இடையிடையே வந்தாலும் அது சிறப்பாக இருந்தது. அதே நேரத்தில் ஈஸ்வரி கதிரோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போது மொத்த வீடும் கவராகி இருக்கிறது. அப்போதுதான் அங்கே குணசேகரன் இல்லை என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. அதனால் அதை மட்டும் சரியாக கவனித்து போக்கஸ் செய்து வீடியோ எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்..
ரசிகர்களுக்கும் முழுமையாக குணசேகரன் நிற்பது போன்று ஒரு திருப்தி கிடைத்திருக்கும். இதை மட்டும் சரியாக கவனித்திருக்கலாம் நன்றாக இருந்திருக்கும் ஆனாலும் நேற்றைய எபிசோடில் அம்மா மகன் பாசம் எதிர்பார்க்காத வகையில் சிறப்பாகவே இருந்தது.












Click it and Unblock the Notifications